இம்மாதம் வேலை மோசடிகளில் $430,000 பறிபோனது

இம்­மா­தம் வேலை மோச­டி­க­ளால் ஏமாற்­றப்­பட்ட 50க்கும் அதி­க­மானோர் மோச­டிக்­கா­ரர்­க­ளி­டம் குறைந்­தது $430,000ஐ பறி­கொடுத்­துள்­ள­னர். காவல்­து­றை­யி­னர் இந்­தத் தக­வலை நேற்று வெளி­யிட்­ட­னர்.

பாதிக்­கப்­பட்­டோ­ருக்கு மின்­வர்த்­த­கத் தளங்­கள் அனுப்­பு­வதைப் போலி­ருக்­கும் குறுந்­த­க­வல்­கள் வரும். வேலை­வாய்ப்­பு­கள் அளிக்­கப்­ப­டு­வ­தாக அவற்­றில் குறிப்­பி­டப்­படும்.

பொது­வாக குறுஞ்­செய்தி, வாட்ஸ்­அப், சமூக ஊட­கத் தளங்­கள் வாயி­லாக குறுந்­த­க­வல்­கள் அனுப்­பப்­படும்.

அதிக பணம் ஈட்­டக்­கூ­டிய எளி­மை­யான விளம்­ப­ரத் துறை வேலை­கள் வழங்­கப்­ப­டு­வ­தாக அவற்­றில் தெரி­விக்­கப்­படும்.

எடுத்­துக்­காட்­டாக, தாங்­கள் விரும்­பும் ஒவ்­வொரு பொரு­ளுக்­கும் $2 வழங்­கப்­படும் என்று பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளுக்­குத் தெரி­விக்­கப்­படும்.

தொடக்­கத்­தில் தரகுத்­தொகை உண்­மை­யி­லேயே வழங்­கப்­படும். பின்­னர், மேலும் செலவு செய்­தால் கூடு­தல் தர­குத்­தொகை வழங்­கப்­ப­டு­வ­தா­கக் கூறி மக்­கள் ஏமாற்­றப்­ப­டு­வர். இத்­த­கைய மோசடிகளால் ஏமாற்­றப்­ப­டு­வோர் பணத்தை இழக்க நேரி­டு­கிறது.

சிர­ம­மின்றி அதிக பணம் சம்பா­திக்­க­லாம் என்று கூறும் சந்தேகம் தரக்­கூ­டிய வேலை­வாய்ப்பு­களை ஏற்­றுக்­கொள்­ள­வேண்­டாம் என்று காவல்­து­றை­யி­னர் பொது­மக்­க­ளுக்கு நினை­வூட்­டி­னர்.

சென்ற ஆண்டு மேற்­கொள்­ளப்­பட்ட மோச­டிச் செயல்­களில் பெரும்­பா­லா­னவை வேலை தொடர்­பான மோச­டி­கள். 4,550க்கும் அதி­க­மான வேலை மோச­டிச் செயல்­க­ளால் பாதிக்­கப்­பட்­டோர் குறைந்­தது $91 மில்­லி­யனை இழந்­த­னர்.

இத்­த­கைய மோச­டிச் செயல்­களைப் பற்­றித் தக­வல் வைத்­தி­ருப்­போர் 1800-255-0000 என்ற காவல்­து­றை­யின் தொலைப்­பேசி எண்ணை அழைத்து புகார் அளிக்­க­லாம். https://www.police.gov.sg/iwitness என்ற இணைய முக­வ­ரிக்­குச் சென்­றும் புகா­ரைச் சமர்ப்­பிக்­க­லாம்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!