வேலையிடப் பாதுகாப்பில் கவனம் செலுத்துக: பிரதமர்

சிங்­கப்­பூ­ரில் இவ்­வாண்­டில் வேலை­யி­டங்­களில் நிகழ்ந்த மர­ணங்­கள் ஆக அதி­கம் என்­றும் இது ஏற்­றுக்­கொள்ள இய­லாத அளவு என்­றும் பிர­த­மர் லீ சியன் லூங் தமது ஃபேஸ்புக் பதி­வில் குறிப்­பிட்­டுள்­ளார்.

இந்த ஆண்­டின் ஜன­வரி 1ஆம் தேதி முதல் மே 6ஆம் தேதி வரை­யில் 20 வேலை­யிட மர­ணங்­கள் நிகழ்ந்­தன.

அடிப்­ப­டைப் பாது­காப்பு மற்­றும் உடல்­நல நட­வ­டிக்­கை­கள் மூலம் இவற்­றில் பெரும்­பா­லான மர­ணங்­க­ளைத் தவிர்த்­தி­ருக்க முடி­யும் என்­றும் மனி­த­வள அமைச்­சும் வேலை­யிட பாது­காப்பு, சுகா­தார மன்­ற­மும் ஞாயிற்­றுக்­கி­ழமை கூட்­டா­கத் தெரி­வித்து இருந்­தன.

இந்த மரண எண்­ணிக்கை 2016ஆம் ஆண்டு இதே கால­கட்­டத்­தில் நிகழ்ந்­த­தைக் காட்­டி­லும் ஆக அதி­கம்.

குறிப்­பாக, ஏப்­ரல் மாதத்­தில் மட்­டும் 10 வேலை­யிட மர­ணங்­கள் பதி­வாகி உள்­ளன. இது ஆக அதி­கம் என்று திரு லீ குறிப்­பிட்டு உள்­ளார்.

"வேலை­யிட விபத்­து­களை, குறிப்­பாக மர­ணங்­க­ளைத் தவிர்க்க நாம் ஆண்­டாண்டு கால­மா­கப் பாடு­பட்டு வந்­தி­ருக்­கி­றோம். அதில் நாம் முன்­னேற்­ற­மும் கண்­டி­ருக்­கி­றோம்.

"இருந்­த­போ­தி­லும் நமது பொரு­ளி­யல் நட­வ­டிக்­கை­கள் மறு­ப­டி­யும் வேக­மா­கச் செய­லா­ற்­றத் தொடங்கி உள்ள நிலை­யில், பாது­காப்­புத் தர­நி­லை­களும் நடை­மு­றை­ப் பழக்க வழக்கங்களும் கைந­ழு­விப்­போ­னது போலத் தோன்­று­கிறது.

"விபத்­து­க­ளின் விகி­தம் அதி­க­ரித்துள்­ளது, நாம் அடிப்­படை பாது­காப்பு அம்­சங்­க­ளைத் தவ­ற­விட்­டு­விட்­டோம். இது சரிசெய்யப்பட வேண்டும்," என்று பிர­த­மர் தமது பதி­வில் கூறி­யுள்­ளார்.

வேலை­யிட மர­ணங்­க­ளின் அதி­க­ரிப்­பைத் தொடர்ந்து, நேற்று (மே 9) முதல் இருவார காலத்­துக்கு பாதுகாப்புக்கு நேரம் ஒதுக்கி அதற்கான நடை­மு­றை­களில் கவ­னம் செலுத்­து­மாறு நிறு­வ­னங்­கள் வலி­யு­றுத்­தப்­பட்டு உள்­ளன.

பல்­வேறு தொழில் நிறு­வ­னங்­களில் அதி­க­மான வேலை­யிட மர­ணங்­கள் நிகழ்ந்­தி­ருப்­ப­தைத் தொடர்ந்து மனி­த­வள அமைச்சு, வேலை­யிடப் பாது­காப்பு, சுகா­தார மன்­றம், தேசிய தொழிற்­சங்க காங்­கி­ரஸ் (என்­டி­யுசி) ஆகி­யன நிறு­

வ­னங்­க­ளுக்கு இந்த வேண்­டுகோளை விடுத்­துள்­ளன.

இதற்கு முன்­னர், 2021 ஜூன் 25ஆம் தேதி நாட­ளா­விய பாது­காப்­புக் கவன நட­வ­டிக்கை அமல்

­ப­டுத்­தப்­பட்­டது.

"நிறு­வ­னங்­கள் வேலை­யி­டப் பாது­காப்­பின் மீது தங்­க­ளது கவ­னத்­தைத் திருப்­ப­லாம். ஊழி­யர்­கள் எழுப்பும் பாது­காப்­புப் பிரச்­சி­னை­களுக்கு அவை உட­ன­டித் தீர்வு காண­லாம்.

"முத­லா­ளி­கள், மேற்­பார்­வை­யா­ளர்­கள் மற்­றும் ஊழி­யர்­கள் வேலை­யி­டப் பாது­காப்புக்கு முக்கியத் துவம் தரவேண்டும்," என்று பிர­

த­மர் லீ கூறியுள்­ளார்.

'விபத்து, மரணங்களைத் தவிர்க்க ஆண்டாண்டு காலமாகப் பாடுபட்டு வந்துள்ளோம்'

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!