போதைப் பொருள் கடத்தியதாகக் குற்றஞ்சாட்டப்பட்ட இருவர் விடுதலை: மேல்முறையீட்டு நீதிமன்றம் 

போதைப் பொருள் கடத்தியதாகக் குற்றஞ்சாட்டப்பட்ட இருவரை மேல்முறையீட்டு நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது. குற்றஞ்சாட்டப்பட்ட ஒருவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்தது.

தலைமை நீதிபதி சுந்தரே‌ஷ் மேனன் உள்ளடக்கிய மூன்று நீதிபதிகள் கொண்ட குழு மேல்முறையீட்டைக் கேட்டது.

சிங்கப்பூரரான ராஜ் குமார் அய்யாசாமி, 40 தமக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை எதிர்த்து கொடுத்த மனுவை நீதிபதிகள் ஏற்றுக்கொண்டனர்.
அதோடு மலேசியரான ராமதாஸ் பொன்னுசாமிக்கு, 41 விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையையும், 15 பிரம்படிகளையும் நீதிமன்றம் ரத்து செய்தது.

குறைந்தது 1.875 கிலோ கஞ்சா கடத்தியதாக இருவர் மீது முன்னதாகக் குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.

செப்டம்பர் 21, 2015ஆம் ஆண்டு ராமதாஸ் ராஜ்க்கு ஒரு பையைக் கொடுத்ததைப் போதைப் பொருள் ஒழிப்புப் பிரிவு அதிகாரிகள் கண்டனர்.

தாம் ஒரு விதமான புகையிலையைக் கேட்டிருந்ததாகவும் தமக்குக் கொடுக்கப்பட்டது கஞ்சா என்று தமக்குத் தெரியாது என்றும் ராஜ் தமது வாக்குமூலத்தில் குறிப்பிட்டிருந்ததார்.

தாம் ராஜுக்குக் கொடுத்த பையில் கஞ்சா இருப்பது தனக்குத் தெரியாது என்று ராமதாஸ் சொன்னார்.

ஜூன் 2020ல் இருவரும் குற்றவாளிகள் என் தீர்ப்பளிக்கப்பட்டது.

ராஜுக்கு மரண தண்டனையும், ராமதாஸுக்கு ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டது.

இருவருடைய மனுவை இன்று கேட்ட மேல்முறையீட்டு நீதிமன்றம் சாட்சிகள் அளித்த ஆதாரத்தின் அடிப்படையில் இருவருடைய தண்டனையை ரத்து செய்வதாகக் கூறியது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!