அமைச்சர்: அவசரப்பட்டு வார்த்தைகளை விடக்கூடாது

சிங்­கப்­பூர் ஆயு­தப்­ப­டை­கள் தினத்தை முன்­னிட்டு நேற்று முன்­தி­னம் தற்­காப்பு அமைச்­சர் செய்­தி­யா­ளர்­க­ளி­டம் பேசி­னார்.

அப்­போது சில நாள்­க­ளுக்கு முன் மலே­சி­யா­வின் முன்­னாள் பிர­த­மர் மகா­தீர் முகம்­மது, "சிங்­கப்­பூர் மற்­றும் ரியாவ் தீவு­களை 'மலாய் நாடு­க­ளாக' மலே­சியா மீட்­டெ­டுக்க வேண்­டும்," என்று கூறி­யது பற்றி அமைச்­ச­ரி­டம் கேட்­கப்­பட்­டது.

"டாக்­டர் மகா­தீர் எங்­க­ளு­டன் அதைப் பற்றி பேசா­த­தால் நான் அதற்­குப் பதில் அளிக்க வேண்­டுமா என்று தெரி­ய­வில்லை. அவர் ஒரு பெரிய மனி­த­ராக மதிக்­கப்­படு­கி­றார். மேலும் அவர் (பிர­த­மர் லீ சியன் லூங் உட்­பட) சிங்­கப்­பூ­ரின் முன்­னைய பிர­த­மர்­களு­டன் பணி­யாற்­றி­யுள்­ளார். இதெல்­லாம் பதிவு செய்­யப்­பட்­டுள்­ளது.

"டாக்­டர் மகா­தீர் பேசும் ஒவ்­வொரு முறை­யும் பதி­லுக்­குப் பேச விரும்­பி­னால், நீங்­கள் தொடர்ந்து அதை செய்ய வேண்­டி­யி­ருக்­கும். நீங்­கள் சற்று மூச்சு இழுத்து விட்டு, கொடுக்க வேண்­டிய மரி­யா­தையை கொடுக்க வேண்­டும். அவர் அதை வெவ்­வேறு பார்­வை­யா­ளர்­க­ளுக்­காக கூறு­கி­றார். மேலும் அந்த கருத்­து­கள் எங்­க­ளுக்­காக இல்லை என்று அவரே கூறி­னார். எனவே நாம் அதை பெரி­துப­டுத்­தக்­கூ­டாது," என்று டாக்­டர் இங் விளக்­கி­னார்.

சிங்­கப்­பூர் ஆயு­தப்­ப­டைப் பணி­கள் இளை­யர்­க­ளைத் தொடர்ந்து கவர்ந்து வரு­கின்­றன என்­பது குறித்து கருத்­து­ரைத்த அமைச்­சர் இங், "சிங்­கப்­பூர் ஆயு­தப்­படை­யில் தங்­கள் வாழ்க்­கைத் தொழிலை அமைத்­துக்­கொள்­வ­தில் தொடர்ந்து பலர் விருப்பம் காட்­டு­கின்­ற­னர். மற்ற சில அமைப்­பு­கள் சந்­திக்­கும் மனி­த­வளப்பற்­றா­குறை சிங்­கப்­பூர் ஆயு­தப்­ப­டை­யில் ஏற்­ப­டு­வ­தில்லை.

"நாங்­கள் இந்­தச் சவாலை மிக­வும் தீவி­ர­மாக எடுத்­துக்­கொள்­கி­றோம். அதன் ஒரு பகு­தி­யாக எங்­கள் பணிச்­சூ­ழ­லை­யும் ராணு­வம் தொடர்­பான கட்­டொ­ழுங்­கை­யும் விழிப்­பு­ணர்­வை­யும் அவ்­வப்­போது மேம்­ப­டுத்தி வரு­கி­றோம். தானி­யக்­கம், மின்­னி­லக்­கம் போன்ற புத்­தாக்க வழி­க­ளை­யும் அறி­மு­கப்­ப­டுத்தி வரு­கி­றோம். அது பல­ரை­யும் கவர்ந்­துள்­ளது," என்று தெரி­வித்­தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!