இனம் சார்ந்த தரவுகளை வெளியிடுவதில் கவனம்

சிங்­கப்­பூர் சிறை­க் கைதிகள் எண்­ணிக்­கை­யில் சிறு­பான்மை இனத்­தவர் விகி­தம் அதி­க­மாக இருப்­ப­தாக சட்ட, உள்­துறை அமைச்­சர் கா. சண்­மு­கம் நேற்று நாடா­ளு­மன்­றத்­தில் தெரி­வித்­தார்.

அது­மட்­டு­மல்­லாது குற்­ற­வி­யல் புள்­ளி­வி­வ­ரங்­க­ளி­லும் அவர்­க­ளது எண்­ணிக்கை அதி­க­மாக இருப்­ப­தாக அவர் கூறி­னார்.

இந்­நி­லை­யில் சிறை­ கைதிகள், குற்­றச் செயல்­களில் ஈடு­ப­டு­வோர் எண்­ணிக்­கை­யில் இன­ரீ­தி­யான தர­வு­களை வெளி­யி­டு­வ­தில் அர­சாங்­கம் மிகுந்த கவ­ன­த்துடனும் எச்­ச­ரிக்­கை­யு­ட­னும் நடந்­து­கொள்­வ­தாக திரு சண்­மு­கம் தெரி­வித்­தார். அவ்­வாறு இல்­லா­வி­டில் குறிப்­பிட்ட இனங்­கள் பற்­றிய தவ­றான புரி­தல் மேலும் மோச­ம­டை­யக்­கூ­டும் என்­றார் அவர்.

குறிப்­பிட்ட சில தர­வு­களை வெளி­யிட்­டால் அது சமூ­கத்­தை­யும் சமு­தா­யத்­தை­யும் பெரு­ம­ள­வில் பாதிக்­கக்­கூ­டும் என்று அவர் கூறி­னார். சிறை­ கைதிகள், குற்­ற­வாளி­கள் ஆகி­யோ­ரின் எண்­ணிக்கையை இன­ரீ­தி­யாக வெளி­யி­டா­த­தற்­கான கார­ணத்தை ஹாலந்து-புக்­கிட் தீமா குழுத் தொகுதி நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் திரு கிறிஸ்­ட­ஃபர் டி சூசா கேள்வி எழுப்­பி­னார். அதற்கு விளக்­க­ம­ளிக்­கும் வண்­ணம் அமைச்­சர் சண்­மு­கத்­தின் உரை அமைந்­தது.

குறிப்­பிட்ட இனத்­த­வர்­கள் இப்­படித்­தான் நடந்­து­கொள்­வார்­கள் என்ற தவ­றான புரி­தல் ஏற்­கெ­னவே சமூ­கத்­தில் இருப்­போ­ரில் சில­ரி­டையே இருப்­ப­தால், சிறை­ கைதிகள் மற்­றும் குற்­ற­வா­ளி­க­ளின் எண்­ணிக்­கையை இன­ரீ­தி­யாக வெளி­யிட்­டால் நிலைமை மோச­ம­டை­யும் என்­றார் அமைச்சர். அவ்­வாறு நேர்ந்­தால் சிங்­கப்­பூ­ரில் உள்ள பல இனத்­த­வர்­கள் நல்­லி­ணக்­கத்­து­டன் வாழ மேற்­கொள்­ளப்­படும் முயற்­சி­கள் அனைத்­தும் பாழா­கி­வி­டும் என்­றார் அவர்.

சிங்­கப்­பூ­ரின் மலாய் மற்­றும் இந்­திய சமூ­கங்­கள் கடந்த பத்­தாண்டு­களில் கல்­வி­யி­லும் எழுத்­த­றி­வி­லும் மேம்­பட்­டி­ருப்­பதை திரு சண்­மு­கம் சுட்­டி­னார். மலாய் இனத்­த­வர்­கள் கல்­வி­யில் அதி­கம் மேம்­பட்­டி­ருப்­ப­தாக அமைச்­சர் கூறி­னார்.

மலாய் பட்­ட­தா­ரி­க­ளின் எண்­ணிக்கை இரு­ம­டங்கு உயர்ந்­தி­ருப்­ப­தாக அவர் தெரி­வித்­தார். நிபு­ணர்­கள், மேலா­ளர்­கள், நிர்­வா­கி­கள், தொழில்­நுட்­பர்­கள் வேலைகளில் பணி­பு­ரி­யும் மலாய்க்­கா­ரர்­க­ளின் எண்­ணிக்­கை­யும் அதி­க­ரித்­தி­ருப்­ப­தா­க­வும் அவர் கூறி­னார்.

