இளை­ய­ரும் புத்­தாக்­கமும்: பல கோணங்களில் ஆராய்ந்த மாநாடு

இளை­யர்­கள் சமு­தா­யத்­திற்கு ஆற்­றும் பணி­யில் புத்­தாக்க அம்­சங்­கள் எவ்­வாறு கையா­ளப்­ப­டு­கின்­றன என்­பது குறித்து சிங்­கப்­பூர்த் தமிழ் இளை­யர் மன்­றம் வழங்­கிய மெய்­நி­கர் ஆய்­வ­ரங்க மாநாடு ஆராய்ந்­தது. மொழி, சுற்­றுச்­சூ­ழல், மன­ந­லப் பரா­மரிப்பு, தொழில்­நுட்­பம் முத­லி­யவை கருப்­பொ­ருள்­க­ளாக இடம்­பெற்­றன.

 

வர்த்தகத்தில் புத்தாக்கம்

 

'ஸ்டை­லுக்கு ஸ்ரீ' என்ற தலைப்­பில் கட்­டுரை படைத்த திரு­மதி சுவப்­னாஸ்ரீ ஆனந்த், தனது வர்த்­த­கத்­தொ­ழி­லான 'ஸ்ரீ'யின் பின்­ன­ணியை விளக்­கி­னார். பழைய அணி­க­லன்­க­ளுக்­குப் புது­வ­டி­வம் தரு­வது, அவ­ர­வ­ரின் விருப்­பத்­துக்கு ஏற்ப அணி­க­லன்­க­ளைப் படைப்­புத்­தி­ற­னு­டன் வடி­வ­மைப்­பது முத­லி­யவை புத்­தாக்­கச் சிந்­த­னை­கள் என்று அவர் குறிப்­பிட்­டார்.

வேறு­பட்ட கண்­ணோட்­டத்­தில், 'காலம் காட்­டும் இளை­ய­ரின் புத்­தாக்­கம்' என்ற தலைப்­பில் நான்கு சிங்­கப்­பூர்த் தமி­ழர்­களின் சமூ­கப் பணி குறித்­துப் படைத்­த­னர் நான்கு இளை­யர்­கள். மறைந்த திரு­மதி சாந்தா பாஸ்­க­ரின் வாழ்க்­கைப் பய­ணம், பங்­க­ளிப்­பு­கள், சாத­னை­கள் பற்றிய ஓர் அங்­கமும் ஏற்­பாடு செய்­யப்­பட்­டது.

 

மின்னிலக்க உலகில் தமிழ்மொழி

 

கணி­னித்­த­மிழ் தொடர்­பில் 'நான்­காம் தமிழ்' என்ற தலைப்­பில் படைத்த முனை­வர் ச. ஜாஸ்­லின் பிரி­சில்டா, மென்­பொருள் தயா­ரிப்­பி­லும் இயந்­தி­ரக்­கு­றி­யீட்டு மொழி­க­ளைத் தமி­ழில் உரு­வாக்­கு­வ­தி­லும் கவ­னம் செலுத்­தி­னால்­தான் தமிழை நிலை­நி­றுத்த முடி­யும் என்று குறிப்­பிட்­டார்.

சிங்­கப்­பூ­ரில் கண்­டு­பி­டிக்­கப்­பட்ட 'கணி­யன்' மென்­பொ­ருள் முதல் 'சரஸ்­வதி', 'பல்­லா­டம்', 'அணங்கு', என உல­கெங்­கி­லும் பல தமி­ழர்­கள் உரு­வாக்­கிய மென்­பொ­ருள்­க­ளை­யும் அவர் சுட்­டி­னார்.

