தெமாசெக்கின் $5 பில்லியன் பசுமை முதலீட்டு நிறுவனம் உதயம்

சிங்கப்பூரின் முதலீட்டு நிறுவனமான தெமாசெக், பசுமை முதலீட்டு நிறுவனம் ஒன்றைத் தொடங்குகிறது.

அதற்காக அது $5 பில்லியன் தொடக்க நிதியை ஒதுக்குகிறது.

கரிமக் கழிவுகளைக் குறைக்கவும் பருவநிலை மாற்றத்தை எதிர்த்துப் போராடவும் இடம்பெறக்கூடிய உலகளாவிய முயற்சிகளை முடுக்கிவிடும் நோக்கத்தில் இந்த நடவடிக்கைகள் இடம்பெறுவதாக தெமாசெக் அறிவித்தது.

தெமாசெக் புதிதாக ஏற்படுத்தும் நிறுவனத்திற்கு 'ஜென்ஸுரோ' என்று பெயர். அது நீண்டகால, நீக்குப்போக்கான மூலதனத்தை உருவாக்கி முதல்கட்ட நிறுவனங்களுக்கு உதவும். தொழில்நுட்பத் தீர்வுகளுக்கும் அது உதவும்.

மேம்பட இருக்கும் முதிர்ச்சி அடைந்த நிறுவனங்களுக்கும் உதவி கிடைக்கும். தெமாசெக் செய்யும் முதலீடு, 2050ஆம் ஆண்டு வாக்கில் கரிமக் கழிவுகள் அறவே இல்லாதபடி சாதிக்க உலகிற்கு உறுதுணையாக இருக்கும்.

கரிமக் கழிவுகளை அகற்றுவது என்பது இப்போது சிறப்பு முதலீடுகள் தேவைப்படக்கூடிய ஒரு துறையாக இருக்கிறது என்று தெமாசெக்கின் நீடித்த நிலைத்தன்மை துறையின் தலைமை அதிகாரி ஸ்டீவ் ஹோவர்ட் கூறினார்.

இந்தச் சூழலில் ஜென்ஸுரோ போன்ற நிறுவனத்தை அறிமுகப்படுத்துவது பொருத்தமான ஒன்று என்றார் அவர்.

ஜென்ஸுரோ நிறுவனத்தின் தலைமை அதிகாரியாக ஜூலை 1ஆம் தேதி முதல் திரு ஃபிரடரிக் டியோ பொறுப்பேற்பார்.

இவர் இப்போது தெமாசெக் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் நீடித்த நிலைத்தன்மை தீர்வுத் துறையின் நிர்வாக இயக்குநராக இருக்கிறார். இவருக்கு 20 ஆண்டுகால அனுபவம் உண்டு.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!