உபின் தீவின் பிரதான கிராமம் 90% சூரிய மின்சக்தி பெறும்

மேம்படுத்தப்பட்ட வசதிகள் காரணமாக அடுத்த ஆண்டில் இது கைகூடும்

உபி­ன் தீவின் பிர­தான கிரா­மத்­திற்குத் தேவைப்­படும் மின்சாரத்­தில் 90% சூரிய சக்­தி­யில் இருந்து உற்­பத்தி செய்­யப்­படும். இந்த நிலையை 2023ல் சாத்தி­ய­மாக்­கும் வகை­யில் அங்கு பல மேம்­பா­டு­கள் இடம்­பெற்­றுள்­ளன.

அந்த மேம்­பா­டு­களில் ஒன்­றாக மின்கடத்திக் கட்­ட­மைப்பு மேம்­படுத்­தப்­பட்டு உள்­ளது.

கலா­சார, சமூக, இளை­யர்­துறை அமைச்­சர் எட்­வின் டோங் நேற்று நடந்த 'உபின் தின' நிகழ்ச்­சி­யில் இதனை அறி­வித்­தார்.

அந்­தக் கிரா­மத்­தில் வசிக்­கும் முதி­யோ­ரின் வீடு­களில் எச்­ச­ரிக்கை பொத்­தான்­களைத் தேசிய பூங்கா கழ­க­மும் கவ்­டெக் (GovTech) அமைப்­பும் பொருத்தி உள்ளன,

அவ­சர நேரத்­தில் முதி­ய­வர்­கள் அந்­தப் பொத்­தானை அழுத்தி உத­விக்கு அழைக்­க­லாம்.

அந்த முறை இப்­போது பரி­சோ­திக்­கப்­ப­டு­வ­தாக அமைச்­சர் குறிப்­பிட்­டார். தீ அணைப்பு ஆற்­றலைக் கூட்ட அந்தத் தீவில் பல வச­தி­கள் ஏற்­படுத்­தப்­படும். கள ஆய்­வு­களை நடத்­த­வும் சுற்­றுப்­புற கல்­விக்­கா­க­வும் உபின் வசிப்­பிட ஆய்­வுக் கூடம் அமைக்­கப்­படும்.

தேசிய வளர்ச்சி அமைச்­சர் டெஸ்­மண்ட் லீ, தேசிய பூங்காக் கழ­கத்­தின் தலைமை நிர்­வாகி கென்­னத் எர் ஆகி­யோ­ரும் நேற்­றைய உபின் தின நிகழ்ச்­சி­யில் கலந்­து­கொண்­ட­னர்.

பூங்காக் கழ­கம்­தான் உபின் தீவை நிர்­வ­கித்து நடத்­தும் மைய அமைப்­பா­கும். இந்­தக் கழ­கம் கடந்த பல ஆண்­டு­களில் எடுத்­து­ வந்­துள்ள உயி­ரி­னங்­கள் மீட்சி முயற்­சி­க­ளைப் பற்­றி­யும் அமைச்­சர் குறிப்­பிட்­டார்.

மிதக்­கும் ஈரப்­பத நிலங்­க­ளு­டன் கூடிய பெக்­கான் குவாரி மேம்­பாடு, தேனீக்­களை உண்­ணும் பற­வை­களுக்­கான இனப்பெருக்க வசதி­கள் ஆகி­யவை அந்த முயற்சி களில் அடங்­கும் என்று அமைச்சர் குறிப்பிட்டார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!