40,000க்கும் மேற்பட்ட வர்த்தகங்களுக்கு $132 மி.

கொவிட்-19 கிரு­மிப் பர­வ­லைத் தடுக்க விதிக்­கப்­பட்ட கட்­டுப்­

பா­டு­க­ளால் வெகு­வா­கப் பாதிப்­

ப­டைந்த 40,000க்கும் மேற்­பட்ட சிறிய வர்த்­த­கங்­க­ளுக்கு கிட்­டத்­தட்ட $132 மில்­லி­யன் பெறு­மா­ன­முள்ள மானி­யத்தை அர­சாங்­கம் கடந்த வாரம் ரொக்­க­மாக வழங்­கி­யது.

மானி­யம் பெற்ற வர்த்­த­கங்­களில் உணவு அங்­காடி நிலை­யங்­களில் உள்ள கடை­களும் சந்­தை­களில் உள்ள கடை­களும்

அடங்­கும். கடந்த பிப்­ர­வரி மாதம் வர­வு­செ­ல­வுத் திட்­டம் தாக்­கல் செய்­யப்­பட்­ட­போது சிறிய வர்த்­தக மீட்பு மானி­யம் அறி­விக்­கப்­பட்­டது. $500 மில்­லி­யன் பெறு­மா­ன­முள்ள வேலை, வர்த்­தக ஆத­ர­வுத் திட்­டத்­தின் ஒரு பகு­தி­யாக இது வழங்­கப்­பட்­டது.

கொவிட்-19 கிரு­மிப் பர­வ­லைத் தடுக்க விதிக்­கப்­பட்ட கட்­டுப்­

பா­டு­க­ளால் அதிக அள­வில் பாதிக்­கப்­பட்ட சிறிய வர்த்­தங்­க­ளுக்கு ஒரு­முறை ரொக்க உத­வி­யாக இந்த மானி­யம் வழங்­கப்­பட்­டுள்­ள­தாக வர்த்­தக, தொழில் அமைச்­சும் சிங்­கப்­பூர் உள்­நாட்டு வரு­வாய் ஆணை­ய­மும் நேற்று தெரி­வித்­தன.

ரொக்க உதவி பெற்ற சிறிய வர்த்­த­கங்­களில் சில்­லறை வர்த்­த­கம், உணவு மற்­றும் பானத்­துறை, சுற்­றுப்­ப­ய­ணத்­துறை, உப­ச­ரிப்­புத்­துறை ஆகி­யவை அடங்­கும்.

கடந்த ஆண்டு நவம்­பர் மாதம் 1ஆம் தேதி­யி­லி­ருந்து டிசம்­பர் 31ஆம் தேதி வரை பணி­பு­ரிந்து, கட்­டாய மத்­திய சேம­நி­திப்

பங்­க­ளிப்பு பெற்ற ஒவ்­வொரு சிங்­கப்­பூர் அல்­லது நிரந்­த­ர­வாசி ஊழி­யர் அடிப்­ப­டை­யில் மானி­யம் பெற தகுதி பெற்ற வர்த்­த­கங்­க­ளுக்­குத் தலா $1,000 வழங்­கப்­பட்­டது.

ஒவ்­வொரு நிறு­வ­னத்­துக்­கும் அதி­க­பட்­சம் $10,000 வழங்­கப்

பட்­டது. சிங்­கப்­பூர் உணவு அமைப்பின் உரி­மம் பெற்ற சில வர்த்­தக உரி­மை­யா­ளர்­கள், பங்­கா­ளி­கள், உணவு அங்­காடி நிலை­யக் கடைக்­கா­ரர்­கள், சந்தை மற்­றும் காப்­பிக் கடைக்­கா­ரர்­கள் ஆகி­யோர் அதே கால­கட்­டத்­தில் ஊழி­யர்­களை வேலை­யில் அமர்த்­தா­த­போ­தி­லும் அவர்­க­ளுக்கு தலா $1,000

ரொக்­கம் வழங்­கப்­பட்­டது.

மானி­யத்­துக்­குத் தகுதி பெற நிறு­வ­னங்­கள் கடந்த ஆண்டு டிசம்­பர் 31ஆம் தேதிக்கு முன்பு பதிவு செய்­திருக்க வேண்­டும். அத்­து­டன் அவை சிங்­கப்­பூ­ரில் வர்த்­த­கம் செய்­து­கொண்­டி­ருக்க வேண்­டும்.

"வழங்­கப்­பட்ட மானி­யம் பெரும்­பா­லும் இழப்­பின் ஒரு பகு­தியை மட்­டுமே ஈடு­செய்­தது. இருப்­பி­னும், பணப்­பு­ழக்­கத்தை மீண்­டும் ஏற்

படுத்­தித் தர நிதி­யு­தவி உத­வி­யது. ஒன்­றி­ணைந்து நெருக்­க­டி­நி­லையை எதிர்­கொள்ள அர­சாங்­கம் கொண்­டி­ருக்­கும் அணு­கு­மு­றையை இத்­திட்­டம் மறு­உ­றுதி செய்­துள்­ளது," என்று சிறிய நடுத்­தர நிறு­வ­னங்

களுக்­கான சங்­கத்­தின் துணைத் தலை­வர் ஆங் யுயிட் தெரி­வித்­தார்.

கடந்த ஆண்டிறுதி நில­

வ­ரப்­படி, சிங்­கப்­பூ­ரில் ஏறத்­தாழ 280,000 சிறிய, நடுத்­தர நிறு­வ­னங்­கள் வர்த்­த­கம் செய்து வரு­வ­தாக அர­சாங்­கத் தர­வு­கள் தெரி­விக்­கின்­றன.

ஊழி­ய­ர­ணி­யில் 70 விழுக்­காட்­டி­னர் சிறிய, நடுத்­தர நிறு­வ­னங்

­க­ளில் பணி­பு­ரி­கின்­ற­னர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!