இன்னொருவரின் காதலியை வன்புணர்வு செய்த இந்திய ஆடவரின் சிறைத்தண்டனை குறைக்கப்பட்டது

தன் காதலிக்குத் தெரியாமல் மூன்று பேராக பாலியல் உறவில் ஈடுபட ஆடவர் ஒருவர் கொடுத்த அழைப்பை ஏற்றுக்கொண்ட வேறொரு ஆடவர் அந்தப் பெண்ணைப் பாலியல் வன்புணர்வு செய்தார்.

மேல்முறையீட்டுக்குப் பிறகு 26 வயது ஸ்ரீஹரி மகேந்திரனுக்கு விதிக்கப்படட சிறைத்தண்டனை பதினாறரை ஆண்டுகளாகக் குறைக்கப்பட்டுள்ளது.

கடந்த 2020ஆம் ஆண்டு பாலியல் வன்புணர்வு, வேறுசில பாலியல் குற்றங்கள் ஆகியவற்றின் தொடர்பில் ஸ்ரீஹரிக்கு 17 ஆண்டுகள் 10 மாதச் சிறைத் தண்டனையும் 14 பிரம்படிகளும் விதிக்கப்பட்டன.

திட்டம் தீட்டியவருக்கு வழங்கப்பட்ட தண்டனை அக்குற்றத்தில் அவர் வகித்த பங்கை ஏற்ப இருந்தது.

ஆனால் ஸ்ரீஹரிக்கு வழங்கப்பட்ட தண்டனை, குற்றத்தில் அவர் வகித்த பங்குக்கு ஏற்ப இல்லை என்று அவரது வழக்கறிஞர் வாதிட்டார்.

அந்த வழக்கை தலைமை நீதிபதி சுந்தரேஷ் மேனனின் தலைமையில் மேல்முறையீட்டு நீதிமன்றம் விசாரித்தது.

ஸ்ரீஹரிக்கு கீழ்நீதிமன்றம் விதித்த தண்டனை குறையற்றது என்று மூன்று மேல்முறையீட்டு நீதிபதிகளும் தெளிவுபடுத்தினர்.

ஆனால் ஸ்ரீஹரிக்கும் குற்றத்துக்கு அதிகப் பொறுப்பு வகித்த மற்ற குற்றவாளிக்கும் விதிக்கப்பட்ட சிறைத்தண்டனையில் போதுமான வேறுபாடு இல்லை என்று அவர்கள் கூறினர்.

ஸ்ரீஹரிக்கு விதிக்கப்பட்ட சிறைத்தண்டனை குறைக்கப்பட்டபோதும் பிரம்படிகள் குறைக்கப்படவில்லை.

30 வயது முன்னாள் துணை காவல் அதிகாரி, தன் காதலியுடன் இன்னோர் ஆடவர் பாலியல் உணவில் ஈடுபடுவதைப் பார்க்க விரும்பினார்.

கடந்த 2016ஆம் ஆண்டு இரண்டு வெவ்வேறு சம்பவங்களில் அந்தப் பெண்ணை ஸ்ரீஹரி பாலியல் வன்புணர்வு செய்வதற்கு துணை போனதற்காக, அவருக்கு 19 ஆண்டுகள், 11 மாதங்கள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டிருந்தது. மேலும், அவருக்கு 24 பிரம்படிகளும் விதிக்கப்பட்டது.

தற்போது அவர் சிறையில் உள்ளார்.

பாதிக்கப்பட்ட பெண்ணின் அடையாளத்தைப் பாதுகாப்பதற்காக, திட்டம் தீட்டியவரின் பெயரை வெளியிடத் தடையுள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!