ஆடவரை வேட்டைக்கருவியால் குத்தியதன் தொடர்பில் 10 பேர் கைது

ஆடவர் ஒருவரை வேட்டைக்கருவியால் குத்தியதன் தொடர்பில் இருவர் மீது இன்று நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டது.

எஸ். மகேஸ்வரன், 28 ‌ஷிரன் ராஜ் பாலசுப்பிரமணியம் 22 ஆகிய இருவர் மீது காயப்படுத்தும் நோக்கத்துடன் தாக்கியதாக குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.

சனிக்கிழமையன்று மிங் ஆர்கேட்டில் ஒரு கத்திக் குத்து சம்பவம் குறித்து விடியற்காலை 4.30 மணியளவில் காவல் துறைக்கு அழைப்பு கிடைத்தது. சம்பவயிடத்தில் ஒரு 23 வயது ஆடவர் அவருடைய முதுகில் ஒரு ஆயுதம் குத்தப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் கிடந்தார். அவர் தற்போது மருத்துவமனையில் உடல்நலம் தேறி வருகிறார். அவரைத் தாக்கியதாக என நம்பப்படும் மகேஸ்வரனும் ‌ஷிரனும் கண்காணிப்புக் காமிராக்கள், விசாரணை மூலம் அடையாளம் காணப்பட்டனர்.

இச்சம்பவம் தொடர்பில் 15 வயதுக்கும் 30 வயதுக்கும் இடைப்பட்ட மேலும் ஏழு பேரைக் காவல் துறை கைதுசெய்துள்ளது. அவர்கள் அனைவரும் குண்டர் கும்பல் உறுப்பினர்கள் எனக் காவல் துறை குறிப்பிட்டது.

கைது செய்யப்பட்டவர்களில் சிலர் இச்சம்பவத்தைத் தவிர்த்து மற்ற குற்றச்சாட்டுகளையும் எதிர்நோக்குகின்றனர்.

விசாரணை நடந்துவருகிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!