பல அம்சங்களுடன் புதிய தத்தெடுப்புச் சட்டம்

நாடா­ளு­மன்­றத்­தில் நாளை திங்­கட்­கி­ழமை பிள்­ளை­கள் தத்­தெடுப்புச் சட்­டம் 2022 இரண்­டா­வது வாசிப்­புக்கு வரு­கிறது.

அந்­தச் சட்­டத்­திற்கு முக்­கியமான ஒரு யோசனை முன்­மொ­ழி­யப்­பட்­டுள்­ளது.

ஒரு பிள்­ளை­யின் பெற்­றோர் இரு­வ­ரும் பிள்­ளை­யைத் தத்து கொடுக்க இணங்­கும்­படி கேட்டு நீதி­மன்­றம் உத்­த­ர­வி­டக்­கூ­டிய வகையில் மேலும் பல அம்­சங்­களைக் குறிப்­பிட்டு அதன் மூலம் பிள்­ளை­கள் கொடு­மைக்கு ஆளா­வ­தை­யும் அலட்­சி­யப்­ப­டுத்­தப்­ப­டு­வ­தை­யும் தடுப்­பது அந்த யோச­னை­யின் நோக்­கம் என்று தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

பிள்­ளை­யைத் தத்­துக் கொடுக்க இணக்­கம் தெரி­விக்­கக்­கூ­டிய உத்­தேச அடிப்­ப­டை­களை­யும் சூழல்­க­ளை­யும் புதிய மசோதா தெளி­வு­ப­டுத்­து­கிறது.

தத்து எடுத்­துக்­கொள்ள விரும்­பும் தம்­ப­தி­யர் தத்­தெ­டுப்­புச் சட்­டத்­தி­லும் நடைமுறை­க­ளி­லும் அதி­க­மான மாற்­றங்­களை எதிர்பார்க்­க­லாம் என்­றும் தெரிய வந்­துள்­ளது.

அர­சாங்­கப் பர­ர­ம­ரிப்­பில் உள்ள பிள்­ளை­க­ளின் பெற்­றோர் தங்கள் பிள்­ளை­க­ளைக் கொடுமைப்­படுத்தி இருக்­கக்கூடும் அல்­லது அலட்­சி­யப்­ப­டுத்தி இருக்­க­லாம். அதற்­குப் பல்­வேறு கார­ணங்­கள் இருக்­கக்­கூ­டும்.

சமு­தாய, குடும்ப மேம்­பாட்டு அமைச்­சில் தத்­தெ­டுப்­புப் பொறுப்பு அதி­காரி ஒரு­வர் இருக்­கி­றார். அவர் பிள்ளையின் நலன்­க­ளைப் பாது­காப்­ப­வர்.

நீண்டகாலப் போக்­கில் தங்­கள் பிள்­ளை­யைப் பெற்­றோர் பரா­ம­ரிக்க முடி­யுமா அல்­லது பிள்­ளை­யைத் தத்து கொடுப்­ப­து­தான் பிள்­ளைக்கு நலன்­ அளிப்பதாக இருக்­குமா என்­பதை அந்த அதி­காரி முடிவு செய்­வார்.

பெற்­றோர் சம்­ம­தத்­து­டன் பிள்ளை­யைத் தத்து கொடுப்­ப­தற்­கான நிபந்­த­னை­கள் நிறை­வேற்­றப்­பட்டு இருந்­தால் அவ்­வாறு செய்­ய­லாம் என்று நீதி­மன்­றத்­திற்கு அவர் பரிந்­து­ரைப்­பார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!