வெளிநாட்டினர் வசிப்பதற்கு செலவுமிக்க நகரங்கள்: 13வது இடத்தில் சிங்கப்பூர்

வெளிநாட்டினர் அதி­கம் செல­வி­ட­வேண்­டிய நிலை­யில் உள்ள நக­ரங்­க­ளின் பட்­டி­ய­லில் சிங்­கப்­பூர் தொடர்ந்து 13வது இடத்­தில் உள்­ளது.

'ஈசிஏ இன்­டர்­நே­ஷ­னல்' ஆய்வு நிறு­வ­னம், வாழ்க்­கைச் செல­வி­னம் தொடர்­பில் நடத்­திய அண்மை ஆய்­வில் இது தெரியவந்தது. 120 நாடு­க­ளைச் சேர்ந்த 207 நக­ரங்­களின் வாழ்க்­கைச் செல­வி­னத்தை ஆண்­டுக்கு இரண்டு முறை ஆய்வு செய்­கிறது இந்­நி­று­வ­னம்.

சிங்­கப்­பூ­ரில் வீட்டு வாடகை, பெட்­ரோல் விலை, மின்­சார, எரி­வா­யுக் கட்­ட­ணங்­கள் ஆகி­ய­வை­யும் விலை­வா­சி­யும் கடந்த 12 மாதங்­களில் கணி­ச­மா­கக் கூடி­யுள்­ளன.

ஆனா­லும் 2021ஆம் ஆண்­டைப் போலவே சிங்­கப்­பூர் 2022ஆம் ஆண்­டி­லும் உல­க­ளா­விய நிலை­யில் 13வது இடத்­தில் உள்­ளது.

சிங்­கப்­பூர் வெள்ளி வலு­வி­ழந்­தி­ருப்­பது இதற்­குக் கார­ண­மா­கக் கரு­தப்­ப­டு­கிறது. ஆய்வு நடத்­தப்­பட்ட கால­கட்­டத்­தில் சிங்­கப்­பூ­ரின் உற்­பத்­தி­யும் ஏற்­று­ம­தி­யும் குறைந்­தி­ருந்­தன.

அத­னால்­தான், பண­வீக்­கம் 5 விழுக்­காட்­டுக்கு அதி­க­ரித்­த­போதும், சீனா­வின் ரென்­மின்பி, அமெ­ரிக்க டாலர் போன்ற நாண­யங்­க­ளு­டன் ஒப்­பி­டும்­போது சிங்­கப்­பூர் வெள்­ளி­யின் மதிப்பு வலு­வி­ழந்­து­விட்­டது.

ஹாங்­காங், நியூ­யார்க், ஜெனீவா, லண்­டன், தோக்­கியோ ஆகி­யவை வாழ்க்­கைச் செல­வி­னம் அதி­க­மான நக­ரங்­க­ளின் பட்­டி­ய­லில் முதல் ஐந்து இடங்­களில் உள்­ளன.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!