மின்னிலக்கத்தை வாழ்க்கை பயணமாக அமைத்துக்கொள்ள ஊக்குவிக்கும் விழா

வாழ்க்கை முழுதும் மின்னிலக்கம் எனும் ‘டிஜிட்டல் ஃபார் லைஃப்’ இயக்கத்தின் அங்கமாக ‘டிஜிட்டல் ஃபார் லைஃப்’ விழா 2022 நிகழ்வு நேரடியாகவும் இணையத்திலும் நடைபெறுகிறது.

சிங்கப்பூர் முழுதும் இரண்டு பிரதான இடங்களிலும் மற்றும் இதர 18 இடங்களிலும் இந்த ‘டிஜிட்டல் ஃபார் லைஃப்’ விழா இடம்பெறுகிறது.

மின்னிலக்க முறையில் பண வர்த்தகமும், வணிகமும், உடல்நல பராமரிப்பும் கூட வந்துவிட்டது. இவ்வாறு அன்றாட வாழ்வியலில் இரண்டற கலந்துவிட்ட மின்னிலக்கத்தைக் கற்றுக் கொண்டாட ஊக்குவிக்கின்றது, இவ்விழா.

சிறார் முதல் பெரியோர் வரை, அவரவர் வாழ்வில் மின்னிலக்கத்தின் துணைகொண்டு தங்களை மேம்படுத்திக்கொள்வதற்கான பல்வேறு இணையப் பயிலரங்குகள் மே 21ஆம் தேதியிலிருந்து 29 ஆம் தேதி வரை ஏற்பாடாகியுள்ளன.

மக்கள், பொது அமைப்புகள், தனியார் அமைப்புகள் ஆகிய மூன்று தரப்புப் பங்காளிகளை ஒன்றிணைக்க முனைந்துள்ளது தகவல்தொடர்பு ஊடக மேம்பாட்டு ஆணையம் ஏற்பாடு செய்துள்ள ‘டிஜிட்டல் ஃபார் லைஃப்’ இயக்கம்.

மின்னிலக்க செயல்பாடுகளின் வாயிலாக வாழ்வியலை மேம்படுத்த மட்டுமின்றி, மின்னிலக்கத்தை வாழ்க்கை பயணமாக அமைத்துக்கொள்ளவும் இவ்விழா ஊக்குவிக்கின்றது. வாழ்வதை, விளையாடுவதை, பணிபுரிவதை மாற்றியமைத்துள்ள மின்னிலக்கமானது உத்வேகமூட்டும் வகையில் புதுப்புது வாய்ப்புகளை அமைத்து தருவதோடு, உதவி தேவைப்படுவோருக்கு நம்பிக்கையும் அளிக்கின்றது. வாழ்க்கையை இனிமையாக்கும் இத்தகைய மின்னிலக்கத்தைப் பயன்படுத்தி பயனடைய தேவையான நல்ல பழக்கவழக்கங்களை இவ்விழா அறிமுகப்படுத்த முயல்கிறது.

நேரடியாகவும் இணையத்திலும் நடைபெறும் நூற்றுக்கும் மேற்பட்ட நடவடிக்கைகளில் ஒன்றாக பிஓஎஸ்பி (POSB), மூத்தோருக்கான மின்னிலக்க வங்கி சேவை பயிலரங்கினை நடத்தவுள்ளது. இணைய பண புழக்க சேவைகளை எவ்வாறு அணுகுவது, இணைய பண மோசடிகளிலிருந்து எவ்வாறு நம்மை காத்துக்கொள்வது என்பது குறித்து இப்பயிலரங்கு விளக்கும். தீவு முழுதும் 50 சமூக கூடார நடவடிக்கைகளும் இடம்பெறுகின்றன.

மென்பொருள் பயன்பாட்டையும் நிரலாக்க மொழிகளையும் மாணவர்கள் கற்றுத்தேர்வதற்கான வாய்ப்புகள் காத்துக்கொண்டிருக்கின்றன. வீடுகளில் குடும்பத்தைப் பிணைக்கும் வகையில் மின்னிலக்கத்தை எவ்வாறு கட்டுப்பாட்டுடன் கையாளலாம் என்று பெற்றோருக்கு வழிகாட்டும் நிகழ்வுகளும் இவ்விழாவில் இடம்பெறவிருக்கின்றன.

