ஜெட்ஸ்டார் சேவை கூடுகிறது

உள்­ளூர் மலிவுக் கட்­டண விமான நிறு­வ­ன­மான ஜெட்ஸ்­டார் ஆசியா சிங்­கப்­பூ­ரில் இருந்து இந்த வட்­டா­ரத்­தில் இருக்­கும் ஆறு நகர்­களுக்கு இந்த மாதம் கூடு­த­லாக 11 வாராந்­திர சேவை­களை அறி­மு­கப்­ப­டுத்­தும்.

பாலி, டா நாங், மணிலா, பினாங்கு, புக்­கெட், நோம்பென் போன்ற பிர­ப­ல­மான நகர்க­ளுக்கு இடம்­பெ­றும் சேவை­கள் அவற்­றில் அடங்­கும்.

ஜெட்ஸ்­டார் நிறு­வ­னம் இம்­மாதம் 13ஆம் தேதி முதல் சிங்­கப்­பூ­ருக்­கும் பாலிக்­கும் இடை­யில் அன்­றாட விமா­னச் சேவை­க­ளைத் தொடங்­கும். பாலிக்கு இப்­போது வாரம் ஐந்து விமா­னச் சேவை­கள் நடக்­கின்­றன.

மணி­லா­வுக்கு ஒரு விமா­னச் சேவையை ஜெட்ஸ்­டார் நடத்­து­கிறது. ஜூன் 6 முதல் வாரம் கூடு­த­லாக மூன்று சேவை­கள் மணி­லா­வுக்கு இடம்­பெ­றும்.

அதா­வது, செவ்­வாய், வியாழன், சனிக்­கி­ழ­மை­களில் நாள் ஒன்­றுக்கு மணி­லா­வுக்கு இரண்டு சேவை­களை இந்த நிறு­வனம் நடத்­தும். பினாங்­கிற்­கான தனது வாராந்­திர சேவை­களை ஜெட்ஸ்­டார் இரு மடங்­காக்­கும்.

ஜூன் 6 முதல் வாரா­வா­ரம் புதிய மூன்று விமா­னச் சேவை­கள் இடம்­பெ­றும். நோம்பென், புக்­கெட், டா நாங் நகர்­கள் ஒவ்­வொன்­றுக்­கும் கூடு­த­லாக வாரம் ஒரு சேவை நடப்­புக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!