ஆசியான் நாடுகளுக்கான ஏற்றுமதி தொடர்பில் சுங்கத்துறை ஒப்பந்தம்

சிங்­கப்­பூ­ரில் இருந்து ஆசி­யான் நாடு­க­ளுக்கு ஏற்­று­மதி செய்­யும் நிறு­வ­னங்­கள் 2025ஆம் ஆண்­டில் இருந்து சுங்­கத்­துறை நடை­மு­றை­களை விரை­வாக முடித்­துக்­கொள்­ள­லாம்.

பாது­காப்பு நடை­மு­றை­க­ளைக் கடு­மை­யா­கப் பின்­பற்­றும் நிறு­வ­னங்­கள் என்று சிங்­கப்­பூர் சுங்­கத்­து­றை­யின் சான்­றி­தழை அவை பெற்­றி­ருக்க வேண்­டி­யது அவ­சி­யம்.

ஆவ­ணப்­ப­டுத்­தல், சரக்­குச் சோதனை ஆகி­ய­வற்­றைக் குறைப்­பது இதன் நோக்­கம்.

ஆசி­யான் நாடு­க­ளின் சுங்­கத்­து­றைத் தலை­வர்­கள் நேற்று இதன் தொடர்­பில் இணக்­கம் கண்­ட­னர். 'எம்­ஆர்ஏ' எனப்­படும் பரஸ்­பர அங்­கீ­கார ஏற்­பாட்­டில் இந்த ஆண்டு பிற்­பா­தி­யில் ஆசி­யான் நாடு­கள் அனைத்­தும் கையெ­ழுத்­தி­டும்.

வட்­டா­ரத்­தில் விநியோ­கச் சங்­கி­லிப் பாது­காப்­பை­யும் வர்த்­த­கத்­தை­யும் மேம்­ப­டுத்­து­வது இலக்கு.

சான்­றி­த­ழுக்­குத் தகு­தி­பெ­றும் நிறு­வ­னங்­கள் உல­க­ளா­விய வர்த்­த­கக் கட்­ட­மைப்­பின்­கீழ் மதிப்­பி­டப்­படும்.

ஹில்­டன் சிங்­கப்­பூர் ஆர்ச்­சர்ட் ஹோட்­ட­லில் நடை­பெற்ற நிகழ்ச்­சி­யில் உரை­யாற்­றிய நிதி­ய­மைச்­சர் லாரன்ஸ் வோங் இந்­தத் தக­வல்­களை வெளி­யிட்­டார்.

சரக்­குச் சோத­னை­யில் முன்­னு­ரிமை, வர்த்­தக இடை­யூ­று­க­ளின்­போ­தும் விரை­வான சுங்­கத்­துறை அனு­மதி போன்ற நன்­மை­களை நிறு­வ­னங்­கள் பெற முடி­யும் என்­பதை அவர் சுட்­டி­னார்.

இத்­த­கைய ஏற்­பாட்­டின் மூலம் சுங்­கத் துறை அனு­ம­தி­யைப் பெறும் நட­வ­டிக்­கை­கள் 30 விழுக்­காடு விரை­வு­ப­டுத்­தப்­படும் என்­றார் திரு வோங்.

நிறு­வ­னங்­கள் பணத்தை மிச்­சப்­ப­டுத்­த­வும் இது உத­வும்.

இந்த ஆண்­டின் பிற்­பா­தி­யில் ஆசி­யான் நாடு­களில் மூன்று இந்த உடன்­ப­டிக்­கைக்கு ஒப்­பு­தல் தரும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­வ­தாக சிங்­கப்­பூர் சுங்­கத்­துறை குறிப்­பிட்­டது.

ஆசி­யா­னுக்கு அப்­பால் கனடா, ஆஸ்­தி­ரே­லியா, ஜப்­பான் ஆகி­ய­வற்­று­டன் சிங்­கப்­பூர் இத்­த­கைய இரு­த­ரப்பு சுங்­கத்­துறை ஏற்­பா­டு­களைச் செய்­து­கொண்­டுள்­ளது.

ஆசி­யான் வட்­டா­ரத்­தில் வர்த்­த­கம் கொவிட்-19 கிரு­மிப்­ப­ர­வ­லுக்கு முந்­தைய நிலையை இன்­னும் எட்­ட­வில்லை என்று கூறிய அமைச்­சர் வோங், 2030ஆம் ஆண்­டுக்­குள் உல­கின் நான்­கா­வது பெரிய பொரு­ளி­யல் எனும் நிலையை எட்­டு­வ­தற்கு ஏற்ற பாதை­யில் தற்­போது ஆசி­யான் சென்­று­கொண்­டி­ருப்­ப­தா­கக் குறிப்­பிட்­டார்.

மின்­சா­த­னங்­கள், இயந்­தி­ரங்­கள், எரி­பொ­ருள், வாகன உதிரிப் பாகங்­கள் போன்ற முக்­கிய வளங்­க­ளுக்கு ஆசி­யான் நாடு­கள் ஒன்­றை­யொன்று அதி­கம் சார்ந்­தி­ருப்­ப­தைத் திரு வோங் சுட்­டி­னார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!