வீவக மறுவிற்பனை வீட்டு விலைகள் 2.6% உயர்வு

வீட­மைப்பு வளர்ச்­சிக் கழக மறு­விற்­பனை வீட்டு விலை­கள் தொடர்ந்து ஒன்­ப­தா­வது காலாண்­டில் புதிய உச்­சத்தை எட்­டி­யுள்­ளன. இருப்­பி­னும் சந்தை நிலைப்­பட்­டி­ருக்­கும் வேளை­யில் வீடு வாங்­கு­பவர்­கள் அந்த விலையேற்றத்தை எதிர்க்கும் போக்கு ஓர­ள­வுக்கு தென்­படு­கின்­றது.

வீவக மறு­விற்­பனை வீட்டு விலை­கள், முந்­தைய காலாண்­டின் 2.4 விழுக்காடு அதி­க­ரிப்­பு­டன் ஒப்­பி­டு­கை­யில், ஆண்­டின் இரண்­டாம் காலாண்­டில் சற்று வேக­மான 2.6 விழுக்காடு என்ற விகி­தத்­தில் அதி­க­ரித்­தது என்று நேற்று கழ­கம் வெளி­யிட்ட முன்­னோட்ட மதிப்­பீடு­களில் தெரியவந்­துள்­ளது.

கடந்த ஆண்டு 3 விழுக்­காட்­டு­டன் ஒப்­பி­டு­கை­யில், இந்த ஆண்டு காலாண்டு விலை ஆதா­யம் சுமார் 2.5 விழுக்­கா­டாக இருந்­த­தால், வீவக மறு­விற்­பனை சந்தை அதன் வேகத்தை இழக்­கும் அறி­கு­றி­யாக இதை எடுத்­துக்­கொள்­ள­லாம் என்று சில ஆய்­வா­ளர்­கள் தெரி­வித்­த­னர்.

"குறைந்த மறு­விற்­ப­னை­யின் அளவு, வாங்­கு­ப­வர்­க­ளுக்­கும் விற்­ப­வர்­க­ளுக்­கும் இடை­யி­லான விலை எதிர்­பார்ப்­பு­களில் பொருந்­தா­து. கடந்த ஆண்டு வலு­வான விற்­ப­னை­யைத் தொடர்ந்து, வாங்­கும் தேவை மெதுவடைந்திருக்கலாம்," என்று புரோப்­நெக்ஸ் சொத்து நிறுவன ஆய்­வுப் பிரி­வின் தலை­வர் வோங் சியூ யிங் கூறி­னார்.

மேலும், மே மாதம் இடம்­பெற்ற பிடிஓ வீட்டு விற்­ப­னை­ திட்டத்தின் கீழ் விடப்­பட்ட பிர­தான இடத்­தில் உள்ள இரண்டு பொது வீட­மைப்பு மாதி­ரி­கள், வீவக மறு­விற்­பனை சந்­தை­யின் தேவை­க­ளைக் குறைத்­தி­ருக்­கக்­கூ­டும் என்­றும் திரு­மதி வோங் விவ­ரித்­தார்.

"இந்த ஆண்­டின் இரண்­டா­வது காலாண்­டில் 6,475 அடுக்­கு­மாடி வீடு­கள் பரி­வர்த்­தனை செய்­யப்­பட்­டுள்­ள­தாக மதிப்­பி­டப்­பட்­டுள்­ளது. இது முதல் காலாண்­டில் 6,934 அடுக்­கு­மாடி வீட்டு எண்­ணிக்­கை­யை­விட குறைந்­துள்­ளது என்று ஹட்­டன்ஸ் ஏஷியா நிறு­வ­னத்­தின் மூத்த இயக்­கு­நர் லீ சீ டெக் கூறி­னார்.

ஆண்­டின் முற்­பா­தி­யில் மதிப்­பி­டப்­பட்ட மொத்த விலை அதி­க­ரிப்பு, கடந்த ஆண்­டின் இதே கால­கட்­டத்­தில் இருந்த 6 விழுக்­காட்­டு­டன் ஒப்­பி­டு­கை­யில் இப்­போது 5.1 விழுக்­கா­டாக உள்­ளது.

2021ல் 12.7% முழு ஆண்டு அதி­க­ரிப்­பு­டன் ஒப்­பி­டு­கை­யில், இந்த ஆண்டு வீவக மறு­விற்­பனை விலை­கள் 7% முதல் 9% வரை மெது­வான வேகத்­தில் உய­ரும் என்று திரு­மதி வோங் எதிர்­பார்க்­கி­றார்.

நீண்டகாலத்­திற்கு பார்க்­கை­யில், அட­மான விகி­தங்­கள் மேலும் அதி­க­ரிப்­பது, தனி­யார் சொத்து உரி­மை­யா­ளர்­க­ளு­டன் ஒப்­பி­டும்­போது சிறிய அள­வில் இருந்­தா­லும், வங்­கிக் கடன்­களை வாங்­கிய வீடு வாங்­கு­ப­வர்­கள் சில­ரை­யும் பாதிக்­க­லாம்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!