வருகையாளர்களின் நல்வாழ்வு முக்கிய அம்சம்

சிங்­கப்­பூ­ருக்கு அடுத்த ஐந்து முதல் பத்து ஆண்­டு­க­ளில் வரும் சுற்­றுப்­ப­ய­ணி­க­ளுக்கு வழங்­கப்­படும் முக்­கிய அம்­ச­மாக நல்­வாழ்வு விளங்­கும் என்று சிங்­கப்­பூர் பயணத்­து­றைக் கழ­கத் தலைமை நிர்­வாகி கீத் டான் நேற்று கூறி­னார்.

புதி­தாக அறி­மு­கம் செய்­யப்­பட்ட ஆரோக்­கி­யத் திரு­விழா போன்ற நிகழ்ச்­சி­கள் இதற்­கான இயக்­கத்­தைத் தொடங்­கி­வைக்­கும் என்­றார் அவர்.

இருப்­பி­னும் இந்­தத் துறை­யில் சிங்­கப்­பூ­ரின் புகழை மேம்­ப­டுத்த உள்­ளூர்த் தேவை­யும் கருத்­தில் கொள்­ளப்­ப­டு­வ­து­டன் மேம்­ப­டுத்­தப்­பட வேண்­டும் என்று திரு டான் குறிப்­பிட்­டார்.

கரை­யோ­ரப் பூந்­தோட்­டத்­தில் நடை­பெற்ற ஆரோக்­கி­யக் கருத்­த­ரங்­கில் அவர் உரை­யாற்­றி­னார்.

'என்­டர்­பி­ரைஸ் சிங்­கப்­பூர்' அமைப்பு ஏற்­பாடு செய்த இந்­நி­கழ்ச்­சி­யில் நகர்ப்­புற நல்­வாழ்வு நடு­வ­மாக சிங்­கப்­பூரை உரு­வாக்­கு­வது தொடர்­பான கலந்­து­ரை­யா­டல் இடம்­பெற்­றது.

வர்த்­த­கத் தலை­வர்­கள், துறை­சார்ந்த வல்­லு­நர்­கள், தொழில்­முறை நிபுணர்­கள் எனப் பல்­வேறு தரப்­பி­னர் இதில் கலந்­து­கொண்­ட­னர். மன­ந­லம், நோய்த்­த­டுப்பு மருத்­து­வம் உள்­ளிட்­ட­வற்­றில் சந்தை வாய்ப்­பு­கள், வாடிக்­கை­யா­ளர் தேவை போன்­ற­வற்றை அவர்­கள் பகிர்ந்­து­கொண்­ட­னர்.

சிங்­கப்­பூர் தற்­போது நல்­வாழ்­வுக்­கான இட­மா­கக் கரு­தப்­ப­ட­வில்லை. மாறாக உண­வுக்­குப் புகழ்­பெற்ற இட­மா­கவே கரு­தப்­படு­கிறது என்­றார் திரு டான்.

இந்த நிலையை மாற்­று­வ­தற்கு துறை­சார்ந்த நிறு­வ­னங்­க­ளுக்­கும் அர­சாங்க அமைப்­பு­க­ளுக்­கும் இடை­யி­லான கூட்டு முயற்­சி­கள் அவ­சி­யம் என்­றார் அவர்.

அப்­போ­து­தான் அடுத்த ஐந்து முதல் பத்து ஆண்­டு­களில் சிங்­கப்­பூர் உணவு, சுற்­று­லாத் தலங்­கள் ஆகி­ய­வற்­றுக்­காக மட்­டு­மின்றி நல்­வாழ்­வுக்­கான இட­மா­க­வும் கரு­தப்­படும் என்று திரு டான் வலி­யு­றுத்­தி­னார்.

ஆனால் உள்­ளூர்­வா­சி­க­ளுக்கு இதற்­கான ஏற்­பா­டு­கள் செய்­யப்­படு­வது மிக­வும் முக்­கி­யம் என்­றார் அவர்.

அவ்­வாறு இல்­லா­மல் வெளி­நாட்­டி­ன­ருக்கு மட்­டும் இத்­த­கைய அனு­ப­வத்தை ஏற்­ப­டுத்­து­வது சாத்­தி­ய­மில்லை என்று அவர் கூறி­னார்.

நேற்று தொடங்­கிய நல்­வாழ்­வுத் திரு­விழா இம்­மா­தம் 12ஆம் தேதி வரை நடை­பெ­றும். இத­னை­யொட்டி தீவு முழு­வ­தும் 130க்கும் அதி­க­மான நிகழ்ச்­சி­க­ளுக்கு ஏற்­பாடு செய்­யப்­பட்­டுள்­ளது. இவற்­றில் சில இல­வ­சம்.

சிங்­கப்­பூரை நல்­வாழ்­வுக்­கான நடு­வ­மாக உள்­ளூர்க்­கா­ரர்­களும் வெளி­நாட்­டி­ன­ரும் கருத வகை­செய்­யும் முயற்சி­களின் தொடக்­க­மாக இது அமை­யும் என்று சிங்­கப்­பூர் பய­ணத்­து­றைக் கழ­கம் குறிப்­பிட்­டது.

அடுத்த ஐந்து முதல் பத்து ஆண்டுக்கான சிங்கப்பூர் பயணத்துறையின் முக்கியத்துவம்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!