விரிவுபடுத்தப்படும் ‘ஆக்டிவ் கம்யூட்’ மானியம்

நடந்தோ சைக்­கி­ளிலோ வேலை­யி­டத்­துக்­குச் செல்­வோரை ஊக்­கு­விக்­கும் வண்­ணம் வேலை­யி­டங்­களில் அவர்­க­ளுக்­கான வச­தி­களை அமைத்­துத் தரும் நிறு­வ­னங்­க­ளுக்கு நிலப் போக்­கு­வ­ரத்து ஆணை­யம் 'ஆக்­டிவ் கம்­யூட்' மானி­யத்தை வழங்­கி­வ­ரு­கிறது.

2017ஆம் ஆண்டு அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்ட இந்த மானி­யம் வேலை­யி­டங்­களில் குளி­ய­லறை, உடை மாற்­றும் அறை, பொருள்­க­ளுக்­கான பாது­காப்­புப் பெட்­ட­கங்­கள் ஆகி­ய­வற்றை அமைப்­ப­தற்கு நிறு­வ­னங்­க­ளுக்கு உத­வு­கிறது.

இப்­போது இந்த மானி­யத் திட்­டம், ரயில் நிலை­யங்­க­ளைச் சுற்றி 400 மீட்­டர் தொலை­வில் அமைந்­துள்ள சில்­லறை விற்­ப­னைக் கடை­க­ளுக்­கும் விரி­வு­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது. ஆணை­யம் நேற்று இத­னைத் தெரி­வித்­தது.

குளி­ய­லறை, உடை மாற்­றும் அறை, பொருள்­க­ளுக்­கான பாது­காப்­புப் பெட்­ட­கங்­கள் போன்­றவை நடந்தோ ஓடியோ சைக்­கிள் மூல­மா­கவோ வேலைக்­குச் செல்­வதை ஊக்­கு­விப்­ப­தில் முக்­கி­யத்­து­வம் பெறு­வ­தாக ஆணை­யம் குறிப்­பிட்­டது.

இது­வரை அலு­வ­ல­கங்­கள், வர்த்­த­கப் பூங்­காக்­கள், தொழில்­து­றைக் கட்­ட­டங்­கள் ஆகி­யவை மட்­டுமே இந்த மானி­யத்­தைப் பெற்­று­வந்­தன.

இதன்­கீழ் மொத்­தம் 14 வளா­கங்­கள் பல­ன­டைந்­த­தா­கத் தெரி­விக்­கப்­பட்­டது.

இனி சில்லறை விற்பனைக்கான கட்டடங்களில் பாதுகாப்புப் பெட்டகம், சைக்கிள் நிறுத்துமிடம் ஆகியவற்றைக் கட்ட இந்த மானியத்திற்கு விண்ணப்பிக்கலாம்.

இருப்பினும் குளியலறை வசதிக்கு இவர்கள் விண்ணப்பிக்க இயலாது.

கட்­டு­மா­னச் செல­வில் 80% வரையோ அதி­க­பட்­சம் 80,000 வெள்ளி வரையோ ஆணை­யம் மானி­ய­மாக வழங்­கும்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!