சண்முகம்: சிங்கப்பூர் சிறைச்சாலை வசதிகள் ஏற்றுக்கொள்ளத்தக்கவை

சிங்­கப்­பூர் சிறைச்­சா­லை­யின் வசதி­கள் மதிப்­பி­டப்­பட்டு, அவை கைதி­களின் தேவைக்கு ஈடு­கொ­டுக்­கும் வகை­யில் ஏற்­றுக்­கொள்­ளத்­தக்­க­வை­யாக உள்­ளன என்று

சட்ட, உள்­துறை அமைச்­சர்

கா. சண்­மு­கம் தெரி­வித்­துள்­ளார்.

சிறைச்­சாலை வச­தி­கள், மறு­வாழ்வு ஆகி­யவை தொடர்­பில் நேற்று அமைச்­சர்­நிலை அறிக்­கையை வெளி­யிட்டுப் பேசினார் திரு சண்­மு­கம். இவ்­வாண்டு முற்­ப­கு­தி­யில் சேனல் நியூஸ் ஏஷியா ஒளி­வ­ழி­யில் ஒளி­ப­ரப்­பான 'இன்­சைட் மேக்­சி­மம் செக்­யூ­ரிட்டி' எனும் தலைப்­பி­லான விளக்­கப் படத்­தின் தொடர்­பில் சிறைச்­சா­லை­யில் உள்ள வச­தி­கள் குறித்­தும் அவை மேம்­படுத்­தப்ட வேண்­டுமா என்­றும் பலர் எழுப்­பிய கேள்­வி­க­ளுக்­குப் பதி­ல­ளிக்­கும் வகை­யில் அவ­ரது அமைச்­சர்­நிலை அறிக்கை அமைந்

­தி­ருந்­தது.

சிங்­கப்­பூர் சிறைச்­சா­லை­களில் கைதி­கள் நிரம்பி வழி­கின்­ற­னர், அவர்­கள் சிறை அறைக்­குள் அதிக நேரம் வைக்­கப்­ப­டு­கின்­ற­னர், அவர் கள் வைக்­கோல் பாய்­களில்

தூங்­கு­கின்­ற­னர் என்று பொது­வாக கேள்­வி­கள் எழுப்­பப்­பட்­டன.

சிங்­கப்­பூ­ரில் சிறைச்­சா­லை­யின் விதி­மு­றை­கள் கடு­மை­யா­னவை. அதன் பாது­காப்­பி­லும் கண்­கா­ணிப்­பி­லும் அதிக முக்­கி­யத்­து­வம் அளிக்­கப்­ப­டு­கிறது. சிறை அதி­கா­ரி­

க­ளுக்கு அங்கு நடப்­பவை பற்றி நன்கு தெரி­யும்.

"சில வேளை­களில் கைதி­கள் தங்­களை தாங்­களே காயப்­ப­டுத்­திக்­கொள்­வது, தடை செய்­யப்­பட்ட பொருள்­களை மறைத்து வைத்­தி­ருப்­பது, பாது­காப்பு நிலை­மைக்­குப் பங்­கம் விளை­விப்­பது போன்­ற­வற்­றைக் கார­ணங்­க­ளாக சொல்­ல­லாம்," என்­றார் அமைச்­சர்.

"எங்­கள் மதிப்­பீட்­டின்­படி, சிறைச்­சாலை வச­தி­கள் ஏற்­றுக்­கொள்­ளத்­தக்­க­தா­க­வும் நமது கொள்கை

யுடன் ஒத்­துப்­போ­வ­தா­க­வும் இருப்­ப­து­டன், சிறைக் கைதி­க­ளின் அத்­தி­யா­வ­சிய தேவை­களும் ஈடு­செய்­யப்­ப­டு­கின்­றன.

"மேலும் அர­சாங்­கத்­தின் தர­நிலை மற்­றும் மதிப்­பீட்­டின்­படி, சிங்­கப்­பூர் சிறைச்­சா­லை­களில் கைதி­கள் எண்­ணிக்கை நிரம்பி வழி­வ­தாக இல்லை. எங்­கள் சிறைச்­சா­லை­களில் 70% அள­வில்­தான் கைதி­கள் உள்­ள­னர்," என்­றும் திரு சண்­மு­கம் விளக்­கி­னார்.

சிறை அறை­யில் உள்ள

வச­தி­கள் பற்றி விளக்­கிய அமைச்­சர், "எல்லா அறை­களில் கழி­வறை வச­தி­கள் உண்டு. ஆனால், மின்­வி­சிறி இல்லை. மாறாக, இயற்­கை­யான காற்­றோட்­டம் உண்டு. சுவ­ரில் அல்­லது கூரை­யில் பொருத்­தப்­படும் மின்­வி­சி­றி­க­ளால் பாது­காப்­புப் பிரச்­சி­னை­கள் வரக்­கூ­டும். அவற்­றைப் பயன்­ப­டுத்தி கைதி­கள் தங்­கள் உயிரை மாய்த்­துக்­கொள்ள நேரி­ட­லாம் அல்­லது அவற்­றைக் கழற்றி அதன் பாகங்­களை ஆயு­தங்­க­ளா­கப் பயன்­ப­டுத்­த­லாம்," என்­றார்.

கைதி­கள் படுக்­கை­க­ளுக்­குப் பதில் வைக்­கோல் பாய்­களில் இரண்டு போர்­வை­க­ளு­டன் தூங்­கு­கின்­ற­னர். முதிய வயது அல்­லது நட­மாட்ட பிரச்­சினை உள்­ள­வர்­க­ளுக்கு மட்­டும் படுக்கை கொடுக்­கப்­ப­டு­கிறது. கைதி­க­ளுக்கு மூன்று வேளை உணவு அவ­ர­வர் தேவைக்­கேற்ப வழங்­கப்­ப­டு­கிறது என்று அமைச்­சர் விவ­ரித்­தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!