2020ஆம் ஆண்­டில் 25 வய­தும் அதற்­கும் மேற்­பட்ட மலாய் பட்­டக்­கல்வி மாண­வர்­க­ளின் விகி­தம் 10.8 விழுக்­கா­டாக இருந்­த­தாக கடந்த ஆண்டு வெளி­யி­டப்­பட்ட தர­வு­கள் காட்­டு­கின்­றன. 2010ஆம் ஆண்­டில் இந்த விகி­தம் 5.5 விழுக்­கா­டாக இருந்­தது.

2010ஆம் ஆண்­டில் நிபு­ணர்­கள், மேலா­ளர்­கள், நிர்­வா­கி­கள், தொழில்­நுட்­பர்­கள் வேலைகளில் பணி­புரிந்த மலாய்க்­கா­ரர்­க­ளின் விகி­தம் 28 விழுக்­கா­டாக இருந்­தது. 2020ஆம் ஆண்­டில் இது 39 விழுக்­கா­டாக உயர்ந்­த­தா­கத் தெரி­விக்­கப்­பட்­டது.

சிறை­ கைதிகள், குற்­ற­வா­ளி­கள் ஆகி­யோர் தொடர்­பான புள்­ளி­வி­வ­ரங்­களை இன­ரீ­தி­யாக வெளி­யி­டு­வது குறித்து பல்­வேறு அமைப்­பு­களி­ட­மும் சமூ­கத் தலை­வர்­க­ளி­ட­மும் அர­சாங்­கம் கலந்­து­ரை­யாடி ஆலோ­சனை பெற்­ற­தாக திரு சண்­மு­கம் கூறி­னார்.

இத்­த­கைய தர­வு­களை வெளி­யி­டு­வ­தன் மூலம் சமூ­கத்­துக்கு எவ்­வித பல­னும் இல்லை என அவர்­கள் அனை­வ­ரும் ஏக­ம­ன­தா­கக் கருத்­து­ரைத்­த­தாக அமைச்­சர்

சண்­மு­கம் தெரி­வித்­தார்.

அந்­தந்த சமூ­கத்­தி­னர்­ அடைந்­துள்ள மேம்­பா­டு­களை இது புறந்­தள்­ளி­வி­டும் என்று சமூ­கத் தலை­வர்கள் அச்­சம் தெரி­வித்­தாக திரு சண்­மு­கம் கூறி­னார்.

"சிறை­க் கைதிகள், குற்­ற­வா­ளி­கள் ஆகி­யோர் தொடர்­பான இன­ரீ­தி­யி­லான புள்­ளி­வி­வ­ரங்­களை பொது­மக்­க­ளி­டம் வெளி­யி­டா­மல் சமூ­கத் தலை­வர்­கள், அமைப்­பு­களு­டன் மட்­டுமே அவற்­றைத் தொடர்ந்து பகிர்ந்­து­கொள்ள வேண்­டும் என்று ஒரு­ம­ன­தாக அனை­வ­ரும் கூறி­னர். அர­சாங்­கத்­து­டன் சமூ­கத் தலை­வர்­களும் இணைந்து இந்த முடிவை எடுத்­துள்­ள­னர்," என்று திரு சண்­மு­கம் தெரி­வித்­தார்.

போதைப்­பொ­ருள் புழக்­கத்தை மலாய்ச் சமூ­கம் எதிர்­கொள்ள 'டாடா இத்து ஹராம்' எனும் தேசிய போதைப்­பொ­ருள் இயக்­கம், மலாய்/முஸ்­லிம் அமைப்­பு­க­ளின் மறு­வாழ்­வுக் கட்­ட­மைப்பு போன்­றவற்­று­டன் அர­சாங்­கம் இணைந்து செயல்­படு­வ­தாக திரு சண்­மு­கம் தெரி­வித்­தார். இந்­தப் பங்­கா­ளித்­து­வம் ஆக்­க­பூர்­வ­மான விளை­வு­களை ஏற்­ப­டுத்­தி­இருப்­ப­தாக அவர் கூறி­னார்.

குறிப்­பிட்ட சில சூழல்­களில் மட்­டும் இன­ரீ­தி­யான தர­வு­களை வெளி­யி­டும் அணு­கு­முறை தொட­ரும் என்று அமைச்­சர் சண்­மு­கம் தமது உரையில் விளக்கிக் கூறினார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!