வள்­ளு­வ­ரும் பார­தி­யும்­கூட பொழு­து­போக்­கின் அவ­சி­யத்தை வலி­யு­றுத்­தி­யுள்­ள­தா­கக் கூறிய செல்­வன் ஸ்ரீவி­காஷ், கொவிட்-19 சூழ­லில் எதிர்­பாரா வகை­யில் மீண்­டும் புகழ்­பெற்ற பாரம்­ப­ரிய விளை­யாட்­டு­க­ளைச் சுட்டி, அவற்றை இளை­யர்­கள் மின்­னி­லக்க முறைக்கு மாற்றி புதுமை செய்­துள்­ளதை முன்­வைத்­தார்.

 

ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தல்

 

தமிழ் மாண­வர்­க­ளின் உள்­ள­டக்க அறிவை (content knowledge) மேம்­ப­டுத்­து­வது குறித்து முனை­வர் சீதா­ லட்­சுமி, செல்வி கீர்த்­தன ரத்னா ஆகிய இரு­வ­ரும் ஆராய்ந்­த­னர்.

புதிய சொற்­களை ஆசி­ரி­யர்­கள் மாண­வர்­க­ளுக்கு அறி­மு­கப்­ப­டுத்­தும்­போது சொற்­க­ளின் பொருளை மட்­டும் கூறா­மல் இன்­னும் ஆழ­மாக விளக்­கு­வது மாண­வர்­க­ளின் பண்­பாட்­டுத்­தி­றன்­களை மேம்­படுத்­திக்­கொள்ள உத­வும் என்­ற­னர். தேர்­வுக்கு மட்­டு­மின்றி வாழ்க்­கைக்கு அது எவ்­வாறு உத­வும் என்ற நிலை­யில் அமை­யும் அறிவு என்று பொருள் கொள்­வோம்.

ஆய்­வ­ரங்­கில் ஜாமி­யா­வின் துணைத் தலை­வர் முனை­வர் முக­மது சலீம், 'அவாண்ட் தியேட்­டர்' நிறு­வ­ன­ரும் கலை இயக்­கு­ந­ரு­மான திரு கணே­சன் செல்­வா­னந்­தம் ஆகி­யோர் கலந்­து­கொண்டனர்.

"அறிவு சார்ந்த செய்­தி­க­ளை­யும் சிந்­த­னை­க­ளை­யும் ஊக்­கு­விக்­கும் தள­மாக இந்த ஆய்­வ­ரங்க மாநாடு விளங்­கு­கிறது. எதிர்­கா­லத்­தைத் தாங்­கிப் பிடிக்­கும் இளை­யர்­க­ளைப் பற்றி ஆரா­யக்­கூ­டிய நல்ல வாய்ப்பை இந்­நி­கழ்வு வழங்­கி­யுள்­ளது," என்­றார் முனை­வர் எச். முக­மது சலீம்.

கொவிட்-19 சூழ­ல் விடுத்த சவால்­கள் இளை­ய­ரின் புத்­தாக்­கச் சிந்­த­னை­யைப் பல அம்சங்ளில் ஊக்­கு­வித்­துள்­ள­தாக திரு கணே­சன் செல்­வா­னந்­தம் குறிப்­பிட்­டார்.

"பேசு­வ­தை­விட, தமிழ் சிந்­த­னை­யா­ளர்­கள் எழு­தி­னால்­தான் தமிழ்­மொழி வாழும் மொழி­யாக நிலைத்­தி­ருக்­கும் என்ற அடிப்­படை­யில் இந்த மாநாடு ஏற்­பாடு செய்­யப்­பட்­டது," என்­றார் சிங்­கப்­பூர்த் தமிழ் இளை­யர் மன்­றத்­தின் மதி­யு­ரை­ஞர் முனை­வர் அ. வீர­மணி. படைக்­கப்­பட்ட கட்­டு­ரை­களை நூலா­கத் தொகுத்து வெளி­யி­டும் திட்­டம் இருப்­ப­தா­க­வும் அவர் கூறி­னார்.

 

செய்தி: ஆ. விஷ்ணு வர்­தினி

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!