ஓவியர் கோ பெங் குவாங்கின் கைவண்ணத்தில் ‘இந்தியா’

சிங்கப்பூரின் ஆக உயரிய கலை விருதான கலாசாரப் பதக்கத்தைப் பெற்றுள்ள மூத்த உள்ளூர் ஓவியர் கோ பெங் குவாங்,85, சீன பாணி ஓவியர் என்றபோதும் அவரது அண்மைய சில படைப்புகளில் இந்திய சாயலைப் பார்க்கலாம். அப்படிப்பட்ட படைப்புகளில் ஒன்றான “இந்தியா” என்ற ஓவியம், வெள்ளிக்கிழமை (மே 20) அன்று தொடங்கும் திரு கோவின் கண்காட்சியில் இடம்பெறுகிறது.

2015ல் சில உள்ளூர் ஓவியர்களுடன் தமது 78வது வயதில் முதன்முறையாக இந்தியா சென்றார் திரு கோ.

“நான் பார்த்த இடங்களில் எனக்கு ஆகப் பிடித்தமானது ஜோத்பூர். எனக்கு நீல நிறம் மிகவும் பிடிக்கும். அதனால் நீல நகரம் என அழைக்கப்படும் அந்த இடம் என்னுள் அமைதியை உருவாக்கியது,” என்று அவர் கூறினார். தமது இந்தியப் பயணத்தின் தாக்கத்தில் அதே ஆண்டில் ‘இந்தியா’ எனும் ஓவியத்தைத் தீட்டினார்.

அரிசியால் ஆன காகிதங்களை இந்த ஓவியத்திற்காகத் திரு கோ பயன்படுத்தினார். அந்தக் காகிதங்கள், இந்தியப் பெண்கள் அணியும் சேலைகளை நினைவு படுத்தும் விதத்தில் இருப்பதாக அவர் கூறினார்.

இந்திய ஓவியங்களிலும் கைவினைக் கலையிலும் பல்வேறு வண்ணங்கள் மிகச் சிறப்பாக ஒன்றுசேர்க்கப்பட்டு பயன்படுத்தப்படுவதாக திரு கோ புகழ்ந்தார்.இந்தியாவுக்கு மீண்டும் செல்லும் வாய்ப்பு கிடைத்தால் விடப்போவதில்லை என்றார் அவர்.

திரு கோவின் கலைப்பயணம், 1950களில் ஹுவா சோங் உயர்நிலைப் பள்ளியில் புகழ்பெற்ற ஓவிய ஆசிரியர் சென் வெய்யில் வழிகாட்டுதலுடன் தொடங்கியது. 1962ல் அவர் அமெரிக்காவுக்குச் சென்று கலைப்படைப்புகளைக் கண்காட்சிகளில் காண்பித்தபோது அவரது புகழ் வளர்ந்தது. 1989ல் சிங்கப்பூரில் கலாசாரப் பதக்கத்தைப் பெற்ற திரு கோவின் 85 படைப்புகளைக் காட்டும் #GBK85 ஓவியக் கண்காட்சியை நேற்று அதிபர் ஹலிமா யாக்கோப் அதிகாரபூர்வமாக தொடங்கி வைத்தார்.

வளமான கற்பனைத்திறனுடன் சாதனைகளை வாழ்நாள் தோறும் புரிந்துவந்த திரு கோ, சிங்கப்பூரைப் பெருமைப்படுத்தியுள்ளதாகவும் பல தலைமுறையினருக்கு உற்சாகம் தந்திருப்பதாகவும் திருவாட்டி ஹலிமா பாராட்டினார்.

“ கலை, சமூகங்களை ஒன்றிணைப்பதுடன் மனதிற்கு உற்சாகம் அளிக்கிறது. நம் மரபு, விழுமியங்கள், அடையாளங்கள் ஆகியவற்றை நமக்குப் புலப்படக் கூடிய வெளிப்பாடுகளாக மாற்றுவது கலை,” என்றார் அதிபர்.

கொன்கோர்ட் சென்டென்னியல் ஹோட்டலில் இக்கண்காட்சி நாளை (மே 20) முதல் மே 29ஆம் தேதிவரை நிகழும். காலை 11 மணி முதல் இரவு 9 மணி வரை கண்காட்சி கட்டம் கட்டமாகத் திறந்திருக்கும். பெரியவர்களுக்கான பொது நுழைவுக்கட்டணம் 13.65 வெள்ளி.

கலாரசனையை உயர்த்தும் தொழில்நுட்பம்

இந்தக் கண்காட்சிக்கென்றே ‘ஆர்ட் எஃப்’ என்ற செயலி, வருகையாளர்களுக்குச் சிறப்பாக உருவாக்கப்பட்டுள்ளது. உண்மைப் படங்களுடன் 11 மெய்நிகர் ஓவியங்களையும் இந்தச் செயலிகளின் வழி ஹோட்டல் சுவர்களில் வருகையாளர்கள் பார்க்க முடியும். இந்த 11 மெய்நிகர் படைப்புகளில் நான்கு, ‘என்எஃப்டி’ எனப்படும் மின்னிலக்கப் பேரேடுகளாகவும் (NFT) இடம்பெற்றுள்ளன.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!