வெறுப்புப் பேச்சை சிங்கப்பூர் சகிக்காது: தியோ சீ ஹியன்

வெறுப்புப் பேச்சை சிங்கப்பூர் சகித்துக்கொள்ளாது என்று மூத்த அமைச்சர் தியோ சீ ஹியன் கூறியுள்ளார்.

இணையத்தில் வெறுப்புப் பேச்சைத் தடுக்க முடியாவிட்டாலும், அது நாட்டுக்குள் வருவதைத் தடுக்கலாம் என்றார் அவர்.

தீவிரவாதம் தொடர்பான பேச்சுக்குக் கடுமையான விளைவுகள் உண்டு என்றும் பயங்கரவாதத்தைக் கட்டுப்படுத்த சமூகம் எடுக்கும் முயற்சிகளைப் பற்றியும் அமைச்சர் பேசினார்.

இணையத்தைப் பயன்படுத்துவோர் குறிப்பாக இளைஞர்கள் தீவிரவாதம் மற்றும் வெறுப்புப் பேச்சுக்குச் செவிசாய்க்காமல், நம்பகமான சமய அதிகாரிகளின் வழிகாட்டுதலைப் பெறவேண்டும் என்றார் அமைச்சர்.

சமய மறுவாழ்வுக் குழு ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் தேசியப் பாதுகாப்பு ஒருங்கிணைப்பு அமைச்சராகவும் இருக்கும் திரு தியோ உரையாற்றினார்.

இந்தோனீசிய போதகர் அப்துல் சோமத் பத்துபாரா தனது ஆதரவாளர்களைச் சிங்கப்பூருக்கு எதிராக சமூக ஊடகங்களில் தூண்டிவிட்டதை மூத்த அமைச்சர் குறிப்பிட்டார். சென்ற மாதம் அப்துல் சோமத் சிங்கப்பூருக்குள் வர அனுமதி மறுக்கப்பட்டது. அவர் போதனைகளில் பிற மதங்களை இழிவுபடுத்தியதும் தற்கொலை தாக்குதல்கள் முறையானவை என்றும் அவர் கூறியிருந்தது அதற்குக் காரணம்.

முஸ்லிம்களுக்கு எதிராக சிங்கப்பூர் செயல்படுகிறது என்று சோமத்தும் அவரது ஆதரவாளர்கள் கூறும் குற்றச்சாட்டுகள் முற்றிலும் தவறானவை என்றும் ஒரு மத போதகர் எந்தவொரு சமயத்தை இழிவாகப் பேசுவதை சிங்கப்பூர் சகித்துக்கொள்ளாது என்றார் திரு தியோ.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!