ஓசிபிசி மோசடி: ‘குற்றவாளிக்கு கண்காணிப்பு ஆணை சரிவராது’

ஓசி­பிசி தொடர்­பான மோச­டி­களில் ஈடு­பட்டு $12.8 மில்­லி­யன் வெள்ளி இழப்பு ஏற்­ப­டுத்­திய லியோங் ஜுன் ஸியான் என்­ப­வரை கண்­கா­ணிப்பு ஆணை­யு­டன் விடு­விக்­கும்­படி பரிந்து­ரைக்க முடி­யாது என்று நீதி­மன்­றத்­தில் நேற்று கூறப்­பட்­டது.

மாறாக, அவ­ருக்கு சீர்­தி­ருத்தப் பயிற்சித் தண்­ட­னைக்கு பரிந்­து­ரைக்­க­லாம் என்று நீதி­மன்­றத்­தில் தெரி­விக்­கப்­பட்­டது.

மேலும், கண்­கா­ணிப்பு ஆணை பிறப்­பிக்­கும் சாத்­தி­யம் தொடர்­பான அறிக்­கை­யில் லியோங் குற்­றச்­சாட்டு தொடர்பாக நீதி­மன்­றத்­தில் ஒப்­புக்­கொண்­டதை பின்­னர் மறுத்தி­ருப்­ப­தா­க­வும் தெரி­ய­வந்­துள்­ளது.

இதில் ஒன்று தமது குற்­றங்­களின் தொடர்­பில் அனைத்­து­லக குற்­றக் கும்­பல்­கள் ஈடு­பட்­டி­ருப்­பது தமக்கு தெரி­யாது என்று லியோங் தெரி­வித்­துள்­ளார். ஆனால், நீதி­மன்­றத்­தில் திரு லியோங் குற்றத்தை ஒப்­புக்­கொண்­ட­போது அனைத்­து­ல­கக் குற்­றக் கும்­பல்­க­ளு­டன் தொடர்பு இருந்­ததை ஒப்புக்­கொண்­டுள்­ளார்.

இது குறித்து லியோங்­கு­டன் கலந்­தா­லோ­சிப்­ப­தற்கு கால அவ­கா­சம் வேண்­டு­மென்று அவரது தற்­காப்பு வழக்­க­றி­ஞர்­கள் கேட்­டுள்­ள­னர். லியாங்­குக்கு இந்த ஜூன் மாதம் தண்­டனை விதிக்­கப்­படும்.

ஏப்­ரல் 20ஆம் தேதி கிரி­மி­னல் நடத்தை, கல­வ­ரம் தொடர்­பான தலா இரண்டு வழக்­கு­களில் லியோங் குற்­றத்தை ஒப்­புக்­கொண்­டார்.

குற்­றக் கும்­பல்­கள் தடுப்­புச் சட்டத்­தின்கீழ் வரும் ஒரு குற்­றச்­சாட்­டை­யும் லியோங் ஒப்­புக்­கொண்டார். தண்­ட­னை­வி­திப்­பின்­போது இது­வும் கருத்­தில் கொள்­ளப்­படும்.

பிரை­டன் செங் மிங் யான், 19, ஜோவன் சோ ஜுன் யான், 20, முஹம்­மது கைரு­டின் எஸ்­கந்­த­ரியா, 20, மற்­றும் லிம் கை ஸே, 21, ஆகி­யோர் லியோங்­கு­டன் இக்­குற்றச்­செ­யல்­களில் ஈடு­பட்ட மேலும் அறு­வர். மேலும் இரு­வர் 18 வய­துக்­குக் குறைந்­த­வர்­க­ளாக இருப்­ப­தால் அவர்­க­ளின் பெயர்­களை வெளி­யிட முடி­யாது.

லியோங்­கிற்கு கண்­கா­ணிப்பு ஆணை பரிந்­து­ரைக்­கப்­ப­டா­ததற்­கான கார­ணங்­களை அர­சாங்­கத் துணை வழக்­க­றி­ஞர் வெளி­யி­ட­வில்லை.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!