‘மரணதண்டனைக் கைதி தட்சிணாமூர்த்தி தான் குறிவைக்கப்பட்டதாகக் கூறவில்லை’

மேல்­மு­றை­யீட்டு நீதி­மன்­றம் மே 30ஆம் தேதி வெளி­யிட்ட தீர்ப்­பில் 36 வயது தட்­சி­ணா­மூர்த்தி காத்­தை­யா­வின் தண்­டனை ஒரு நாள் தாம­த­மாக நிறை­வேற்­றப்­பட்­ட­தால் அவர் மட்­டும் மாறு­பட்ட வகை­யில் நடத்­தப்­பட்­ட­தா­கக் குறிப்­பிட்­டி­ருந்­தது குறித்­துத் தலை­மைச் சட்ட அதி­காரி அலு­வ­ல­கம் ('ஏஜிஓ') விளக்­க­ம­ளித்­துள்­ளது.

ஏப்­ரல் 29ஆம் தேதி தட்­சி­ணா­மூர்த்­தி­யின் மர­ண­தண்­டனை நிறை­வேற்­றப்­படும் என்று முடி­வெ­டுக்­கப்­பட்­ட­தில் அவர் மட்­டுமே பாதிக்­கப்­ப­டு­வார் என்­ப­தையே அந்­தத் தீர்ப்பு குறிப்­ப­தா­க­வும் அர­சாங்­கம் அவ­ரைக் குறி­வைத்து இவ்­வாறு நட­வ­டிக்கை எடுத்­த­தா­கப் பொருள்­படாது என்­றும் தலை­மைச் சட்ட அதி­காரி அலு­வ­ல­கப் பேச்­சா­ளர் கூறி­னார்.

தட்­சி­ணா­மூர்த்தி உள்­ளிட்ட 13 மர­ண­தண்­ட­னைக் கைதி­க­ளின் தனிப்­பட்ட கடி­தங்­க­ளின் தக­வல்­களை அரசு தலைமை சட்ட அதி­காரி அலு­வ­ல­கம் அனு­ம­தி­யின்றி வெளி­யிட்­ட­தன் தொடர்­பில் சிவில் வழக்­கில் தீர்ப்பை எதிர்­நோக்­கி­னர்.

ஏப்­ரல் 29ஆம் தேதி அவ­ரது மர­ண­தண்­ட­னையை நிறை­வேற்ற முடி­வெ­டுக்­கப்­பட்­ட­தால் மற்ற 12 கைதி­க­ளை­விட மாறு­பட்ட முறை­யில் தான் நடத்­தப்­ப­டு­வ­தா­க­வும் இதனை மறு­ஆய்வு செய்­ய­வேண்­டும் என்­றும் அவர் கோரி­யி­ருந்­தார்.

அத­னால் ஏப்­ரல் 28ஆம் தேதி அதன் முடிவு தெரி­யும்­வரை தட்­சி­ணா­மூர்த்­தி­யின் தண்­டனை நிறை­வேற்­றப்­ப­டு­வதை உயர் நீதி­மன்­றம் நிறுத்­தி­வைக்க உத்­த­ர­விட்­டது. மேல் முறை­யீட்டு நீதி­மன்­ற­மும் அதனை ஆத­ரித்­தது.

மர­ண­தண்­டனை விதிக்­கப்­பட்ட கைதி­கள் சட்­ட­ரீ­தி­யாக முன்­வைக்­கும் அனைத்து மனுக்­களும், அதி­பருக்கு அனுப்­பும் கருணை மனு­வும் நிரா­க­ரிக்­கப்­பட்ட பிறகே அவர்­களது தண்­டனை நிறை­வேற்­றப்­படும்.

இத்­த­கைய மனுத் தாக்­கல் செய்­யா­த­வர்­க­ளது தண்­டனை குறிப்­பிட்ட தேதி­யில் நிறை­வேற்­றப்­படும் என்­ப­தைத் தலை­மைச் சட்ட அதி­காரி அலு­வ­ல­கப் பேச்­சா­ளர் சுட்­டி­னார்.

உள்­துறை அமைச்­சும் தலை­மைச் சட்ட அதி­காரி அலு­வ­ல­க­மும் சிவில் மனு­வுக்­கும் மர­ண­தண்­ட­னைக்­கும் தொடர்­பில்லை என்­ப­தா­லும் அவ­ரது கருணை மனு உள்­பட அனைத்­தும் நிரா­க­ரிக்­கப்­பட்­ட­தா­லும் தட்சிணாமூர்த்தியின் மர­ண­தண்­ட­னையை நிறை­வேற்­றக் கரு­தின. ஆயி­னும் மேல்­மு­றை­யீட்டு நீதி­மன்­றம் அதனை ஒப்­புக்­கொள்­ள­வில்லை.

இந்த விவ­கா­ரம் தற்­போது நீதி­மன்­றப் பரி­சீ­ல­னை­யில் இருப்­ப­தால் தலை­மைச் சட்ட அதி­காரி அலு­வ­ல­கம் இது­கு­றித்து மேலும் கருத்­து­ரைக்க இய­லாது என்று 'ஏஜிஓ' பேச்­சா­ளர் கூறி­னார்.

44 கிரா­முக்கு அதி­க­மான ஹெரா­யின் போதைப்­பொ­ரு­ளைக் கடத்­தி­ய­தற்­காக 2015 ஏப்­ர­லில் தட்­சி­ணா­மூர்த்­திக்கு மர­ண­தண்டனை விதிக்­கப்­பட்­டது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!