‘த காஷ்மீர் ஃபைல்ஸ்’ திரைப்படத்துக்கு சிங்கப்பூர் தடை

சர்ச்­சைக்­கு­ரிய இந்­தித் திரைப்­ப­ட­மான 'த காஷ்­மீர் ஃபைல்ஸ்' சிங்­கப்­பூ­ரில் தடை செய்­யப்­ப­டு­வ­தாக தக­வல்­தொ­டர்பு ஊடக மேம்­பாட்டு ஆணை­யம் தெரி­வித்துள்­ளது.

இத்திரைப்­ப­டம் இந்­தி­யா­வில் மார்ச் மாதம் திரை­யி­டப்­பட்­டது.

வெவ்­வேறு சமூ­கங்­க­ளுக்கு இடை­யில் பகை­மையை உரு­வாக்­கு­வ­தோடு சமய நல்­லி­ணக்­கத்­துக்கு ஊறு விளை­விக்­கும் சாத்­தி­யம் இருப்­ப­தால் இந்­தத் திரைப்­

ப­டத்தை சிங்­கப்­பூ­ரில் திரை­யிட அனு­மதி இல்லை என ஆணை­யம் கூறி­யுள்­ளது.

'த காஷ்­மீர் ஃபைல்ஸ்' திரைப்­

ப­டத்­தைப் பார்த்த பின்­னர் உள்­துறை அமைச்சு, கலா­சார, சமூக, இளை­யர் அமைச்சு ஆகி­ய­வற்­று­டன் கலந்­து­பே­சிய பின்­னர் இது திரைப்­பட வழி­காட்­டிக் குறிப்­பு­

க­ளுக்கு அப்­பாற்­பட்டு இருப்­ப­தாக முடிவு செய்­யப்­பட்­டது என ஆணை­யம் குறிப்­பிட்டுள்­ளது.

ஒரு சமூ­கம் பாதிக்­கப்­ப­டு­வது போல­வும் இன்­னொரு சமூ­கம் எரிச் சல­டை­யும் வித­மா­க­வும் திரைப்­

ப­டம் சித்­தி­ரிக்­கப்­பட்டு உள்­ள­தாக மூன்று அர­சாங்க அமைப்­பு­களும் கூட்­டா­கத் தெரி­வித்­தன.

சிங்­கப்­பூ­ரால் தடை செய்­யப்­பட்ட திரைப்­ப­டத்தை இங்கு சட்­டப்­படி விற்­கவோ, வாட­கைக்கு விடவோ, வைத்­தி­ருக்­கவோ, இறக்­கு­மதி செய்­யவோ, பொது­மக்­க­ளுக்­குக் காட்­டவோ அனு­மதி இல்லை.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!