செயற்கை கோழி இறைச்சி தயாரிப்பு ஆலை சிங்கப்பூரில் 2023ல் திறப்பு 

செயற்கை கோழி இறைச்சி வகை­களைத் தயாரிக்கும் ஆசியாவின் ஆகப் பெரிய ஆலை அடுத்தாண்டு சிங்கப்பூரில் திறக்கப்படவுள்ளது. பிடோக் வட்டாரத்தில் ஆலை அமையவுள்ளது. அதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சி இன்று இடம்பெற்றது.

அமெரிக்காவின் கலி­ஃபோர்­னி­யா­வைச் சேர்ந்­த ­‘ஈட் ஜஸ்ட்ஸ் குட் மீட்’ (Eat Just’s Good Meat) என்ற நிறுவனம் 30,000 சதுர அடி பரப்பளவில் ஆலையைக் கட்டுகிறது. இது ஒரு காற்பந்து திடலில் பாதியாகும்.

இந்நிறுவனம் விலங்­கு­க­ளின் உயி­ர­ணுக்­களைக் கொண்டு தயாரித்த கோழி இறைச்சியை இங்கு விற்க சிங்­கப்­பூர் உணவு அமைப்பு கடந்த டிசம்­பர் மாதம் ஒப்­பு­தல் வழங்கியது. உல­கி­லேயே முதல் நாடாக சிங்­கப்­பூர் இதற்கு அனு­மதி வழங்­கி­யது.

$61 மில்லியன் செலவில் கட்டப்படும் ஆலை அடுத்த ஆண்டு முதல் காலாண்டுக்குள் கட்டிமுடிக்கப்படும். ஒவ்வொரு ஆண்டும் பத்தாயிரம் கிலோ செயற்கை கோழி இறைச்சியை அது தயாரிக்கும்.

சிங்கப்பூர் தற்போது 90 விழுக்காடு உணவை இறக்குமதி செய்கிறது. இந்நிலையில், 2030ஆம் ஆண்டுக்குள் இங்கு உட்கொள்ளப்படும் உணவில் 30 விழுக்காட்டை இங்கு தயாரிக்க சிங்கப்பூர் திட்டமிட்டுள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!