டிஜிட்டல் ஃபார் லைஃப் விழாவில் எதிர்வரும் நிகழ்வுகள்:

கற்போம் (Let’s Learn)

  • எஸ்.ஜி எனேபல் (SG Enable)
    • மாற்றுத் திறனாளிகளுக்கான மின் அணுகல் பயிலரங்கு

மூன்றே மணி நேரத்தில் மின்னிலக்கத்தைத் தழுவுவது குறித்தும் இணையத் தகவல் அணுகல் குறித்த வரையறைகளையும் நல்ல முறைகளையும் பற்றி அறியலாம். மேலும் மின்னிலக்க அணுகல் சோதனைக்கும் பயிற்சி வழங்கப்படும்.
இன்றைய சூழலில் மின்னிலக்க பொருள்களான மடிகணினி, தொலைபேசி, உதவும் தொழில்நுட்பம் போன்றவை மட்டுமே தகவல்களை அறிய போதுமானவை அல்ல.
சிறப்புத் தேவையுடையோருக்காக மின்னிலக்க மின் அணுகல் குறித்து மேலும் பகிர்வதும் அதன் தரத்தை மேம்படுத்துவது குறித்து கருத்துரைப்பதும் இதன் நோக்கம்.
லெங்கொக் பாருவில் அமைந்துள்ள எனேபளிங் வில்லேஜ் (Enabling Village) எனும் இடத்தில் மே 29ஆம் தேதி நடைபெறும் இந்த நிகழ்வுக்கு இன்றே பதிவுசெய்யுங்கள்.

  • ஃபேர்பிரைஸ் (Fairprice)
  • கையில் பணமில்லாமல், ஃபேர்பிரைஸ் செயலியைப் பயன்படுத்தி லிங்க் புள்ளிகள் பெறுவதெப்படி

இந்த நிகழ்வு மூலம் துரிதமாக ஃபேர்பிரைஸ் செயலியைப் பதிவிறக்கம் செய்து பொருள்கள் வாங்குவதுமூலம் பலன்பெற தொடங்குவது குறித்து அறியலாம்.
கடைக்குச் சென்று முதல் முறை செயலி மூலம் பொருள் வாங்கும்போது 300 லிங்க்பாய்ண்ட்ஸ் பெறுங்கள்.
ஹார்ட்பீட்@பிடோக் (Heartbeat@Bedok) இடத்தில் மே 28, 29ஆம் தேதிகளில் காலை 10 மணி முதல் மாலை 7 மணி வரையிலும் லெங்கொக் பாருவில் அமைந்துள்ள எனேபலிங் வில்லேஜ் எனும் இடத்தில் மே 29 ஆம் தேதி காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரையிலும் இந்த நிகழ்வு நடைபெறுகிறது.

  • பிஓஎஸ்பி (POSB)
    • மின்னிலக்க நலன்

‘பிஓஎஸ்பி டிஜிபேங்க்’ செயலி மூலம் தினசரி வங்கி பரிவர்த்தனைகள் சுலபமாகவும் மேலும் பாதுகாப்புடனும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
சன்டெக் சிட்டியில் மே 21, 22 ஆம் தேதிகளில் காலை 10 மணி முதல் 11 மணி வரையிலும் ஹார்ட்பீட்@பிடோக்கில் மே 28, 29ஆம் தேதிகளில் பிற்பகல் 1.30 மணி முதல் 2.30 மணி வரையிலும் நடைபெறும் பயிலரங்கில் கலந்துகொண்டு ‘பிஓஎஸ்பி டிஜிபேங்க்’ செயலியில் எப்படி பதிவுசெய்வது என்பதை படிப்படியான துணையுடன் அறிந்துகொள்ளலாம். பிரபலமாகப் பயன்படுத்தப்படும் அம்சங்கள் குறித்த மேல் விவரங்களும் பெறலாம்.
உங்களை இணையத்தில் பாதுகாத்துக்கொள்ள தேவையான பாதுகாப்பு யுத்திகளையும் அறியலாம்.
‘பிஓஎஸ்பி டிஜிபேங்க்’ ‘யூசர் ஐடி’ மற்றும் ‘பின்’, உங்களது மின்னஞ்சல் முகவரி ஆகியவற்றை தயாராக வைத்துகொள்ளுங்கள். ஆனால் செயலியின் மறைச்சொற்களை தனிப்பட்ட விவரங்களை எவரிடமும் பகிரவேண்டாம்.
50 வயது, அதற்கு மேல் வயதுடையவர்களுக்கு இந்தப் பயிலரங்கு பலனளிக்கும்.

