2027ல் புதிய தாதிமை இல்லம்

அலெக்­சாண்­டிரா மருத்­து­வ­மனை வளா­கத்­தில் ஒரு புதிய தாதிமை இல்­லத்தை 2027ல் கட்டி முடிக்க திட்­ட­மி­டப்­பட்­டுள்­ளது. அந்த இல் லத்­தில் 459 படுக்­கை­கள் இருக்­கும் என்று மதிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

அருகே இருக்­கும் ரயில்­பாதை வழித்­த­டத்திற்கு எளி­தில் செல்­லும் வகை­யில் வச­தி­கள் இருக்­கும். புதிய இல்­லம் 0.55 ஹெக்­டர் பரப்­பளவில் கட்­டப்­படும்.

சிங்­கப்­பூ­ரின் முத­லா­வது சுகா­தார மாவட்டமான குவீன்ஸ்­ட­வுன் நக­ருக்­குள் அமையும் 13.1 ஹெக்டர் நிலப்பரப்பில் அலெக்­சாண்­டிரா சுகாதா­ர வளா­கத்­தின் ஒரு பகுதி­யாக புதிய இல்­லம் அமை­யும்.

மித­மா­னது முதல் கடு­மை­யான நினை­வாற்­றல் இழப்பு நோய் உள்­ள­வர்­க­ளைப் பேணும் வகை­யில் புதிய இல்­லம் வடி­வ­மைக்­கப்­ப­டு­கிறது.

புதிய இல்­லத்தை ‘கிராமிய சதுக்­கம்’ என்ற பசுமை இடம் சூழ்ந்து இருக்­கும். சுகா­தார அமைச்சு சென்ற மாதம் வெளி­யிட்ட ஏலக்­குத்­தகை ஆவ­ணங்­கள் மூலம் இவை தெரி­ய­வ­ரு­கின்­றன.

சிங்­கப்­பூ­ரில் தாதிமை இல்ல படுக்­கை­க­ளின் எண்­ணிக்­கையை அடுத்த பத்து ஆண்­டு­களில் 31,000க்கும் மேற்­பட்ட அள­வுக்கு அதி­க­மாக்க சுகா­தார அமைச்சு திட்­ட­மி­டு­வ­தாக இம்மாதத் தொடக்­கத்­தில் சுகா­தார அமைச்­சர் ஓங் யி காங் தெரி­வித்தார்.

அலெக்­சாண்­டிரா மருத்­து­வ­மனை­யில் 2027ல் அமைய உள்ள புதிய இல்­லத்­திற்கு முன்­ன­தா­கவே 2025ஆம் ஆண்­டில் ஏறக்­கு­றைய 5,000 படுக்­கை­களை உரு­வாக்கும் திட்­டங்­கள் அமைச்­சி­டம் உண்டு.

இந்த மருத்­து­வ­மனை மறு உரு­வாக்­கத்­தின் முதல் கட்­டம் 2030 ஆம்­ ஆண்­டில் முடி­வ­டை­யும் என்று 2020ஆம் ஆண்­டில் அப்­போ­தைய சுகா­தார அமைச்­சர் கான் கிம் யோங் தெரி­வித்து இருந்­தார்.

அதற்கு முன்ன­தாக அந்த இடத்­திற்­கான பார­ம்­ப­ரிய ஆய்வு சென்ற ஆண்டு முதல் நடந்­து­வரு­வ­தாக அமைச்சு, இந்த மருத்­து­வ­மனை, தேசிய மர­பு­டை­மைக் கழ­கம் ஆகி­ய­வற்­றின் பேச்­சா­ளர்­கள் கூறி­ய­தாக சண்டே டைம்ஸ் குறிப்­பிட்­டது.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!