ஏர் இந்தியாவுக்கு பொறுப்பு ஏற்கவுள்ள ஸ்கூட் தலைமை நிர்வாகி

ஸ்கூட் விமான நிறுவனத்தின் தலைமை நிர்வாகி கேம்ப்பெல் வில்சன் ஏர் இந்தியாவின் தலைமை நிர்வாகியாகப் பொறுப்பு ஏற்கவுள்ளார்.

திரு வில்சன் ஜூன் 15ஆம் தேதி ஸ்கூட் நிறுவனத்திலிருந்து விலகுவார் என்று சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் வியாழக்கிழமை (மே 12) அன்று கூறியது.

டாட்டா நிறுவனத்தின் கைக்கு வந்திருக்கும் ஏர் இந்தியாவின் தலைமை நிர்வாகியாகவும் நிர்வாக இயக்குநராகவும் திரு வில்சன் பதவி ஏற்பார்.

நியூசிலாந்தில் பிறந்து வளர்ந்த 50 வயது திரு வில்சன், விமானத் துறையில் 26 ஆண்டு அனுபவம் பெற்றவர்.

முழுக் கட்டண விமான நிறுவனங்கள், குறைந்தக் கட்டண விமான நிறுவனங்கள் இரண்டிலும் பணியாற்றிய அனுபவம் உள்ளவர் அவர்.

திரு வில்சன், சிங்கப்பூர் விமான நிறுவனத்தில் அதிக அனுபவம் வாய்ந்த மூத்த நிர்வாகிகளில் ஒருவர் என்று எஸ்ஐஏவின் தலைமை நிர்வாகி கோ சூன் போங் கூறினார்.

எஸ்ஐஏ குழுமத்தில் திரு வில்சன் பல முக்கிய நிர்வாகப் பொறுப்புகளை வகித்து பெரும் பங்காற்றி இருப்பதாக திரு கோ கூறினார்.

திரு வில்சனுக்குப் பதில் எஸ்ஐஏயில் பல்லாண்டுகள் பணியாற்றி வரும் திரு லெஸ்லி திங் ஸ்கூட் நிறுவனத்தின் புதிய தலைமை நிர்வாகியாகப் பொறுப்பேற்க உள்ளார்.

திரு திங், விற்பனை, சந்தைப்படுத்துதல் துறை மூத்த துணைத் தலைவராகப் பணியாற்றுகிறார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!