  • என்டியுசி லெர்னிங் ஹப் (NTUC Learning Hub)
    • பதிவு உருவாக்குதல்

சமூக ஊடகங்களில் காணொளிகள் மிகவும் பிரபலமாகியுள்ளன. மக்களை ஈர்க்கும்வண்ணம் புத்தாக்கத்துடன் நீங்களும் காணொளிகளைத் தயாரிக்கலாம்.
‘க்ளிப்ஸ்’ எனும் செயலி மூலம் சுவாரசியமான காணொளிகளை நல்ல கதையோட்டத்துடனும் ஈர்க்கும் வகையிலான கூறுகளையும் கொண்டு எவ்வாறு தயாரிப்பது என்பதைக் கற்கலாம்.
ஃபேஸ்புக், டிக்டாக், இன்ஸ்டகிராம் போன்ற தளங்களுக்கு தகவல்களை உருவாக்குவதையும் பற்றி அறியலாம்.
ஹார்ட்பீட்@பிடோக் இடத்தில் மே 23, 24ஆம் தேதிகளில் காலை 11 மணிக்கும் பிற்பகல் 2 மணிக்கும் இந்த ஒரு மணி நேர நிகழ்ச்சி நடைபெறுகிறது.
‘சில்வர் டிஜிடல் கிரியேடர்ஸ்’ உடன் இணைந்து உடனே கற்றுக்கொள்ளுங்கள்.

  • ட்ரைஜென்(TriGen)
  • நம்மை சுற்றியுள்ள மூத்தோர் மின்னிலக்கத் திறன்களைக் கற்றுக்கொள்ள நாம் எவ்வாறு உதவமுடியும் என்பதற்கான உத்திகளை இதன் மூலம் அறியலாம்.

கற்றுக்கொள்ள உதவும் மேலும் பல நிகழ்வுகளும் உண்டு. அவற்றின் மேல் விவரங்களை இணையத்தளத்தில் அறியலாம்.

கண்டறிவோம் (Let’s Explore)

  • சிங்கப்பூர் தேசிய கண் மையம் (SNEC) - நடமாடும் கண் பேருந்து
  • பொதுமக்கள் பேருந்தில் ஏறி சுற்றிப்பார்ப்பதோடு அதில் உள்ள வெவ்வேறு இயந்திரங்களைப் பற்றி கற்க சுற்றுலாவிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கிட்டத்தட்ட 10 அல்லது 15 நிமிடங்கள் நடைபெறும் ஒவ்வொரு சுற்றுலாவிலும் 3 அல்லது 4 பொதுமக்கள் குழுவாகப் பங்குபெறுவர். கண் பரிசோதனை பேருந்தில் இடம்பெறாது.
லெங்கொக் பாருவிலுள்ள எனேபலிங் வில்லேஜ் எனும் இடத்தில் மே 29 ஆம் தேதி காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரையில் நடைபெறும்.

