வழக்கத்தைவிட மளமளவென அதிகரித்த விற்பனை

சிங்­கப்­பூ­ரில் சில்­லறை வர்த்­தக விற்­ப­னை­ கடந்த மே மாதம் வழக்­கத்­தை­விட வேக­மாக அதி­

க­ரித்­தது. ஓராண்­டுக்கு முன்பு

சில்­லறை வர்த்­த­கம் வெகு­வா­கப் பாதிக்­கப்­பட்டு மிகக் குறை­வான விற்­ப­னை­கள் பதி­வா­ன­தும் இதற்கு முக்­கிய கார­ணம்.

இந்­நி­லை­யில், கொவிட்-19 தொடர்­பான கட்­டுப்­பா­டு­கள் தளர்த்­தப்­பட்­டதை அடுத்து, சிங்­கப்­

பூ­ருக்கு வரும் சுற்­றுப்­ப­ய­ணி­க­ளால் உள்­ளூர் சில்­லறை வர்த்­த­கம் பலன் அடைந்­துள்­ளது. ஆண்­டுக்கு ஆண்டு அடிப்­ப­டை­யில் சில்­லறை வர்த்­த­கம் 17.8 விழுக்­காடு உயர்ந்­தது. கடந்த ஏப்­ரல் மாதம் பதி­வான 12.1 விழுக்­காடு வளர்ச்­சி­யை­விட இது அதி­கம். இந்­தத் தக­வல்­களை புள்­ளி­வி­வ­ரத்­துறை நேற்று வெளி­யிட்­டது.

புளூம்­பர்க் நிறு­வ­னம் நடத்­திய ஆய்­வில் பங்­கெ­டுத்த பொரு­ளி­யல் நிபு­ணர்­கள், சிங்­கப்­பூ­ரில் சில்­லறை வர்த்­தக விற்­ப­னை­ 13.4 விழுக்­காடு ஏற்­றம் காணும் என்று

முன்­னு­ரைத்­தி­ருந்­த­னர்.

ஆனால் அவர்­கள் முன்­னு­ரைத்­த­தை­விட கூடு­தல் விற்­ப­னை­

பதி­வா­கி­யுள்­ளது.

வாக­னங்­க­ளின் விற்­ப­னை­யைச் சேர்த்­துக்­கொள்­ளா­வி­டில் விற்­பனை விகி­தம் இன்­னும் அதி­க­மா­கப் (22.6 விழுக்­காடு) பதி­வாகி இருப்­ப­

தா­கத் தெரி­விக்­கப்­பட்­டது.

இந்த வளர்ச்சி தொட­ரும் என்று நிபு­ணர்­கள் எதிர்­பார்க்­கின்­ற­னர். ஆனால் விலை­வாசி அதி­க­ரிப்­

பா­லும் பண­வீக்­கத்­தா­லும் வளர்ச்சி மித­ம­டை­யும் சாத்­தி­யம் இருப்­ப­

தா­கக் கூறப்­ப­டு­கிறது.

"சில்­லறை வர்த்­த­கத்­தின் வளர்ச்சி இவ்­வாண்­டின் மூன்­றாம் காலாண்­டி­லும் தொட­ரும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது. கொவிட்-19 அச்­சத்­தி­லி­ருந்து ஆசிய நாடு­கள் மீண்­டு­வ­ரு­வது இதற்கு முக்­கிய கார­ணம். சிங்­கப்­பூர் உட்­பட, ஆசிய நாடு­களில் சுற்­றுப்­ப­ய­ணி­க­ளின் எண்­ணிக்கை அதி­க­ரித்­துள்­ளது," என்று ஆர்­எச்பி வங்­கி­யைச் சேர்ந்த மூத்த பொரு­ளி­யல் நிபு­ணர் பார்­ன­பஸ் கான் தெரி­வித்­தார். இதற்­கி­டையே, பண­வீக்­கம் அதி­க­ரித்­தி­ருப்­ப­தா­லும் வீட்­டுக் கடன் வட்டி விகி­தம் ஏற்­றம் கண்­டி­ருப்­ப­தா­லும் செலவு செய்­வது குறித்து சிலர் ஒன்­றுக்­குப் பல­முறை யோசிக்­கக்­கூ­டும் என்று மேபேங்க் கிம் எங்­கைச் சேர்ந்த பொரு­ளி­யல் நிபு­ணர் லீ ஜு யீ தெரி­வித்­தார்.

"குறிப்­பாக கைக்­க­டி­கா­ரம், நகை­கள், பொழு­து­போக்கு தொடர்­பான பொருள்­கள் போன்ற அத்தி யாவசியமற்ற பொருள்களின் விற்­பனை ஆக அதி­க­மா­கப் பாதிப்

­ப­டை­யக்­கூ­டும்," என்று திரு­வாட்டி லீ கூறி­னார். குறைந்த விலையில் விற்கப்படும் பொருள்கள் வாடிக்கையாளர்களை ஈர்க்கக்கூடும் என்றார் என்யுஎஸ் வர்த்தகத்துறை பேராசிரியர் லாரன்ஸ் லோ.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!