இன அடிப்படையில் இழிவாகப் பேசியவருக்குச் சிறைத்தண்டனை

சென்ற ஆண்டு மூன்று வெவ்­வேறு நிகழ்­வு­களில் இன அடிப்­ப­டை­யில் புண்­ப­டுத்­தும் சொற்­க­ளைக் கூறிய 69 வயது சிங்­கப்­பூ­ரர் பீதாம்­ப­ரன் திலீப்­பிற்கு நேற்று ஆறு வாரச் சிறைத்­தண்­டனை விதிக்­கப்­பட்­டது.

தன்­மீது சுமத்­தப்­பட்ட துன்­பு­றுத்­தல் குற்­றச்­சாட்­டு­கள் இரண்டை அவர் ஒப்­புக்­கொண்­டார். வேண்­டு­மென்றே ஒரு­வ­ரின் இன உணர்­வைக் காயப்­ப­டுத்­தும் வார்த்­தை­க­ளைக் கூறிய குற்­றச்­சாட்­டை­யும் அவர் ஒப்­புக்­கொண்­டார்.

சென்ற ஆண்டு ஜூன் 9ஆம் தேதி கிள­மெண்டி பொது நூல­கத்­தில் உள்ள குப்­பைத் தொட்­டி­யில் பீதாம்­ப­ரன் எச்­சில் துப்­பி­னார். துப்­பு­ர­வா­ளர் ஒரு­வர் இதுபற்றி நூலக நிர்­வா­கத்­தி­டம் புகா­ர­ளித்­தார். அதை­ய­டுத்து இவ்­வாறு செய்­வது சுகா­தா­ர­மற்ற செயல் என்று கூறிய நூலக அதி­காரி கீத் லிம்மை பீதாம்­ப­ரன் இன அடிப்­ப­டை­யில் இழிவாகப் பேசி­ய­தா­கக் கூறப்­பட்­டது.

அடுத்து, சென்ற ஜூலை 22ஆம் தேதி, மரின் பரேட் பல­துறை மருந்­தக அதி­காரி சியோக் லே இய­னி­டம் அவ­ம­திக்­கும் சொற்­களை பீதாம்­ப­ரன் கூறி­ய­தா­கத் தெரி­விக்­கப்­பட்­டது. பின்­னர் கடந்த அக்­டோ­பர் 15ஆம் தேதி அதே பல­துறை மருந்­த­கத்­தின் மருந்து விநி­யோக முகப்­பில் இருந்த மருந்­தா­ளர் ர­ஸல் லிம்­மி­ட­மும் இன அடிப்­ப­டை­யில் அவ­ம­திக்­கும் சொற்­களை பீதாம்­ப­ரன் கூறி­ய­தா­கத் தெரி­விக்­கப்­பட்­டது.

சிங்­கப்­பூ­ரின் இன நல்­லி­ணக்­கத்­தைக் கட்­டிக்­காப்­ப­தற்கு இத்­த­கைய சம்­ப­வங்­க­ளைக் கடு­மை­யா­கக் கையாள்­வது அவ­சி­யம் என்று நீதி­மன்­றம் தெரி­வித்­தது. பீதாம்­ப­ரன் ஏற்­கெ­னவே 2005ஆம் ஆண்­டும் குற்­றச்­செ­யல் செய்­த­வர் என்­ப­து­டன் 2017ல் பேருந்து ஓட்­டு­நர் ஒரு­வ­ரைத் தாக்­கி­ய­தற்­காக ஆறு வாரச் சிறை விதிக்கப்பட்டது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!