தென்கிழக்காசியாவிலேயே முதன்முறையாக அமைக்கப்பட்ட சிங்கப்பூரின் புதிய $5 மி. ‘ஆக்மெண்டட் ரியாலிட்டி’ கூடம்

உள்­ளூர் ஊட­கத் தொழில்­நுட்ப நிறு­வ­ன­மான 'ஓஷ­னஸ் மீடியா குளோ­பல்' (ஓஎம்ஜி), 'ஆக்­மெண்­டட் ரியா­லிட்டி' போன்ற அதி­ந­வீ­னத் தொழில்­நுட்ப அம்­சங்­க­ளு­டன் புதிய தயா­ரிப்­புக் கூடம் ஒன்­றைத் திறந்­துள்­ளது.

உபி ரோட்­டில் $5 மில்­லி­யன் மதிப்­பில் இந்­தக் கூடம் அமைக்­கப்­பட்­டுள்­ளது. இதன் சுவர்­களில் தத்­ரூ­ப­மான பின்­ன­ணிக் காட்சி­களைக் கொண்ட 'எல்­இடி' பேனல்­கள் பொருத்­தப்­பட்­டுள்­ளன.

இத­னால், 'எல்­இடி' சுவர் முன்­னால் நிற்­கும் ஒரு­வர், அந்த மெய்­நி­கர் பின்­ன­ணிக் காட்­சி­யில் நிற்­பது போன்று காட்­சி­ய­ளிப்­பார்.

உண­வுத் தொழில்­நுட்ப வர்த்­த­க­மான 'ஓஷ­னஸ் குரூப்'பின் கீழ் துணை நிறு­வ­ன­மாக 'ஓஎம்ஜி' இயங்கி வரு­கிறது.

மாநா­டு­கள், பயிற்சி வகுப்­பு­கள், நேரடி கேளிக்கை நிகழ்ச்­சி­கள், திரைப்­ப­டம், தொலைக்­காட்சி, இசைக் காணொ­ளித் தயா­ரிப்­பு­கள் போன்ற பல்­வேறு ஊட­கத் தயா­ரிப்­பு­க­ளுக்கு இந்­தத் தொழில்­நுட்­பம் உத­வும் என்று ஓஎம்­ஜி­யின் தலைமை நிர்­வாகி நிக் டான் நேற்று கூறி­னார்.

இவ்­வகை கூடம் தென்­கி­ழக்­கா­சி­யா­வி­லேயே முதன்­மு­த­லாக அமைக்­கப்­பட்­டுள்­ளது என்­றும் அவர் குறிப்­பிட்­டார்.

எதிர்­கா­லம் சார்ந்த ஓர் யதார்த்த அனு­ப­வத்­தைத் தங்­கள் கூடத்­தின் வழி­யாக பெற­லாம் என்­றார் அவர்.

உள்­ளூர் தொலைக்­காட்­சித் தொடர், உள்­ளூர் இசைக் கலை­ஞரின் இசைக் காணொளி ஆகிய தயா­ரிப்­பு­கள் தொடர்­பில் நிறு­வ­னம் பல வாடிக்­கை­யா­ளர்­க­ளு­டன் பேசி வரு­வ­தா­கக் கூறப்­பட்­டது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!