குடும்பத்துடன் குதூகலம்

"ஒன்றாக நேரத்தைச் செலவழிப்பது, ஒருவருக்கொருவர் ஒத்துழைப்பும் ஆதரவும் கொடுப்பது மற்றும் புரிந்துணர்வுடன் நடந்துகொள்வது என்பது ஒரு குடும்பத்தின் பிணைப்பை வலுப்படுத்துவதற்குத் தேவையான முக்கிய தூண்கள்" என்று 'ஒரு குடும்பத்திற்கு இன்றியமையாத ஒன்று என்றால் என்ன?' என்ற கேள்விக்கு மிக துல்லியமாக பதிலளித்தார் 36 வயது தாயான, திருமதி சிந்தியா மரியாள்.

ஆசிரியராகப் பணிபுரியும் திருமதி சிந்தியாவிற்கும், அவரின் கணவர் திரு ராகேஷ் தங்கவேலுக்கும் 3 மற்றும் 14 வயதில் 2 மகன்கள் உள்ளனர். 65 மற்றும் 60 வயதில் இருக்கும் திருமதி சிந்தியாவின் பெற்றோரான திரு பிச்சைமுத்து சாலமன் மற்றும் திருமதி சரோஜா ராசு தனது மகளின் குடும்பத்துடன் நேரத்தை இன்பமான முறையில் செலவழிப்பது வழக்கம்.

"ஒவ்வொருவரின் பிறந்தநாள் அன்று அனைவரும் ஒன்று கூடி கொண்டாடுவது, என் பேரன்களுடன் தரமான நேரத்தை உரையாடுவதிலும், விளையாடுவதிலும் செலவழிப்பது போன்ற நடவடிக்கை, எனக்கும் அவர்களுக்கும் இருக்கும் பிணைப்பை மேம்படுத்துகிறது", என்று அன்புடன் கூறினார் திரு சாலமன்

"ஒரு குடும்ப பிரச்சனையைத் தீர்ப்பதற்கு முக்கியமான ஒன்று உரையாடல். உரையாடல் என்பது ஒரு சதுரங்க விளையாட்டு போன்றது. ஒவ்வொரு நகர்வும் வெவ்வேறு தாக்கங்களை ஏற்படுத்தும். ஆகவே நாம் மனதளவில் சரியான நிலையில் இல்லையெனில் நமது குடும்ப பிரச்சினையைப் பற்றி உரையாடுவதில்லை. நிதானமான நிலையில் இருக்கும்போதுதான் சரியான வார்த்தைகளைத் தேர்ந்தெடுத்து நல்ல முடிவுக்கு வருவோம்" என்று 'குடும்ப பிரச்சினையை எவ்வாறு தீர்ப்பது?' என்ற கேள்விக்கு அறிவுபூர்வமாக பதிலளிக்கிறார் திருமதி சிந்தியா.

சமுக மற்றும் குடும்ப மேம்பாட்டு அமைச்சு (MSF) 2022ஆம் ஆண்டைக் சிங்கைக் குடும்பங்களைக் கொண்டாடும் ஆண்டாக (YCF) அர்ப்பணித்துள்ளது.

வாழ்வுக்காக குடும்பங்கள் மன்றம் (FFL) ஆதரவில் இயங்கியுள்ள குடும்ப தினம், குடும்பத்தின் முக்கியத்துவத்தைச் சமூக அளவில் கொண்டாடுகிறது.
குடும்பப் பிணைப்பை வலுவாக்குவதற்காக ஆண்டு முழுவதும் குடும்ப பிணைப்பின் மேம்பாட்டு நடவடிக்கைகள், நிகழ்வுகள் மற்றும் திட்டங்களைச் சிங்கப்பூரில் வசிக்கும் குடும்பங்கள் ஆவலுடன் எதிர்பார்க்கலாம்.

"என் குடும்பத்தை எந்த நேரத்திலும் நெருக்கமாக வைத்துக் கொள்வது எனக்கு மிகவும் முக்கியம். ஏனெனில், அது எனக்கு மட்டும் உதவாமல் நம் இளைய தலைமுறையையும் உதவும். நெருக்கமாகப் பழகும்போது பிள்ளைகளுக்கு சரியான வழிகாட்டலையும் விழுமியங்களையும் கற்றுக்கொடுக்கிறோம்" என்று திரு ராகேஷ் வலியுறுத்துகிறார்.

தங்களின் குடும்பத்துடன் தரமான நேரத்தைக் களிக்கும் விதமாக தேசிய குடும்ப வாரத்தை(NFW) ஒட்டி சமூக மற்றும் குடும்ப மேம்பாட்டு அமைச்சு, 4-12 ஜூன் வரை பல குடும்ப நடவடிக்கைகளை ஏற்பாடு செய்துள்ளது. குடும்பத்தின் இன்றியமையாததைப் பற்றியும் குடும்பப் பிணைப்பை மேலும் எவ்வாறு வலுப்படுத்தலாம் என்பதனைப் பற்றி உதவிக் குறிப்புகள் இந்த நடவடிக்கைகள் மூலம் பகிர்ந்து கொள்ளப்படும்.
"நாம் 'சென்டோசைட்ஸ்' என்ற நடவடிக்கையில் கலந்து கொள்வதாக இருக்கிறோம்" என்ற திருமதி சிந்தியா ஆவலுடன் தெரிவித்தார். "நம் குடும்பத்தில் சிறுவயது முதல் பெரியவர்கள் வரை இருப்பதனால் இந்த நடவடிக்கையை நமக்கு தகுந்ததாக இருக்கும் என நம்புகிறேன்" என்று குறிப்பிட்டிருந்தார்.

