கையைக் காட்டினால் பச்சை விளக்கு எரியும்

சாலையைக் கடப்பதற்கு தற்போது பொத்தானை அழுத்தவேண்டும்.

ஆனால் கையைக் காட்டினால் பச்சை விளக்கு எரியும் நவீன முறையை இரண்டு நடைபாதையர் கடக்குமிடங்களில் நிலப் போக்குவரத்து ஆணையம் அறிமுகப்படுத்தியுள்ளது.

ஆறு மாத சோதனை திட்டத்தின் ஓர் அங்கமாக சையது ஆல்வி ரோட்டுக்கு அருகே ஜாலான் புசாரிலும் தெம்பனிஸ் ஸ்திரீட் 86ல் உள்ள வீவக புளோக் 879ஏ-க்கு அருகிலும் கை தொடாமல் செயல்படும் உணர்கருவி உள்ள பொத்தானை ஆணையம் பொருத்தியுள்ளது.

இம்மாத இறுதியில் செயின்ட் ஆண்டனி தொடக்கப்பள்ளிக்கு அருகேயுள்ள புக்கிட் பாத்தோக் ஸ்திரீட் 32, புளோக் 219க்கு அருகே உள்ள ஈசூன் ஸ்திரிட் 21 சந்திப்பில் உள்ள போக்குவரத்து விளக்கு கம்பங்களிலும் இத்தகைய பொத்தான்கள் பொருத்தப்படவுள்ளன.

தொடர்பு இல்லாத சாதனங்கள் எப்படிச் செயல்படும் என்பதைக் காட்டும் படங்களும் சோதிக்கப்படும் நான்கு போக்குவரத்து விளக்குக் கம்பங்களில் வைக்கப்படும்.

நிலப் போக்குவரத்து ஆணையத்தின் போக்குவரத்துக்கான துணை இயக்குநர் ஜெர்ரி ஹெங், முறையற்ற வகையில் மக்கள் பயன்படுத்துவதால் தற்போதைய அழுத்தும் பொத்தான்கள் பழுதடைந்து விடுவதாகத் தெரிவித்தார்.

இதனால் பச்சை விளக்கு எரிவதில்லை அல்லது பச்சை விளக்கு எரிவதற்கான சமிக்ஞையை பழுதடைந்த பொத்தான்கள் தொடர்ந்து அனுப்புகின்றன என்று அவர் குறிப்பிட்டார்.

காலப்போக்கில் பொத்தான்களுக்கு அதிக பராமரிப்புத் தேவைப்படுவதாகவும் அவர் கூறினார்.

தீவு முழுவதும் 2,400 போக்குவரத்து சந்திப்புகளில் 11,000க்கும் மேற்பட்ட பொத்தான்கள் பொருத்தப்பட்டிருப்பதால் அதிக வேலை இருக்கும் என்றும் அவர் சொன்னார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!