  • தேசிய நூலக வாரியம் - மின்னிலக்கம் தொடர்பான நூலக நிகழ்வுகள்
  • உங்களின் தனித்துவமிக்க முப்பரிமான வடிவத்தைத் தயார் செய்யுங்கள்

7 வயது முதல் 12 வயது வரையிலான எல்லா குழந்தைகளும் வரவேற்கப்படுகின்றனர்.
மே மாதம் 22 ஆம் தேதி காலை 11.30 மணி முதல் பிற்பகல் 1 மணி வரையிலும் பிற்பகல் 2 மணி முதல் 3.30 மணி வரையிலும் சன்டெக் சிட்டியில் நடைபெறுகிறது.

  • S.U.R.E எனும் நான்கு படிநிலைகளில் பொய்ச் செய்தியை எதிர்கொள்ளுதல்.

கடந்த பல ஆண்டுகளாக, குறிப்பாக கொவிட்-19 நோய்ப் பரவல் சூழலில், பொய்ச் செய்திகளின் அச்சுறுத்தல்களும் இணையத்தில் தவறான தகவல்களும் சமூகத்திற்குப் பாதிப்பு ஏற்படுத்தி வருகின்றன.
தகவல் கல்வியறிவு குறித்து தேசிய நூலக வாரியம் பொதுமக்களுக்கு கற்பிக்கவிரும்புகிறது. நான்கு வழிகளில், அதாவது தேடுதல், புரிதல், ஆய்வு, மதிப்பீடு ஆகியவை மூலம் மேலும் சிறந்த ஆய்வாளராக உருமாற வாய்ப்பளிக்கிறது.
நம்பகத்தன்மைமிக்க தகவல் மூலதனம், இணையத் தேடல் உத்திகள், இனையத்தில் படிப்பதை ஆழமாக சிந்திக்கும் வழிகள் போன்றவற்றை இந்த உரையாடலில் அறியலாம்.
கலந்துறவாடல் நடவடிக்கைகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. ‘Kahoot!’ தளம் மூலம் அவை நடைபெறும். அதனால் உங்கள் திறன்பேசிகளை எடுத்துச்செல்லுங்கள்.
சன்டெக் சிட்டி மாநாட்டு கண்காட்சி மையம், ஹார்ட்பீட்@பிடோக், எனேபலிங் வில்லேஜ் ஆகிய இடங்களில் நடைபெறுகிறது.

  • தேசிய பல்கலைக்கழகத்தின் அமைப்பு அறிவியல் கழகம் (NUSISS) - உதவி தொழில்நுட்பம்
    • பக்கவாதமே சிங்கப்பூரில் அதிகமானோர் நீண்டகால உடல்நலக் குறைபாட்டிற்கான முக்கிய காரணமாக விளங்குகிறது. பக்கவாதம் ஏற்பட்ட முதல் ஆறு மாதங்களே ஒருவர் மீண்டும் இயங்கத் தேவையான பயிற்சி பெற முக்கிய காலகட்டம். ஆனால் சிங்கப்பூரில் சுகாதாரப் பராமரிப்பு ஊழியர்களின் தட்டுப்பாடால் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டோர் உதவி பெற நிபுணர்களுடன் கிடைக்கும் நேரம் குறைவாக உள்ளது.

நிபுணர்களின் வேலைப் பளுவைக் குறைக்கும் நோக்கில் தானியக்க கை மறுவாழ்வுச் செயல்முறையை உருவாக்கியுள்ளனர்.

அறிவார்ந்த பக்கவாத மறுவாய்வு செயல்முரையானது கலந்துறவாடி நோயாளிகள் பலரையும் ஒரே நேரத்தில் கண்காணிக்க வாய்ப்பளிக்கிறது.

செயற்கை நுண்ணறிவு, விளையாட்டுமயம், செய்கை புகைப்படச் செயல்முறைகள் போன்ற தொழில்நுட்பங்களைக் கொண்டு இது சாத்தியமாகிறது.

மே 29ஆம் தேதி லெங்கொக் பாருவில் அமைந்துள்ள எனேபலிங் வில்லேஜ் இடத்தில் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை மக்கள் காணலாம்.

எஸ்ஜி எனேபலின் ஆதரவுடன் டோட் போர்ட் நிதியுதவியுடன் தேசிய பல்கலைக்கழகத்தின் அமைப்பு அறிவியல் கழகமும் பக்கவாத ஆதரவு நிலையமும் இணைந்து இந்தத் திட்டத்தை உருவாக்கியுள்ளன.

