‘வாகன உரிமைச் சான்றிதழ் கட்டணம் அதிகமாக இருக்கும்’

சில பிரிவுகளில் இம்­மா­தம் வாகன உரி­மைச் சான்­றி­தழ் கட்­ட­ணம் தொடர்ந்து அதி­க­மா­கப் பதி­வா­கும் என்று வாகன வர்த்­த­கர்­கள் எதிர்­பார்க்­கின்­ற­னர்.

இம்­மா­தத்­திற்­கும் வரும் ஜூலை மாதத்­திற்­கும் இடைப்­பட்ட காலத்­தில் கூடு­தல் வாகன உரிமைச் சான்றி­தழ்­கள் வழங்­கப்­ப­ட­வி­ருக்­கின்­றன. அப்­ப­டி­யி­ருந்­தும் இந்­நிலை உரு­வா­கலாம் என்­பது அவர்­க­ளின் கருத்து.

இம்­மா­தத்­திற்­கான வாகன உரி­மைச் சான்­றி­தழ் ஏலக் குத்­த­கை­யில் மின்­சார வாக­னங்­க­ளுக்­கான சான்­றி­தழ்களும் அடங்கும். அத­னால் கூடு­தல் சான்­றி­தழ்­கள் வழங்­கப்­ப­ட­வுள்­ளன.

1,600 சிசி அல்­லது அதற்­கும் குறை­வான கொள்­ள­ள­வு உள்ள வாக­னங்­க­ளுக்­கான 'ஏ' பிரி­வில் இடம்பெற 148 'பிஹெச்பி' வரை சக்­தி­கொண்ட மின்­சார வாக­னங்­கள் தகு­தி­பெ­றும்.

குறை­வான வாகன உரி­மைச் சான்­றி­தழ் கட்­ட­ணம் செலுத்­த­வேண்­டிய பிரி­வில் மின்­சார வாக­னங்­க­ளைச் சேர்த்து அவற்றை வாங்­கு­மாறு மக்­களை ஊக்­கு­விப்­பது இலக்கு.

அதனால் ஏ பிரி­வில் 14.3 விழுக்­காடு கூடு­தல் சான்­றி­தழ்­கள் வழங்­கப்­படும். கட்­ட­ணமும் குறையலாம்.

ஆனால், பெரிய வாகனங்களுக்கு வழங்கப்படும் சான்றிதழ்கள் 4.2 விழுக்காடு குறைக்கப்படுகின்றன. ஆகையால் அவற்றுக்கான வாகன உரிமைச் சான்றிதழ் கட்டணம் அதிகமாகவே இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!