கொலைக் குற்றச்சாட்டிலிருந்து ஆடவர் தற்காலிகமாக விடுவிப்பு

2007ஆம் ஆண்டு ஜூன் 30ஆம் தேதி ஃபெலிசியா டியோ வெய் லிங் என்­ப­வ­ரைக் கொன்­ற­தாக அக­மது டேனி­யல் முக­மது ரஃபாயீ, 37, என்­ப­வர் மீது குற்­றம் சுமத்­தப்­பட்டு இருந்­தது. அந்­தக் குற்­றச்­சாட்­டில் இருந்து அவர் நேற்று தற்­கா­லி­க­மாக விடு­விக்­கப்­பட்­டார்.

எனி­னும், குமாரி டியோ­வின் சட­லத்­தைச் சட்­ட­வி­ரோ­த­மாக பொது இடத்­தில் வைத்­த­ குற்­றத்தை அடுத்த வாரம் அக­மது ஒப்­புக்­கொள்­வார் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

குற்­றச்­சாட்­டில் இருந்து தற்­காலி­க­மாக விடு­விக்­கப்­ப­டு­வோர், சில சம­யங்­களில் சாட்­சி­யம் இல்­லா­த­தால் அல்­லது வேறொரு குற்றச்­சாட்டு பதிவு செய்ய ஏது­வாக அப்­போ­தைய குற்­றச்­சாட்­டி­லி­ருந்து விடு­விக்­கப்­ப­டு­கின்­ற­னர்.

குமாரி டியோ, 19, எப்­படி இறந்­தார், அவ­ரது மர­ணத்­திற்கு யார் கார­ணம் என்­பது பற்றி நீதி­மன்ற ஆவ­ணங்­கள் குறிப்­பி­ட­வில்லை.

புளோக் 19 மரின் டெரஸ் எனும் முக­வ­ரி­யில் உள்ள வீட்­டில் குமாரி டியோ­வைக் கொன்­ற­தாக அக­மது மீது குற்­றஞ்­சாட்­டப்­பட்டு இருந்­தது.

திரு ரகில் புத்ரா செட்­டியா சுக்மா­ர­ஜனா எனும் மற்­றோர் ஆட­வரும் இந்த வழக்­கில் சம்­பந்­தப்­பட்­ட­தா­கக் கூறப்­பட்­டது. இந்­தோ­னீ­சி­ய­ரான திரு ரகில் இன்­னும் பிடி­ப­ட­வில்லை என்­ப­தால் அக­மது மீது சுமத்­தப்­பட்­டி­ருந்த குற்­றச்­சாட்­டில் இருந்து அவ­ரைத் தற்­கா­லி­க­மாக விடு­விக்க அரசுத் தரப்பு வழக்­க­றி­ஞர்­கள் கோரி­னர்.

திரு ரகில் கைது செய்­யப்­ப­டு­வ­தற்­காக தாங்கள் இன்­னமும் காத்­தி­ருப்­ப­தாக அரசுத் தரப்பு வழக்­கறி­ஞர்­க­ளான யாங் ஸிலி­யாங்­கும் ஆர்.அர்­விந்­த­னும் கூறி­னர்.

திரு ரகில் இறந்துவிட்டார் என்று கூறுவற்கும் ஆதா­ர­ம் இல்லை என அவர்­கள் கூறி­னர்.

அக­மதை குற்­றச்­சாட்­டி­லி­ருந்து முழு­மை­யாக விடு­விக்­கு­மாறு அவ­ரு­டைய தற்­காப்பு வழக்­க­றி­ஞர் சஷி நாதன் நீதி­மன்­றத்­தில் கேட்­டுக்­கொண்­டார்.

அக­ம­தும் அவ­ரு­டைய குடும்­பத்­தா­ரும் சோத­னை­யான கால­கட்­டத்­தில் இருந்­த­தா­க­வும் அக­ம­தின் மனை­விக்கு மற்­ற­வர்­கள் தொந்­த­ரவு கொடுத்­த­தால் அவர் வீட்­டை­விட்டு வெளி­யேற நேரிட்­ட­தா­க­வும் திரு நாதன் சொன்­னார்.

திரு நாத­னின் வாதத்­தைக் கேட்ட மாவட்ட நீதி­பதி யூஜின் டியோ, "இப்­போ­தைக்கு எங்­க­ளி­டம் உள்ள ஆதா­ரங்­களை வைத்து பார்க்­கை­யில், குற்­றச்­சாட்­டில் இருந்து முழு­மை­யாக விடு­விப்­பதற்கு முகாந்திரம் இல்லை என்­பதை ஏற்­கி­றேன்," என்று கூறி­னார்.

அக­மது மீது கூடு­த­லாக ஆறு குற்­றச்­சாட்­டு­கள் நேற்று சுமத்­தப்­பட்­டன. அவை அனைத்­தி­லும் திரு ரகில் பெய­ரி­டப்­பட்­டுள்­ளார்.

2020ல் கைது செய்­யப்­பட்­ட­தில் இருந்து தடுப்­புக்­கா­வ­லில் வைக்­கப்­பட்­டுள்ள அக­ம­துக்கு நேற்று $20,000 பிணை வழங்­கப்­பட்­டது.

புதிய குற்­றச்­சாட்­டு­களை ஜூலை 6ஆம் தேதி அவர் ஒப்­புக்­கொள்­வார் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

2020 டிசம்­பர் 17ஆம் தேதி அகமது மீது கொலைக் குற்­றச்­சாட்டு சுமத்­தப்­பட்­டது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!