கட்டண உயர்வை நீட்டிக்கும் கம்ஃபர்ட்டெல்குரோ

கம்ஃபர்ட்டெல்குரோ, அதன் டாக்சி சேவைகளுக்கான ஒரு காசு பயணக் கட்டண உயர்வை நீட்டிக்கிறது.

அதன்படி கட்டண உயர்வு வரும் ஜூலை மாதம் கடைசிவரை நடப்பில் இருக்கும்.

எரிபொருள் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால் இந்நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

இந்தத் தற்காலிக கட்டண உயர்வு சென்ற மாதம் நான்காம் தேதியன்று நடைமுறைப்படுத்தப்பட்டது.

இனி அது வரும் ஜூலை மாதம் 31ஆம் தேதி இரவு 11.59 மணிவரை நடப்பில் இருக்கும்.

'ஃபிளேக் டவுன் ஃபேர்' எனும் முன்னதாகவே நிர்ணயிக்கப்பட்ட டாக்சி பயணத்தின் தொடக்கக் கட்டணம் கடந்த மார்ச் மாதம் ஒன்றாம் தேதியன்று உயர்த்தப்பட்டது.

அதில் எந்த மாற்றமும் இல்லை என்று கம்ஃபர்ட்டெல்குரோ கூறியது.

 

 

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!