புக்கிட் மேரா பிளாக்கில் உள்ள அனைவருக்கும் காசநோய் பரிசோதனை

புளோக் 2, ஜாலான் புக்கிட் மேராவில் உள்ள குடியிருப்பாளர்கள், கடைக்காரர்கள் ஆகியோர் காசநோய் சோதனை எடுத்துகொள்ளுமாறு சுகாதார அமைச்சு அறிவுறுத்தியுள்ளது. 

பிப்ரவரிக்கும் மார்ச்சுக்கும் இடைப்பட்ட காலக்கட்டத்தில் இந்தப் புளோக்கில் சேர்ந்த ஏழு பேருக்குக் காசநோய் தொற்றியிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. 

குடியிருப்பாளர்களின் வசதிக்காக, அவர்கள் பரிசோதனையை வீட்டிலே செய்துகொள்ளலாம். இச்சோதனை இலவசமாக செய்யப்படும்.

நெருங்கிய தொடர்பு இல்லாதவர்களுக்கு இந்நோய் பரவும் ஆபத்து மிகக் குறைவு என்பதால், இந்த வட்டாரத்துக்கு அவ்வப்போது வருபவர்கள் சோதனை செய்துகொள்ள தேவையில்லை என்று சுகாதார அமைச்சு கூறியது. 

காசநோயானது முக்கியமாக நுரையீரலைப் பாதிக்கும் தீவிர தொற்று நோய். இருமல், தும்மல் மூலம் காற்றில் பரவும் சிறிய திரவத் துளிகளால் இந்நோய் பரவுகிறது.

இது அதிகம் பாதிக்கும் தொற்றுநோயாக இருந்தாலும், சிகிச்சை தொடங்கியதும் நோயாளிகள் விரைவாக தொற்றுநோயற்றவர்களாக மாறுகிறார்கள்.
 

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!