துவாசில் உள்ள தொழில்துறைக் கட்டடத்தில் தீ

துவாசில் உள்ள ஐந்து மாடி தொழில்துறை கட்டடத்தில் திங்கட்கிழமை (ஜூலை 4) அன்று தீப்பிடித்துக்கொண்டது.

ஊழியர்கள் மதிய உணவைச் சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது தீ அபாய அணி ஒலித்தது. உடனே கட்டடத்தில் இருந்தவர்கள் வெளியேற்றப்பட்டனர்.

சம்பவத்தில் யாருக்கும் காயம் இல்லை.

10 துவாஸ் வியூ ஸ்குவேர் என்ற முகவரியில் உள்ள அந்தக் கட்டடத்தின் மூன்றாவது மாடியில் தீ பற்றியது. தூக்கி எறியப்பட்ட தாள்களும் மின்னியல் சாதனங்களும் தீப்பிடித்துக் கொண்டன.

பிற்பகல் 12.25 மணி அளவில் சம்பவம் பற்றி தகவல் கிடைத்ததாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை கூறியது.

எல்ம்ஸ் இன்டஸ்டியல் எனும் மறுபயனீட்டு பொருள்நிர்வாக நிறுவனத்துக்குக் கட்டடம் சொந்தமானது. மின்னியல் கழிவுகளை மறுபயனீடு செய்யும் நிறுவனம் அது.

பிற்பகல் 2.30 மணியளில் செய்தியாளர் அந்த இடத்துக்குச் சென்றபோது, தீ ஏற்கெனவே அணைக்கப்பட்டு விட்டதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் கூறியது.

ஊழியர்கள் முதல், இரண்டாம் மாடிகளில் உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது அபாய அணி கேட்டதாக ஊழியர் ஒருவர் கூறினார்.

புகை ஏதும் தெரியவில்லை என்றும் ஊழியர்கள் விரைந்து கட்டடத்திலிருந்து வெளியேறியதாகவும் அவர் கூறினார்.

அந்தக் கட்டடத்தில் தீ மூண்டது இதுவே முதல் முறை என்று நிர்வாகத்தைச் சேர்ந்த ஒருவர் தெரிவித்தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!