செய்திக்கொத்து

சிங்கப்பூர்-இந்தோனீசியா ஒத்துழைப்பு தொடர்பில் கலந்துரையாடல்

இரண்டு நாள் பணி நிமித்தப் பயணம் மேற்கொண்டு சிங்கப்பூர் வந்த இந்தோனீசியப் பொருளியல் விவகார ஒருங்கிணைப்பு அமைச்சர் அயிர்லங்கா ஹர்டார்ட்டோ, பிரதமர் லீ சியன் லூங்கை இஸ்தானாவில் சந்தித்தார்.

நேற்று முன்தினம் நடந்த சந்திப்பில் இருதரப்பு உறவுகள் குறித்துக் கலந்துரையாடியதாகத் திரு லீ ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார்.

மின்னிலக்கப் பொருளியல், புதுப்பிக்கப்படும் எரிசக்தி, நீடித்த நிலைத்தன்மை, ஊழியர் திறன் மேம்பாடு ஆகியவற்றுக்கு இரு நாடுகளும் முன்னுரிமை தருவதாகவும் இந்தத் துறைகளில் இருதரப்புத் தொடர்பை வலுப்படுத்திக்கொள்ள வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

'ஜி-20' தலைமைத்துவத்தை இந்தோனீசியா ஏற்பதற்கு சிங்கப்பூரின் ஆதரவை மீண்டும் வலியுறுத்திய பிரதமர் லீ, வரும் நவம்பர் மாதம் பாலியில் 'ஜி-20' உச்சநிலை மாநாட்டை வெற்றிகரமாக ஏற்றுநடத்த இந்தோனீசியாவிற்கு வாழ்த்து தெரிவித்தார்.

சிங்கப்பூரில் மூன்றாவது முறையாக புளூம்பெர்க் பொருளியல் கருத்தரங்கு

புளூம்பெர்க் நிறுவனம் ஏற்பாடு செய்யும் வருடாந்தர புளும்பெர்க் புதிய பொருளியல் கருத்தரங்கு இந்த ஆண்டு நவம்பர் மாதம் 14ஆம் தேதி முதல் 17ஆம் தேதி வரை சிங்கப்பூரில் நடைபெறவிருக்கிறது.

ஐந்தாம் ஆண்டாக நடைபெறும் இந்தக் கருத்தரங்கை சிங்கப்பூர் ஏற்றுநடத்துவது இது மூன்றாவது முறை.

உலகளாவிய சவால்களுக்குத் தீர்வுகாண உலகெங்குமிருந்து வர்த்தகத் தலைவர்களும் அரசாங்கத் தலைவர்களும் இதில் பங்குபெறுவது வழக்கம்.

பாலியில் 'ஜி-20' உச்சநிலை மாநாடு, பேங்காக்கில் 'ஏப்பெக்' உச்சநிலை மாநாடு ஆகியவை நடைபெறும் காலகட்டத்திலேயே புளூம்பெர்க் கருத்தரங்கிற்கு இந்த ஆண்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சென்ற ஆண்டும் சிங்கப்பூர் இந்தக் கருத்தரங்கை ஏற்றுநடத்தியது. கடுமையான விதிமுறைகளைப் பின்பற்றி உலகெங்கும் இருந்து ஏறக்குறைய 300 வர்த்தக, அரசாங்கத் தலைவர்கள் அதில் கலந்துகொண்டனர்.

பிரதமர் லீ சியன் லூங், பெரும் பணக்காரர் பில் கேட்ஸ், அமெரிக்காவின் முன்னாள் வெளியுறவு அமைச்சர் ஹில்லரி கிளிண்டன் போன்றோரும் அந்தக் கருத்தரங்கில் கலந்துகொண்டனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!