சிறுவர்களுக்கான கடைசி இரு தடுப்பூசி நிலையங்கள் ஜூன் 30ஆம் தேதி மூடப்படும்

ஹவ்­காங் சமூக மன்­றத்­தி­லும் செஞ்சா-கேஷு சமூக மன்­றத்­திலும் செயல்­பட்டு வரும் சிறு­வர்­களுக்­கான கடைசி இரு கொவிட்-19 தடுப்­பூசி நிலை­யங்­கள் ஜூன் 30ஆம் தேதி மூடப்­படும்.

ஐந்து முதல் 11 வயது வரை­யி­லான சிறு­வர்­களில் பெரும்­பா­லா­னோர் கொவிட்-19க்கு எதி­ரான முத­லிரு தடுப்­பூ­சி­க­ளைப் போட்டுக்­கொண்­டுள்­ள­தைத் தொடர்ந்து இந்த அறி­விப்பு வெளி­வந்­துள்­ளது.

இவ்­விரு தடுப்­பூசி நிலை­யங்­களி­லும் அவற்­றின் கடைசி முதல் தடுப்­பூசி ஜூன் 9ஆம் தேதி­யும் இரண்­டா­வது தடுப்­பூசி ஜூன் 30ஆம் தேதி­யும் போடப்­படும் என்று சுகா­தார அமைச்சு நேற்று தெரி­வித்­தது.

சிறு­வர்­க­ளுக்கு கொவிட்-19 தடுப்­பூசி தொடர்ந்து கிடைப்­பதை உறு­தி­செய்ய, மூன்று பல­துறை மருந்­த­கங்­களும் தேர்ந்­தெ­டுக்­கப்­பட்ட பொதுச் சுகா­தார தயார்­நிலை மருந்­த­கங்­களும் சிறு­வர்­க­ளுக்­கான தடுப்­பூ­சியை வழங்­கத் தொடங்­கும் என்று அமைச்சு சொன்­னது.

பைனி­யர், பொங்­கோல், உட்­லண்ட்ஸ் பல­துறை மருந்­த­கங்­கள் மே 18ஆம் தேதி­மு­தல் தடுப்­பூ­சியை வழங்­கும். தேர்ந்­தெ­டுக்­கப்­பட்ட பொதுச் சுகா­தார தயார்­நிலை மருந்­த­கங்­கள் மே 25ஆம் தேதி­யி­லி­ருந்து தடுப்­பூ­சியை வழங்­கும்.

ஹவ்­காங் சமூக மன்­றத்­தி­லும் செஞ்சா-கேஷு சமூக மன்­றத்­தி­லும் சிறு­வர்­க­ளுக்­கான கொவிட்-19 தடுப்­பூசி நிலை­யங்­கள் கடந்த டிசம்­ப­ரில் திறக்­கப்­பட்­டன.

ஏப்­ரல் 30ஆம் தேதி 10 தடுப்­பூசி நிலை­யங்­கள் மூடப்­பட்­டும் இவ்­விரு நிலை­யங்­களும் தொடர்ந்து இயங்கி வரு­கின்­றன.

சிங்­கப்­பூ­ரில் தற்­போது 28 கொவிட்-19 தடுப்­பூசி நிலை­யங்­கள் உள்­ளன. கடந்த ஆண்டு ஜூன் மாதம் 40 நிலை­யங்­கள் இருந்­தன.

மே இறு­தி­வரை 20 தடுப்­பூசி நிலை­யங்­கள் செயல்­படும். ஜூன் இறு­தி­வரை ஆறு நிலை­யங்­கள் இயங்­கும்.

அதன் பிறகு இரு நிலை­யங்­கள் மட்­டுமே செயல்­படும். ராஃபிள்ஸ் சிட்டி மாநாட்டு மையத்­தி­லும் முன்னாள் ஹொங் கா உயர்­நி­லைப்­பள்­ளி­யி­லும் அவை அமைந்­து உள்ளன.

ஐந்து முதல் 11 வயது வரை­யிலான சிறு­வர்­களில் ஏறக்­கு­றைய 81 விழுக்­காட்­டி­னர் முதல் தடுப்­பூசிக்­குப் பதிந்­துள்­ள­னர், அல்­லது அதைப் போட்­டுக்­கொண்­டுள்­ள­னர்.

அதே­வே­ளை­யில், 69 விழுக்­காட்­டி­னர் இரண்­டா­வது தடுப்­பூ­சி­யைப் போட்­டுக்­கொண்­டுள்­ள­னர் என்று அமைச்சு கூறி­யது.

தொடக்­கப்­பள்ளி மாண­வர்­களில் 86 விழுக்­காட்­டி­ன­ருக்­கும் அதி­க­மா­னோர் குறைந்­தது முதல் தடுப்­பூ­சி­யைப் போட்­டுக்­கொண்­டுள்­ள­னர். 77 விழுக்­காட்­டி­னர் இரு தடுப்­பூ­சி­க­ளை­யும் போட்­டுக்­கொண்­டு உள்­ள­னர்.

2016, 2017ஆம் ஆண்­டு­களில் பிறந்­த­வர்­க­ளைப் பொறுத்­த­மட்­டில், ஏறக்­கு­றைய 35,600 பேர் சுகா­தார அமைச்­சின் தேசிய முன்­ப­திவு முறை­யில் தடுப்­பூ­சிக்­குப் பதிந்­து உள்­ள­னர்.

ஏறக்­கு­றைய 32,700 பேர் குறைந்­தது முதல் தடுப்­பூ­சி­யைப் போட்­டுக்­கொண்­டுள்­ள­னர். 26,700 பேர் இரண்­டா­வது தடுப்­பூ­சி­யைப் போட்டுக்­கொண்­டுள்­ள­னர்.

தேர்ந்­தெ­டுக்­கப்­பட்ட பல­துறை மருந்­த­கங்­க­ளி­லும் தேர்ந்­தெ­டுக்­கப்­பட்ட பொதுச் சுகா­தார தயார்­நிலை மருந்­த­கங்­க­ளி­லும் சிறு­வர்­கள் தடுப்­பூசி போட்­டுக்­கொள்ள, child.vaccine.gov.sg எனும் இணையப் பக்­கத்­தில் பெற்­றோர் அவர்­களுக்­காக பதிய வேண்­டும்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!