அமைச்சர் ஓங்: டிரேஸ்டுகெதரை அப்புறப்படுத்தவேண்டாம்

டிரேஸ்டுகெதரை தற்போதைக்கு அப்புறப்படுத்தவேண்டாம் என்று சுகாதார அமைச்சர் ஓங் யீ காங் கூறியுள்ளார்.

டிரேஸ்டுகெதர் சாதனம், செயலி இரண்டுக்கும் இது பொருந்தும்.

"நாம் கவனமாக நடந்துகொள்கிறோம், நமது பொதுச் சுகாதாரக் கட்டுப்பாடுகளைத் தளர்த்துகிறோம், ஆனால் விலக்கவில்லை," என்று திரு ஓங் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

கிருமிப்பரவல் நிலைமை எவ்வளவு மோசமாக இருக்கிறது என்பதைக் கருத்தில்கொண்டு மீண்டும் கட்டுப்பாடுகளை முடுக்கிவிடுவது குறித்து முடிவெடுக்கப்படும் என்று அவர் குறிப்பிட்டார்.

கவனிக்கப்படவேண்டிய புதிய வகை கொவிட்-19 கிருமி தலைதூக்கினாலோ அந்தக் கிருமி ஓமிக்ரானைவிட மோசமாக நோய்வாய்ப்பட வைக்கக்கூடிய தன்மை அல்லது வேகமாக அதிகமானோருக்குப் பரவும் ஆற்றல் இருந்தாலோ கட்டுப்பாடுகளை முடுக்கிவிடுவது குறித்து ஆராயப்படும்.

மக்களுக்கு முன்னதாக ஏற்பட்ட கொவிட்-19 கிருமித்தொற்று, அவர்களு்ககுப் போடப்பட்ட தடுப்பூசிகள் ஆகியவை புதிய வகை கொவிட்-19 கிருமிக்கு எதிராக எவ்வளவு பாதுகாப்பை வழங்குகின்றன, சிங்கப்பூர் மருத்துவமனைகளின் கொள்ளளவு போன்ற அம்சங்களும் கருத்தில்கொள்ளப்படும்.

தொடர்புகளின் தடங்களை அறிய பயன்படுத்தப்படும் டிரேஸ்டுகெதர், சேஃப்என்ட்ரி ஆகிய முறைகளை மீண்டும் நடைமுறைப்படுத்துவதற்கான வழிமுறைகள் வரையப்படுமா என்று நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குப் பதிலளித்த திரு ஓங், கொள்ளைநோய்ப் பரவல் காலத்தில் இந்த விவகாரத்தின் தொடர்பில் தெளிவான வழிமுறைகளை வரையமுடியாது என்று கூறினார்.

உயிர்களைப் பாதுகாக்க அரசாங்கம் தேவையான நடவடிக்கைகளை எடுக்கும் என்றும் தேவைப்படாதபோது அது கட்டுப்பாடுகளைத் தளர்த்தும் என்றும் அமைச்சர் ஓங் குறிப்பிட்டார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!