  • ப்ரூடென்ஷல்(Prudential)
    • சுகாதாரத்துக்கான தொழில்நுட்பம்

மின்னிலக்க செயலிகளின் வாயிலாக ஆரோக்கியத்தை மேம்படுத்துவதும் உடல்நலனும்

இணையத்தில் நடத்தப்படும் இந்த நிகழ்ச்சியை வீட்டிலிருந்தபடியே காணலாம்.

  • லயன்ஸ் பிஃப்ரெண்டர்ஸ் (Lion’s Befrienders)- மின்நலம்
  • மூத்தோரின் நலனைக் கண்காணிக்க தொழில்நுட்பத்தை அரவணைத்தல்

லயன்ஸ் பிஃப்ரெண்டர்ஸ் எவ்வாறு தங்களின் மூத்தோரின் நலனை மெய்நிகர் தளத்தில் ‘ஐஎம் ஓகே’ கருவி வழி கண்காணிக்கின்றனர் என்பது குறித்தும் மனஅழுத்தம், மன பதற்றம் போன்றவற்றால் மூத்தோர் பாதிக்கப்பட்டிருக்கின்றார்களா என்பதை செயற்கை நுண்ணறிவு மூலம் கண்டுபிடிப்பதை சோதிக்கும் வாய்ப்பையும் பெறலாம்.
சன்டெக் சிட்டி மாநாட்டு மையத்தில் மே 21, 22 ஆம் தேதிகளில் காலை 10 மணி முதல் மாலை 7 மணி வரையிலும், ஹார்பீட்@பிடோக்கில் மே 28, 29ஆம் தேதிகளில் காலை 10 மணி முதல் மாஅலை 7 மணி வரையிலும், எனேபலிங் வில்லேஜில் மே 29 ஆம் தேதி காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரையிலும் கலந்துகொள்ளலாம்.

கண்டறிவதற்கான மேலும் பல நிகழ்வுகளில் பங்கெடுக்கலாம். இந்த நிகழ்வுகளின் மேல் விவரங்களை இணையத்தளத்தில் பெறுங்கள்.

பங்காற்றுவோம் (Let’s Play a Part)

  • எஞ்சினீரிங் குட் - ‘ரீமேக்இட்’ மடிகணினி பழுதுபார்த்தல்
    • உங்கள் மடிகணினிக்கு உள்ளே எப்படி இருக்கும் என்பது உங்களுக்குத் தெரியுமா? இந்தப் பயிலரங்கு மூலம் அதுபற்றி தெரிந்துகொள்ளுங்கள்.

மடிகணினியை முழுவதுமாக பிரித்து மீண்டும் அதைக் கோர்ப்பதற்கான அடிப்படை கல்வியறிவையும் திறன்களையும் இந்தப் பயிலரங்கில் கற்கலாம்.

மடிகணினியின் வெவ்வேறு பாகங்களை அடையாளம் காண்பது, அடிப்படை பிரச்சினைகள், அவற்றைக் களைவதற்கான வழிகள் போன்றவற்றை அறியலாம்.

உடைந்த பாகங்களை ‘இபொக்ஸி’ கொண்டு பழுது நீக்கவும் கற்கலாம்.

சன்டெக் சிட்டி மாநாட்டு மையத்தில் மே 22 அன்றும் எனேபலிங் வில்லேஜில் மே 29 அன்றும் மூன்று மணி நேர பயிலரங்கு நடைபெறும்.

மேலும் பல நிகழ்வுகள் இணையத்தில் நடத்தப்படுகின்றன. அவற்றில் கலந்துகொண்டு பயன்பெறுங்கள். இருந்த இடத்திலிருந்து கற்று, கண்டறிந்து, பங்காற்றுவோம்.

மேற்கண்ட நிகழ்வுகளுக்கு முன்பதிவு செய்ய: https://go.gov.sg/digitalforlifefestival2022

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!