நேற்று நடப்புக்கு வந்த புதிய விதிமுறைகள்

சிங்­கப்­பூ­ரில் நேற்று முதல் புதிய விதி­மு­றை­கள் சில நடப்­புக்கு வந்­துள்­ளன.

எளி­தில் பாதிக்கப்படக்கூடிய 18 வய­துக்கு மேலா­னோர் தங்­கள் ஆரோக்­கிய நிலை குறித்­துத் தெரி­வித்து இரண்­டா­வது கொவிட்-19 'பூஸ்­டர்' தடுப்­பூசி போட்­டுக்­கொள்­ள­லாம்.

பொதுச் சுகா­தா­ரத் தயார்­நிலை மருந்­த­கங்­கள், பல­துறை மருந்­த­கங்­கள் ஆகி­வற்­றில் இவர்­கள் தடுப்­பூ­சி­யைச் செலுத்­திக்­கொள்­ள­லாம். நீரி­ழிவு, இத­யச் செய­லி­ழப்பு, ஆஸ்­துமா, ஈரல் அழற்சி, பக்­க­வா­தம், புற்­று­நோய்க்கு சிகிச்சை எடுத்­துக்­கொள்­வோர் உள்­ளிட்­ட­வர்­க­ளுக்கு இது பொருந்­தும்.

நுரை­யீ­ரல் தொற்று நோயா­ளி­க­ளுக்கு இவ்­விரு வகை மருந்­த­கங்­க­ளி­லும் சிகிச்­சைக் கட்­ட­ணத்­திற்­கான சலுகை கொவிட்-19 கிரு­மிப்­ப­ர­வ­லுக்கு முன்­பி­ருந்த நிலைக்கு மீண்­டும் மாற்­றப்­படும். இவர்­கள் இனி ஐந்து அல்­லது பத்து வெள்ளி மட்­டும் செலுத்தி மருத்­து­வ­ரைப் பார்க்க இய­லாது.

மித­மான நோய்த்­தொற்று அறி­கு­றி­க­ளு­டன் வீட்­டி­லேயே குண­ம் அடைய விரும்­பு­வோ­ருக்­கான தொலை மருத்­து­வக் கட்­ட­ண­மும் இனி கிரு­மிப்­ப­ர­வ­லுக்கு முன்­பு இருந்த நிலைக்­குத் திருத்­தப்­படும்.

இருப்­பி­னும் வீட்­டி­லேயே குணம் அடை­யப் பரிந்­து­ரைக்­கப்­பட்­டோ­ருக்­குக் கட்­ட­ணச் சலுகை தொடர்ந்து வழங்­கப்­படும்.

தடுப்­பூசி செலுத்­திக்­கொண்ட சிங்­கப்­பூ­ரர்­கள், நிரந்­த­ர­வா­சி­கள், நீண்­ட­கால வருகை அனு­மதி அட்டை வைத்­தி­ருப்­போர் இனி அவ­சர சிகிச்­சைப் பிரி­வுக்­குச் செல்ல நேர்ந்­தால் கிரு­மிப்­ப­ர­வ­லுக்கு முன்­னர் செலுத்­திய கட்­ட­ணத்­தையே செலுத்­த­வேண்­டும். ஆனா­லும் மருத்­து­வ­ம­னை­யில் சேர்க்­கப்­பட வேண்­டும் என்று மதிப்­பி­டப்­பட்­டோ­ருக்­குத் தொடர்ந்து கட்­ட­ணச் சலுகை வழங்­கப்­படும்.

புகை­பி­டிப்­ப­தற்­கான தடை கூடு­த­லான இடங்­க­ளுக்கு நேற்று முதல் விரி­வு­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது.

பொதுப் பூங்­காக்­கள், தோட்­டங்­கள், 10 கடற்­க­ரை­கள், பொதுப் பய­னீட்­டுக் கழ­கத்­தின் துடிப்­பு­மிக்க, அழ­கான, தூய்­மை­யான நீர்­நி­லை­கள் திட்­டத்­தின்­கீழ் நிர்­வ­கிக்­கப்­படும் இடங்­கள் அனைத்­திற்­கும் இது பொருந்­தும்.

வேலை அனு­ம­திச் சீட்­டு­டன் சிங்­கப்­பூ­ரில் தங்­கி­யி­ருக்­கும் வெளி­நாட்டு ஊழி­யர்­கள் இனி வெளி­நாட்­டில் பதி­வு­செய்­யப்­பட்ட வாக­னத்தை இங்கு வைத்­தி­ருக்­கவோ பயன்­ப­டுத்­தவோ அனு­மதி இல்லை.

எல்­லை­கள் மூடப்­ப­டு­வ­தற்கு முந்­தைய விதி­க­ளின்­படி இவ்­வா­க­னங்­கள் ஒவ்­வொரு நாளும் சிங்­கப்­பூ­ருக்கு வெளியே ஆறு மணி நேரம் இருப்­பது கட்­டா­யம்.

பணி­யி­லி­ருந்து ஓய்­வு­பெ­றும் வயது 63க்கும் மறு வேலை­வாய்ப்­புக்­கான வயது வரம்பு 68க்கும் உயர்த்­தப்­பட்­டுள்­ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!