உக்ரேனுக்காக $7.4 மில்லியன் நிதி திரட்டிய சிங்கப்பூர் செஞ்சிலுவைச் சங்கம்

சிங்­கப்­பூர் செஞ்­சி­லு­வைச் சங்­கம் போரி­னால் பாதிக்­கப்­பட்ட உக்­ரே­னி­லும் அதைச் சுற்­றி­யுள்ள பகுதி­களி­லும் வசிப்­போ­ருக்­காக 7.4 மில்­லி­யன் வெள்­ளிக்­கும் அதி­க­மான தொகை­யைத் திரட்­டி­யுள்­ளது.

ஆறு மில்­லி­யன் வெள்ளி மதிப்­பி­லான நிவா­ர­ணப் பொருள்­களை வழங்­க­வும் சங்­கம் உறு­தி­ய­ளித்­தி­ருக்­கிறது.

போர் தொடங்கி நூறு நாள்­கள் ஆன நிலை­யில் உக்­ரே­னில் இருந்து புக­லி­டம் தேடி வெளி­யே­றி­யுள்ள அக­தி­க­ளுக்கு மருத்­து­வக் கரு­வி­கள், முத­லு­த­விச் சாத­னங்­கள், அரி­ய­வகை நோய்­க­ளுக்­கான மருந்­து­கள், அத்­தி­யா­வ­சி­யப் பொருள்­கள் என மேலும் இரண்டு மில்­லி­யன் வெள்ளி மதிப்­புள்ள நிவா­ரண உதவி வழங்­கப்­பட்­ட­தாக சங்­கம் நேற்று தெரி­வித்­தது.

இவ்­வாறு நிவா­ர­ணப் பொருள்­கள் அனுப்­பப்­பட்­டது இது நான்­கா­வது முறை.

முன்­னர் அனுப்­பப்­பட்ட நான்கு மில்­லி­யன் வெள்ளி மதிப்­பி­லான நிவா­ர­ணப் பொருள்­க­ளை­யும் சேர்த்து மொத்­தம் ஆறு மில்­லி­யன் வெள்ளி நிவா­ரண உத­விக்கு கடப்­பாடு தெரி­வித்­த­தா­கக் கூறப்­பட்­டது.

கடந்த பிப்­ர­வரி 25ஆம் தேதி முதல் சிங்­கப்­பூர் செஞ்­சி­லு­வைச் சங்­கம் உக்­ரே­னிய மக்­க­ளுக்­காக நிதி திரட்டி வரு­கிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!