செய்திக்கொத்து

ஆயுதப்படையின் புதிய 4ஆம் படைக்கு ஜூலை முதல் ஆள்சேர்ப்பு தொடங்கும்

சிங்கப்பூர் ஆயுதப்படையின் நான்காம் படையான மின்னிலக்கப் படைக்கு ஆள்சேர்க்கும் நடவடிக்கை இம்மாதம் முதல் தொடங்கும் என்று தற்காப்பு அமைச்சு நேற்று முன்தினம் தெரிவித்தது. அதன் மூலாதார பயிற்சி மற்றும் செயலாக்க வசதிகளுக்கான புதிய மின்னிலக்க செயலாக்க நிலையம் விரைவில் அமைக்கப்படும் என்றும் அமைச்சு கூறியது.

அடுத்த வாரம் கூடவிருக்கும் நாடாளுமன்றக் கூட்டத் தில் மின்னிலக்க மற்றும் உளவுச் சேவை பிரிவு அமைக் கப்பட வழிவகுக்கும் சட்டத் திருத்தம் நாடாளுமன்ற ஒப்புதலுக்காக தாக்கல் செய்யப்படும். இந்தச் சட்டத் திருத்தம் ஏற்றுக்கொள்ளப்பட்டால், மின்னிலக்க மற்றும் உளவுச் சேவை பிரிவு இவ்வாண்டு இறுதிக்குள் தனது அறிமுக நிகழ்ச்சியை நடத்தி விடலாம். மின்னிலக்க மற்றும் உளவுச் சேவை பிரிவின் புதிய மின்னிலக்க செயலாக்க தொழில்நுட்ப நிலையம் சிங்கப்பூரின் மின்னிலக்க ஆற்றலை மேலும் ஊக்கப்படுத்தும். அந்த வகையில், இதர தற்காப்பு தொழில்நுட்ப சமூகம், அரசாங்கத்தின் இதர மின்னிலக்க அமைப்புகள், கல்வியாளர்கள், தொழில்துறை வல்லுநர்கள் ஆகியோருடன் சிங்கப்பூர் ஆயுதப்படை கைகோத்து பணியாற்றும்.

சிங்கப்பூரில் ஏப்ரலுக்குப் பிறகு பெட்ரோல் விலையில் சரிவு

இவ்வாண்டு ஏப்ரல் மாதத்துக்குப் பிறகு சிங்கப்பூரில் விற்கப்படும் பல்வேறு பெட்ரோல் விலைகளில் முதல் முறையாக இறக்கம் ஏற்பட்டுள்ளது. கால்டெக்ஸ், எஸ்ஸோ, ஷெல் ஆகியவை ஒரு லிட்டர் பெட்ரோலுக்கான விலையில் இரண்டு முதல் நான்கு காசு வரை குறைத்துள்ளன என்று சிங்கப்பூர் பயனீட்டாளர் சங்கத்தின் ஃபியூல் காக்கி இணையத் தளத்தில் நேற்று குறிப்படப்பட்டுள்ளது.

இருப்பினும் ஷெல் நிறுவனம் தனது பிரிமியம் ரக பெட்ரோல் விலையை 25 காசு வரை குறைத்துள்ளது. சீன நிறுவனங்களான சைனோபெக், எஸ்பிசி இரண்டும் தங்கள் விலையை இன்னும் குறைக்கவில்லை என்றாலும் விரைவில் அவை அவ்வாறு செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த மாற்றத்துக்குப் பிறகு, 92 ஆக்டென் ரக பெட்ரோல் எஸ்ஸோவில் லிட்டருக்கு $3.30, கால்டெக்ஸ், எஸ்பிசி ஆகியவற்றில் $3.34 என்ற விலையிலும் 95 ஆக்டென் ரக பெட்ரோல் எஸ்ஸோவில் லிட்டருக்கு $3.35, கால்டெக்ஸ், ஷெல், சைனோபெக் ஆகியவற்றில் $3.39 என்றும் விற்கப்படுகிறது. 98 ஆக்டென் ரக பெட்ரோல் எஸ்ஸோவில் லிட்டருக்கு $3.82, ஷெல்லில் $3.88, கால்டெக்ஸில் $4.05க்கும் விற்கப்படுகிறது. டீசல் விலை எஸ்ஸோவில் லிட்டருக்கு $3.14, கால்டெக்ஸில் $3.17க்கு விற்கப்படுகிறது.

சிடிசி பற்றுச்சீட்டுகளைப் பெற்றுக்கொண்ட ஒரு மில்லியன் சிங்கப்பூர் குடும்பங்கள்

இவ்வாண்டு மே மாதம் 11ஆம் தேதி அறிமுகம் கண்ட திலிருந்து சுமார் 1.02 மில்லியன் அல்லது சிங்கப்பூர் குடும்பங்களில் 83 விழுக்காடு 2022ஆம் ஆண்டுக்கான சமூக மேம்பாட்டு மன்ற (சிடிசி) பற்றுச்சீட்டுகளைப் பெற்றுக்கொண்டுள்ளன. ஜூன் 30ஆம் தேதி வரை, $50 மில்லியன் மதிப்புள்ள சிடிசி பற்றுச்சீட்டுகளை மக்கள் பல்வேறு செலவுகளுக்குப் பயன்படுத்தியுள்ளனர்.

அரசாங்கம் சிடிசி பற்றுச்சீட்டுகளுக்காக $650 மில்லியனை ஒதுக்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. சிடிசி பற்றுச்சீட்டுத் திட்டத்தின்படி, எல்லா சிங்கப்பூர் குடும்பங்களுக்கும் தலா $100 மின்னிலக்க பற்றுச்சீட்டு களாகக் கிடைக்கும். மக்கள் அவற்றைக் உணவங்காடிக் கடைகளிலும் குடியிருப்புப் பேட்டைகளில் உள்ள கடை களிலும் செலவழிக்கலாம். தற்போது இத்திட்டத்தில் 17,500 உணவங்காடிக் கடைகளும் சிகை அலங்காரக் கடைகள், அழகு நிலையங்கள் உட்பட குடியிருப்புப் பேட்டைகளில் உள்ள கடைகளும் சேர்ந்துள்ளன.

தென்மேற்கு வட்டார மேயரும் மேயர்கள் குழுவின் தலைவருமான லோ யென் லிங், நேற்று தமது ஃபேஸ்புக் பக்கத்தில் இதுகுறித்த தகவல்களை வெளியிட்டார். 2021ஆம் ஆண்டுக்கான பற்றுச்சீட்டுகளில் இதுவரை $98 மில்லியன் மதிப்புள்ள பற்றுச்சீட்டுகள் பயன்படுத்தப்பட்டு உள்ளன என்று திருவாட்டி லோ கூறினார். 2021, 2022ஆம் ஆண்டுகளுக்கான சிடிசி பற்றுச்சீட்டுகள் இவ்வாண்டு டிசம்பர் 31ஆம் தேதியன்று காலாவதியாகும் என்றும் அதற்குள் தங்கள் பற்றுச்சீட்டுகளைச் செலவழிக்குமாறு திருவாட்டி லோ, மக்களைக் கேட்டுக்கொண்டார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!