இதய வால்வு கசிவு உடையோருக்கு குறைந்தபட்ச ஊடுருவும் அறுவை சிகிச்சை

இதய வால்வு கசி­யும் பிரச்­சினை உடை­யோர், அதற்­குத் தீர்­வு­காண குறைந்­த­பட்ச ஊடு­ரு­வும் அறுவை சிகிச்­சை­யைப் பெற­லாம். சிங்­கப்­பூர் தேசிய இதய நிலை­யத்­தில் இரு புதிய சிகிச்சை முறை­கள் அறி­மு­க­மா­கி­யுள்­ள­தால் இது சாத்­தி­ய­மா­கிறது.

'டிரை­கஸ்­பிட் ரிகர்­ஜிட்­டே­ஷன்' என்று ஆங்­கி­லத்­தில் இந்த மருத்­து­வப் பிரச்­சினை அழைக்­கப்­ப­டு­கிறது. இத­யத்­தின் வல­துப் புறத்­தில் உள்ள இந்த வால்வு சரி­யாக மூடும் திறன்பெறாமல் இருந்தால், ரத்­தம் பின்­னோக்கி கசி­கிறது.

இந்­தக் கசிவு மோச­ம­டை­யும்­போது கல்­லீ­ரல், சிறு­நீ­ர­கம் உள்­ளிட்ட பல்­வேறு உறுப்­பு­க­ளின் செயல்­பா­டு­கள் பாதிப்­ப­டை­கின்­றன.

இதய வால்வு கசிவு மோசம் அடைந்­தும் அது குணப்­ப­டுத்­தப்­படா­த­போது, அந்­தப் பிரச்­சினை கண்­ட­றி­யப்­பட்ட ஓராண்­டிற்­குள் 36 விழுக்­காடு நோயா­ளி­கள் இறந்­து­வி­டு­வர் என்று சிங்­கப்­பூர் தேசிய இதய நிலை­யத்­தைச் சேர்ந்த டாக்­டர் வோங் நிங்­யன் நேற்று கூறி­னார்.

ஆய்­வுக்கு உட்­ப­டுத்­தப்­பட்­ட­வர்­களில் வெறும் 14 விழுக்­காட்­டி­னரே, நோய் கண்­ட­றி­யப்­பட்டு 10 ஆண்­டு­க­ளுக்கு அல்­லது அதற்­கும் மேலாக உயிர் வாழ்ந்­த­னர்.

இந்­தப் பிரச்­சினை உடை­யோ­ரி­டம் மூச்­சுத்­தி­ண­றல், கால்­களில் வீக்­கம் உள்­ளிட்ட அறி­கு­றி­கள் தென்­படும். அவற்றை மட்­டுப்­படுத்த நோயா­ளி­களுக்கு மருந்து மாத்­தி­ரை­கள் வழங்­கப்­ப­டு­கின்­றன. பழு­த­டைந்த இதய வால்வை சரி­செய்­ய­வோ அதை மாற்­றவோ நோயா­ளி­க­ளுக்கு அறுவை சிகிச்­சை­யும் அளிக்­கப்­ப­டு­கிறது.

என்­றா­லும், அறுவை சிகிச்சை செய்­து­கொண்­டால் மருத்­து­வச் சிக்கல் ஏற்­படும் அபா­யம் நில­வு­வதால், நோயா­ளி­கள் பல­ரும் வால்வு கசிவு பிரச்­சி­னை­யைக் குணப்­ப­டுத்­தா­ம­லேயே விட்­டு­விடு­கின்­ற­னர் என்று டாக்­டர் வோங் கூறி­னார்.

இதய வால்வு கசிவு பிரச்­சினை இருந்­தும் திறந்த இதய அறுவை சிகிச்சை செய்­து­கொள்ள தகு­தி­பெ­றா­த­வர்­க­ளுக்கு சிங்­கப்­பூர் தேசிய இதய நிலை­யத்­தில் இரு புதிய சிகிச்சை முறை­கள் வழங்­கப்­ப­டு­கின்­றன.

மோச­மான இதய வால்வு கசிவு உடை­யோ­ருக்கு திறந்த இதய அறுவை சிகிச்சை வழங்­கப்­பட்டு வந்­தா­லும், அது அவ்­வ­ளவு எளி­தா­ன­தல்ல என்று சிங்­கப்­பூர் தேசிய இதய நிலை­யத்­தின் மூத்த மருத்­து­வ­ரான இணைப் பேரா­சி­ரி­யர் இயோ குங் கியோங் கூறி­னார்.

அறுவை சிகிச்­சைக்கு உட்­ப­டுத்­தப்­ப­டு­வோர் தீவிர சிகிச்­சைப் பிரிவு­களில் அனு­ம­திக்­கப்­பட வேண்­டி­யி­ருப்­ப­தைச் சுட்­டிய அவர், நோயா­ளி­கள் குண­ம­டைய ஒரு வாரத்­தி­லி­ருந்து ஒரு சில மாதங்­கள் வரை ஆக­லாம் என்­றார்.

எனி­னும், புதிய சிகிச்சை முறை­கள் மூலம், நோயா­ளி­க­ளுக்கு இதர மருத்­து­வப் பிரச்­சி­னை­கள் இல்லை­யென்­றால் மூன்று நாள்­களில் அவர்கள் வீடு திரும்­பி­வி­ட­லாம். தீவிர சிகிச்­சைப் பிரி­வு­களில் அவர்­கள் அனு­மதிக்­கப்­பட வேண்­டிய கட்­டா­ய­மும் இராது.

மோச­மான அறி­கு­றி­க­ளுடன் காணப்படும் இதய வால்வு கசிவு உடைய தேர்ந்­தெ­டுக்­கப்­பட்ட நோயா­ளி­க­ளுக்கு இந்­தப் புதிய சிகிச்சை முறை வழங்­கப்­படும் என்று டாக்­டர் வோங் சொன்­னார். பல மருத்­து­வப் பிரி­வு­க­ளைச் சேர்ந்த நிபு­ணர்­க­ளு­டன் கலந்­தா­லோ­சித்த பின்­னர் இந்­தச் சிகிச்சை முறை வழங்­கப்­படும். ஆண்­டுக்கு 10 முதல் 15 நோயா­ளி­கள் வரை இந்­தச் சிகிச்சை முறை­யால் பய­ன­டை­வர் எனத் தாம் எதிர்­பார்ப்­ப­தாக பேரா­சி­ரியர் இயோ கூறி­னார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!