நீதிபதி சாவ் ஹிக் டின் அதிபர் ஆலோசனை மன்ற உறுப்பினராக நியமனம்

உச்ச நீதி­மன்­றத்­தின் முன்­னாள் மூத்த நீதி­ப­தி­யான திரு சாவ் ஹிக் டின் (படம்) அதி­பர் ஆலோ­சனை மன்ற உறுப்­பி­ன­ராக நிய­மிக்­கப்­பட்­டுள்­ளார்.

முன்­னாள் அமைச்­சர் எஸ். தன­பா­ல­னுக்­குப் பதி­லாக அவர் நிய­மிக்­கப்­பட்­டி­ருப்­ப­தாக இஸ்­தானா நேற்று வெளி­யிட்ட அறிக்கை குறிப்­பிட்­டது.

18 ஆண்­டு­கள் சேவை­யாற்­றிய திரு தன­பா­ல­னின் பத­விக்­கா­லம் இம்­மா­தம் 1ஆம் தேதி நிறை­வுற்­ற­தாக அறிக்கை தெரி­வித்­தது.

நீதி­பதி சாவ் ஹிக் டின் 55 ஆண்டுகால பொதுச் சேவைக்­குப் பிறகு சென்ற புதன்­கி­ழமை ஓய்­வு­பெற்­றார்.

சிங்­கப்­பூர் விடு­தலை அடைந்த பிறகு உச்ச நீதி­மன்­றத்­தின் தலைமை நீதி­ப­தி­க­ள் நால்­வ­ரின்­கீ­ழ் பணி­யாற்­றிய ஒரே நீதி­பதி என்ற சிறப்பு இவ­ரைச் சாரும்.

முன்­னு­தா­ரண நீதி­ப­தி­யாக விளங்­கிய அவர் உன்­ன­த­மான நீதி­பதி எனும் சொல்­லுக்­குப் பொரு­ளா­கத் திகழ்ந்­தார் என்று தலைமை நீதி­பதி சுந்­த­ரேஷ் மேனன் புகழ்ந்­து­ரைத்­தார்.

80 வய­தா­கும் நீதி­பதி சாவ், சிங்­கப்­பூ­ருக்­குச் சேவை­யாற்­றக் கிடைத்த வாய்ப்பு குறித்­துப் பெரு­மைப்­ப­டு­வ­தா­கக் கூறி­னார். சிங்­கப்­பூ­ரின் புகழ்­மிக்க நீதித் துறை­யில் அங்­கம் வகித்­த­தும் அதன்­வழி நாட்­டின் சட்ட இய­லுக்­குப் பங்­க­ளித்­த­தும் தம்­மைப் பெரு­மைப்­ப­டுத்­தும் வாய்ப்­பு­கள் என்­றார் அவர்.

நீதி­பதி சாவ்­வு­டன் மேலும் இரு­வ­ரும் அதி­பர் ஆலோ­சனை மன்ற உறுப்­பி­னர்­க­ளாக நிய­மிக்­கப்­பட்­டுள்­ள­னர். 'பேங்க் ஆஃப் சிங்­கப்­பூர்' வங்­கி­யின் தலைமை நிர்­வாகி பஹ்­ரென் ஷாரி, 'எர்னஸ்ட் அண்ட் யாங் அட்­வை­சரி'யின் முன்­னாள் நிர்வாக இயக்­கு­நர் மில்ட்­ரெட் டான் சிம் பெங் மேய் ஆகி­யோர் அவர்­கள்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!