ஒரு குடும்பத்திற்கு பொக்கிஷமான ஒன்று குடும்ப ஒற்றுமை, புரிந்துணர்வு மற்றும் குடும்ப ஆதரவு. இது அனைத்தும் இருக்கும்பொழுது எனக்கு அன்பும் அரவணைப்பும் எப்போதும் இருக்கும் என்பதையும், நான் விழுந்தால் என்னை தாங்கிக் கொள்ள என் குடும்பம் இருப்பார்கள் என்னும் எண்ணத்தையும் எனக்கு அளிக்கும்" என்று திரு சிந்தியாவின் மகனான ஷொன் ரேனல்ட் தெரிவித்தார்.

திருமதி சிந்தியாவின் குடும்பத்தைப் போல் அனைத்து குடும்பங்களும் வரும் தேசிய குடும்ப வாரத்தில் பங்கேற்று மகிழ்ச்சிபெற வேண்டுகிறோம்.


பெக்கி முயலின் சாகசம்

'பெக்கி முயலின் சாகசம்' என்ற தலைப்பில், இளஞ்சிவப்பு தொப்பி அணிந்திருக்கும் முயலுடன் உல்லாசமான சாகசப் பயணத்தில் இணையுங்கள்! நம் அக்கம் பக்கம் வட்டாரங்களைப் பிரதிபலிக்கும் விதமாக உருவாக்கப்படும் விளையாட்டு இடங்களில் ஆடி மகிழவதற்கும், திருமணம் மற்றும் பெற்றோர் அணுகுமுறைகளை ஒட்டி ஒரு கேளிக்கையான உரையாடலில் ஈடுபடுவதற்கும் குடும்பங்கள் தயாராகலாம்!

தேசிய குடும்ப வாரம்
"குடும்பத்துடன் நேரத்தைக் களிக்க நாம் என்றும் தயார்" என்ற கருப்பொருளில் தேசிய குடும்ப வாரம், 'சன் டெக் கன்வென்ஷன் மண்டபத்தில் , 4-5 ஜூன்(சனி மற்றும் ஞாயிறு) வரை நடைபெறும், இந்த ஆண்டின் மிகப்பெரிய குடும்ப நிகழ்வுகளில் ஒன்றான வேடிக்கையான குடும்பத் திருவிழா ஒன்றிற்குக் குடும்பங்களை இரு கரங்கள் கூப்பி வரவழைக்கிறது. இளஞ்சிட்டுகள் முதல் முதியவர்கள் வரை, அனைத்து வயதினர்களுக்கும் வடிவமைக்கப்பட்ட இந்த திருவிழாவில், கேளிக்கை நிறைந்த நடவடிக்கைகளையும், பட்டறைகளையும் எதிர்பார்க்கலாம். இரண்டு பெரிய கண்காட்சியை கொண்டுள்ள இந்த விழாவில் 5 முக்கிய அங்கங்களை/தொகுதிகளை எதிர்பார்க்கலாம்: 'வீடு', 'அக்கப்பக்கம் நிலையம்', 'பூங்கா மற்றும் விளையாட்டு மையம்' இறுதியாக, 'பெக்கி' முயலின் சாகசத்தில் மட்டும் பயணிக்காமல் பெக்கி முயலைச் சந்திப்பதற்கும் வாய்ப்பு கிட்டும்! இந்த விழாவிற்கான நுழைவு வரையறுக்கப்பட்டுள்ளது ஆகவே இப்போதே, 'go.gov.sg/CelebratingSGFamilies' என்ற இணைய பக்கத்தில் உங்கள் வரவைப் பதிவு செய்யலாம். இதற்கு, அனுமதி இலவசம்!

தேசிய குடும்ப வாரத்தின் கொண்டாட்டம் மற்ற தளங்களிலும் 5-12 ஜூன் நடைபெறுகின்றது. செயல் சார்ந்த நடவடிக்கைகளிலும், கதைசொல்லும் நடவடிக்கைகளிலும் பங்கேற்பதற்கு:
1)லாட் ஒன் மால்(கூரைத் தோட்டம்)
2)நார்த்பாயிண்ட் சிட்டி மால்(சவுத் ஏட்ரியம், நிலை 1, 5-9 ஜூன்)
3) ஹவர் டைம் பெனிஸ் ஆப்(வெஸ்தீவ் மார்கிட், நிலை 1)

குடும்ப விழுமியங்களான அன்பு, அக்கறை, பரிவு, அர்ப்பணிப்பு மற்றும் மரியாதைப் போன்றவற்றைக் கற்றுக்கொள்ளவதற்குச் சிறந்த தளமாக திகழ்கிறது இந்த நடவடிக்கைகள்.

