தென்கிழக்காசியாவில் கரிம வெளியேற்றத்தை குறைக்க உதவும் ஐந்து அம்சங்கள்

தென்­கி­ழக்­கா­சி­யா­வின் கரிம வெளி­யேற்­றத்­தைக் கணி­ச­மா­கக் குறைக்­கக்­கூ­டிய ஐந்து முக்­கிய அம்­சங்­களில் புதுப்­பிக்­கப்­பட்ட எரி­சக்தி, நீடித்த நிலைத்­தன்­மை­ உடைய விவ­சா­யம், மின்­சார வாக­னங்­கள் உள்­ளிட்­டவை அடங்­கும் என ஆய்­வ­றிக்கை ஒன்­றில் கண்­ட­றி­யப்­பட்­டுள்­ளது.

இந்த நூற்­றாண்­டின் நடுப்­பகுதிக்­குள் கரி­ம­மற்ற நிலையை எட்ட, இந்த வட்­டா­ரத்­தில் கரிம வெளி­யேற்­றம் 60 விழுக்­காடு குறைக்­கப்­ப­டு­வ­தற்கு மேற்­கூ­றப்­பட்ட இந்த அம்­சங்­களில் முத­லீட்டு வாய்ப்­பு­கள் பங்கு வகிக்­க­லாம்.

காடு­க­ளைப் பாது­காப்­பது, எரி­சக்­தி­யைச் சேமிக்­கும் குளி­ரூட்­டும் தொழில்­நுட்­பத்­தில் முத­லீடு செய்­வது போன்ற நீடித்த நிலைத்த கட்­ட­டச் சூழல் ஆகி­யன மற்ற அம்­சங்­க­ளா­கும்.

முத­லீட்டு நிறு­வ­ன­மான தெமா­செக், தொழில்­நுட்ப நிறு­வ­ன­மான மைக்­ரோ­சா­ஃப்ட், ஆலோ­சனை நிறு­வ­ன­மான பெய்ன் அண்ட் கம்பெனி ஆகி­யன தயா­ரித்த இந்த அறிக்கை, இகோஸ்­பெ­ரிட்டி மாநாட்­டில் நேற்று வெளி­யி­டப்­பட்­டது.

எடுத்­துக்­காட்­டாக, காடு­க­ளைப் பாது­காக்­கும் நட­வ­டிக்கை வட்­டா­ரத்­தில் கரிம வெளி­யேற்­றத்­தைக் குறைக்­கும் ஆகப்­பெ­ரிய அம்­சமாகக் கரு­தப்­ப­டு­கிறது. 2030க்குள் யுஎஸ்$20 பில்­லி­யன் (S$27.6 பி.) முத­லீட்டு வாய்ப்பை அந்­ந­ட­வடிக்கை வழங்­கும்.

இந்த வட்­டா­ரத்­தில் உள்ள காடு­கள், பெரிய அள­வி­லான கரிம வெளி­யேற்­றத்தை ஈர்க்­கின்­றன. சதுப்­பு­நி­லங்­களை அமைப்­பது, மழைக்­கா­டு­க­ளைப் பாது­காப்­பது உள்­ளிட்ட வழி­மு­றை­கள் பரு­வ­நிலை மாற்­றத்­தைக் கட்­டுப்­ப­டுத்­தும் நட­வடிக்­கை­க­ளாக கரு­தப்­ப­டு­கின்­றன.

சிறிய விவ­சா­யி­கள், தென்­கிழக்கா­சி­யா­வின் ஒட்­டு­மொத்த கரிம வெளி­யேற்­றத்­தில் ஏறக்­கு­றைய 10 விழுக்­காடு அங்­கம் வகிப்­பதை­யும் ஆய்­வ­றிக்கை சுட்­டி­யது.

மற்­றொ­ரு­பு­றம், சூரிய சக்­தி­யும் காற்று எரி­சக்­தி­யும் 2030க்குள் யுஎஸ்$30 பில்­லி­யன் முத­லீட்டு வாய்ப்பை வழங்­கு­கின்­றன. அதில் சூரிய சக்தி மட்­டும் யுஎஸ்$20 பில்லி­யன் அங்­கம் வகிக்­கிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!