புக்கிட் பாஞ்சாங் தீயில் நான்கு வாகனங்கள் சேதம்; காயமுற்ற ஆடவர் மருத்துவமனையில்

புக்­கிட் பாஞ்­சாங்­கில் உள்ள புளோக் 216 பெட்­டிர் ரோடு அருகே உள்ள கார் நிறுத்­து­ம் இடத்­தில் ஒரு கார் தீப்­பி­டித்­துக்­கொண்­ட­தில் ஆட­வர் ஒரு­வர் காய­ம­டைந்­தார்.

நேற்று முன்­தி­னம் அதி­காலை­யில் இச்­சம்­ப­வம் நடந்­தது. தூங்கிக்­கொண்­டி­ருந்த சிலர், கீழே இறங்கி என்ன நடக்­கிறது என்று பார்க்க வந்­து­விட்­ட­னர்.

புளோக் 216ன் இரண்­டாம் மாடி­யில் வசித்த திரு­வாட்டி காசிடா யூசோஃப், அவர்­களில் ஒரு­வர்.

"சன்­னல் முழு­வ­தும் தீப்பிழம்புகள் தெரிந்­தன. தீயின் வெப்­பத்தை என்­னால் உணர முடிந்­தது," என்­றார் அவர்.

அவர் கீழே சென்­ற­போது ஆரஞ்சு தீப்பிழம்புகள் காரைச் சூழ்ந்­தன. தீப்­பி­ழம்­பு­கள் தங்­கள் மீது பட்­டு­வி­டுமோ என்ற பயத்­தில் பல­ரும் தூரத்­தில் நின்­ற­னர்.

ஆனால், சிங்­கப்­பூர் குடி­மைத் தற்­காப்­புப் படை ஏற்­கெ­னவே அங்கு வந்­து­விட்­டது. அதி­காலை நான்கு மணி­ய­ள­வில் சம்­ப­வம் பற்றி அதற்கு தக­வல் கிடைத்­தது.

குப்­பு­றக் கிடந்த காய­முற்ற ஆட­வர் வலி­யால் துடிக்க, குடி­மைத் தற்­காப்­புப் படை­யி­னர் அவ­ருக்கு மருத்­துவ உதவி செய்­த­னர்.

அவர் காரின் ஓட்­டு­நர் என்று நம்­பப்­ப­டு­வ­தாக ஷின் மின் செய்­தித்­தாள் கூறி­யது. காரின் விசையை முடுக்­கி­விட்­ட­போ­தும் கார் செயல்­ப­டத் தொடங்­க­வில்லை. அப்­போது அது திடீ­ரென்று தீப்­பிடித்­துக் கொண்­ட­தாக ஷின் மின் கூறி­யது.

தீச்­சம்­ப­வத்­தில் அரு­கில் இருந்த இரண்டு கார்­களும் ஒரு வேனும் கடு­மை­யாக சேதம் அடைந்­தன.

நான்கு காற்­ற­ழுத்த நுரை தெளிப்­பான்­க­ளைக் கொண்டு தீ அணைக்­கப்­பட்­ட­தாக குடி­மைத் தற்­காப்­புப் படைப் பேச்­சா­ளர் கூறி­னார். காயம் அடைந்த ஆட­வர் சிங்­கப்­பூர் பொது மருத்­து­வ­ம­னைக்­குக் கொண்­டு­செல்­லப்­பட்­டார். தீ விபத்துக்கான கார­ணம் பற்றி விசா­ரிக்­கப்­பட்டு வரு­கிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!