துவாஸ் தொழிற்சாலை கட்டடத்தில் தீ விபத்து

துவா­சில் உள்ள ஐந்து மாடி தொழிற்­சாலை கட்­ட­டத்­தில் நேற்று தீ வி­பத்து ஏற்­பட்­டது.

ஊழி­யர்­கள் மதிய உண­வைச் சாப்­பிட்­டுக்­கொண்­டி­ருந்­த­போது தீ அபாய ஒலி ஒலித்­தது. உடனே கட்­ட­டத்­தில் இருந்­த­வர்­கள் வெளி­யேற்­றப்­பட்­ட­னர்.

சம்­ப­வத்­தில் யாருக்­கும் காயம் இல்லை.

எண் 10 துவாஸ் வியூ ஸ்கு­வேர் என்ற முக­வ­ரி­யில் உள்ள அந்­தக் கட்­ட­டத்­தின் மூன்­றா­வது மாடி­யில் தீ பற்­றி­யது.

தூக்கி எறி­யப்­பட்ட தாள்­களும் மின்­னி­யல் சாத­னங்­களும் தீப்­பி­டித்­துக் கொண்­டன.

பிற்­ப­கல் 12.25 மணி அள­வில் சம்­ப­வம் பற்றி தக­வல் கிடைத்­த­தாக சிங்­கப்­பூர் குடி­மைத் தற்­காப்­புப் படை கூறி­யது.

எல்ம்ஸ் இன்­டஸ்ட்­ரி­யல் எனும் மறு­ப­ய­னீட்டு, பொருள் நிர்­வாக நிறுவனத்துக்குச் சொந்தமான கட்டடம் அது. மேலும் அது மின்னியல் கழிவுகளை மறுபயனீடு செய்கிறது.

பிற்­ப­கல் 2.30 மணி­ய­ளவில் ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்­தி­யா­ளர் அந்த இடத்­துக்­குச் சென்­ற­போது, தீ ஏற்­கெ­னவே அணைக்­கப்­பட்­டு­விட்­டது.

ஊழி­யர்­கள் முதலாம், இரண்­டாம் மாடி­களில் உணவு சாப்­பிட்டுக் கொண்­டி­ருந்­த­போது அபாய ஒலிச் சத்­தம் கேட்­ட­தாக ஊழி­யர் ஒரு­வர் கூறி­னார்.

புகை ஏதும் தெரி­ய­வில்லை என்­றும் ஊழி­யர்­கள் விரைந்து கட்­ட­டத்­தி­லி­ருந்து வெளி­யே­றி­ய­தா­க­வும் அவர் கூறி­னார்.

அந்­தக் கட்­ட­டத்­தில் தீ மூண்­டது இதுவே முதல்­முறை என்று நிர்­வா­கத்­தைச் சேர்ந்த ஒரு­வர் தெரி­வித்­தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!