தேசிய குடும்ப வாரம் ஒரு பரிசளிப்பு நிகழ்வை 8 கேபிட்டாலேண்ட் மால்களில்(4, 5, 11, 12 ஜூன்) நடத்தவிருக்கிறது. வார இறுதி நாட்களில், ஒரே நாளில் செய்த 'ஷாப்பிங்' ரசீதை அருகிலுள்ள சேவை முகப்புக்கு வழங்குவோருக்கு, அன்பளிப்பாக ஒரு 'பெக்கி' முயல் குடும்ப நடவடிக்கை பெட்டி ஒன்று வழங்கப்படும். கீழ் அறிவிக்கப்பட்டுள்ள இந்த இடங்களில் அந்த அன்பளிப்பை பெற்றுக்கொள்ளலாம். குறைந்தபட்ச அளவில் செலவு செய்வதற்கு தேவையில்லை, முதல் 100 பேர் இந்த அன்பளிப்பை வாங்கிக்கொள்ள வாய்ப்புண்டு, 'லாட் ஒன் மால்' தவிர்த்து (முதல் 250 பேர்)
1) பிடோக் மால்
2) புக்கிட் பஞ்சாங் பிளாசா
3) IMM பிள்டிங்
4) ஜெ கியுப்
5) ஜங்ஷன் 8
6) லாட் ஒன் மால்
7) டெம்பினீஸ் மால்
8) வெஸ்ட் கேட் மால்

வாழ்வுக்காக குடும்பங்கள் மன்றத்தின் கூட்டாளர்களால் (கேபிட்டலேண்ட் மால்கள், எஸ்பிளனேட்-தியேட்டர்ஸ் ஆன் தி பே, ஃபேர்பிரைஸ் குரூப், குளூக், சாஃப்ரா மற்றும் சென்டோசா) வழங்கப்படும் குடும்ப நடவடிக்கைகளையும் சலுகைகளையும் குடும்பங்கள் எதிர்பார்க்கலாம்.

திருமணங்கள் மற்றும் குடும்ப உறவுகளை வலுப்படுத்தும் நடவடிக்கைகாக கூட்டணி (AFAM), குடும்ப உறவை வலுப்படுத்துவதற்கு ஒர் உறுதிமொழியை தயாரித்துள்ளது. இந்த உறுதிமொழி, சிங்கப்பூரர்களைச் சிறு நடவடிக்கைகளின் மூலம் குடும்பப் பிணைப்பை மேம்படுத்த உதவுகிறது.

உறுதிமொழி

நான் குடும்பப் பிணைப்பை மேம்படுத்த:

  • ஒருவருக்கொருவர் செவிகொடுத்துக் கேட்போம்
  • ஒருவருக்கொருவர் நேரம் ஒதுக்குவோம்
  • ஒருவர்மேல் ஒருவர் அன்பும், பரிவும் அக்கறையும் காட்டுவோம்
  • ஒருவருக்கொருவர் மதிப்புக் கொடுப்போம், முக்கியமாக வேறுபாடுகளைத் தீர்க்கும்போது
  • நமது குடும்ப அங்கத்தினர்களை பாராட்டுவோம், அதை உறுதிப்படுத்துவோம்
  • நல்ல காலங்களிலும் கெட்ட காலங்களிலும் ஒருவருக்கொருவர் ஆதரவாக இருப்போம்

இந்த உறுதிமொழியை எடுக்க விரும்புவோர், https://go.gov.sg/ycf-pledge இணையத்தளம் வழி பதிவு செய்துக்கொள்ளலாம்.

குடும்பம் என்பது நமது வாழ்வில் ஓர் இன்றியமையாத தூண் என்பதையும் சமூகம் ஒன்று சேர்ந்து இந்த நடவடிக்கைகளில் கலந்து கொண்டு தங்களின் குடும்பங்களைக் கொண்டாடி ஆதரவைச் செலுத்துமாறு ஊக்குவிக்கிறது.

குடும்பங்களைக் கொண்டாடுவதற்கும், குடும்ப பிணைப்பை ஏற்படுத்துவதற்கும் முழு சமூக முயற்சியின் உதவி தேவை என்பதை ஞாபகப்படுத்துகிறது அமைச்சு.

குடும்ப தினத்திற்குப் பங்காளிதுவமாக பல சமூக அமைப்புகள் ஒன்றுக்கூடி ஆதரவளித்துள்ளது. குடும்பங்களை ஆதரிக்கவும் கொண்டாடவும் உறுதிமொழி பூண்ட இச்சமூக அமைப்புகள் இந்த நடவடிக்கைகளில் பங்கேற்பர்.
சிங்கப்பூர் அரசாங்கமும் 'மைட் ஃபொர் ஃபேமிலிஸ்' அதாவது குடும்பங்களின் நலனைக் கருதி உருவாக்கப்படும் ஒரு சமுதாயத்தைச் செதுக்குவதற்காக உறுதி பூண்டுள்ளது.

இந்தத் தகவலை உங்களுக்கு வழங்குவது:

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!