முதல் பசுமை முறிகள் வெளியீட்டுக்கு வழிகாட்டி நெறிமுறைகள்; விரைவில் ‘சிங்கா’ பங்குகள்

சிங்­கப்­பூர் பசுமை முறி­கள் (green bonds) ஏற்பாடு வெளியிடப்பட்டு உள்ளது. இதன்­மூலம் அது தனது முத­லா­வது சுய ஆதிபத்திய அடிப்படையிலான பசுமை முறி­கள் வெளி­யீட்­டிற்­கான வழி­காட்­டித் திட்­டத்தை அறி­வித்து உள்ளது.

இதன் விளை­வாக வரும் மாதங்­களில் முத­லா­வது பசுமை முறி­களை வெளி­யிட வழி ஏற்­பட்டு உள்­ளது. அந்த தேசிய ஏற்­பாடு பசுமை முறி­களை வெளி­யி­டு­வ­தற்­கான வழி­காட்டி நெறி­மு­றை­களை நிர்­ண­யிக்­கிறது.

அத்­த­கைய முறி­கள் 'சிங்கா' எனப்­படும் முக்கியமான உள்­கட்டமைப்பு வசதி அர­சாங்க கடன் சட்­டம் 2021ன் கீழ் வெளி­யி­டப்­படும். சிங்­கா­வின்கீழ் சிங்­கப்­பூர் தனது முத­லா­வது சுய ஆதிபத்திய பசுமை முறி­களை வெளி­யி­டும்.

சிங்கா முறி­கள் அல்­லது சிங்­கப்­பூர் அரசு பசுமை பங்­கு­பத்­திர முறி­கள் எனப்­படும் அந்த பசுமை முறி­கள், தேசிய அள­வில் மிக முக்­கி­ய­மான உள்­கட்­ட­மைப்பு வச­தி­களுக்­குத் தேவை­யான பணத்­தைத் திரட்­டப் பயன்­ப­டுத்­தப்­படும்.

இத்­த­கைய உள்­கட்­ட­மைப்பு வசதி திட்­டங்­கள் இப்­போ­தைய தலை­மு­றைக்­கும் வருங்­கால தலை­மு­றைக்­கும் நீண்­ட­கால நோக்­கில் சுற்­றுச்­சூ­ழல் நன்­மை­களை ஏற்­படுத்தித் தரும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

இத்­த­கைய பசுமை முறி­களை வெளி­யி­டு­வ­தை­யும் அவற்றை நிர்­வ­கிப்­ப­தை­யும் அர­சாங்­கத்­தின் சார்­பில் சிங்­கப்­பூர் நாணய ஆணை­யம் செய்து வரும்.

புதிய ஏற்­பாடு அனைத்­து­லக ரீதி­யில் அங்­கீ­க­ரிக்­கப்­பட்ட சந்தை கொள்­கை­கள், தரங்­கள், தலை­சிறந்த நடை­மு­றை­கள் ஆகி­ய­வற்றை­யொட்டி அமைந்து இருப்­ப­தாக பிர­த­மர் அலு­வ­லக அமைச்­சர் குமாரி இந்­தி­ராணி ராஜா நேற்று தெரி­வித்­தார்.

இத்­த­கைய ஓர் ஏற்­பாடு நிறு­வன பசுமை முறி­கள் சந்­தைக்கு ஓர் அடை­யா­ள­மா­கச் சேவை­யாற்­றும் என்று அவர் கூறி­னார்.

சிங்­கப்­பூர் சுற்­றுச்­சூ­ழல் முத­லீடு மற்­றும் நிதி மாநாட்­டில் குமாரி இந்­தி­ராணி ராஜா உரை­யாற்­றி­னார்.

அர­சாங்­கம் 2022 வர­வு­செ­ல­வுத் திட்­டத்­தில் ஓர் அறி­விப்பை விடுத்­தது. 2030ஆம் ஆண்­டு­வாக்­கில் $35 பில்­லி­யன் பொதுத்­துறை பசுமை முறி­களை வெளி­யிடப்­போ­வ­தாக அரசு உறுதி கூறி­யது. அதை­யொட்டி இப்­போது புதிய ஏற்­பாடு பற்றி அறிவிக்­கப்­பட்டுள்ளது.

"தகுதி உள்ள பசு­மைத் திட்­டங்­களில் இடம்­பெ­றக்­கூ­டிய நம் முத­லீ­டு­கள் சிங்­கப்­பூர் கரி­மம் குறை­வான பொரு­ளி­ய­லுக்கு மாறிக்­கொள்ள வழி­வ­குக்­கும்.

"அதோடு மட்­டு­மின்றி ஐநா­வின் சுற்­றுச்­சூ­ழல் மேம்­பாட்டு இலக்­கு­களை நிறை­வேற்­ற­வும் அது உதவும்," என்று நிதி, தேசிய வளர்ச்சி இரண்­டா­வது அமைச்­சரு­மான குமாரி இந்­தி­ராணி ராஜா குறிப்­பிட்­டார்.

இத­னி­டையே, புதிய ஏற்­பாட்­டின் கீழ் வெளி­யி­டப்­படும் பசுமை முறி­கள் மூலம் கிடைக்­கும் தொகை எட்டு பிரி­வு­க­ளின்கீழ் தேவைப்­படும் செல­வி­னத்தை ஈடு­செய்ய பயன்­படுத்­தப்­படும் என்று நிதி அமைச்­சும் சிங்­கப்­பூர் நாணய ஆணை­ய­மும் கூட்­ட­றிக்­கை­யில் தெரி­வித்­தன.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!